பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்குமா?
அவன் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறான்.அதற்காக புத்தகம் வாங்கி படித்துக்கொண்டிருந்தான்.இன்னும் தேர்வுக்கு ஒருமாதம் தான் இருக்கிறது.புத்தகத்தில் வாங்கிய கடையின் பெயர் அச்சிடப்பட்டிருந்த்தை பார்த்தவுடன் நண்பன் முகம் நினைவுக்கு வந்த்து.அவன் தான் இந்த புத்தகத்தை வாங்கச் சொன்னான்.அப்போது, ” பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்டா! ‘ ’ என்று சொன்னதும் அவன் தான். அவன் புத்தகத்தை படிப்பதை நிறுத்திவிட்டு எதையோ உற்றுப்பார்த்தான்.அவனுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு ஏற்பட்ட்து.முகம் மாறியது.தனது தாய் தந்தை மீது வெறுப்பு வந்த்து.இவர்களுக்குப்போய் ஏன் மகனாக பிறக்கவேண்டும்.பிறகு தன் மீதும் ஆத்திரம் ” பன்னிரெண்டாம் வகுப்பில் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால் டாக்டராகவோ...