மற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா?

                                 பாலிடெக்னிக் ஒன்றில் விழாவுக்கு போயிருந்தேன்.பார்வையாளராகத்தான்.நண்பர் அக்கல்லூரியின் முதல்வர் என்பதால் அழைத்திருந்தார்.ஒரு பெரிய மனிதர் பேசிக்கொண்டிருந்தார்.எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க்க்கூடாது! பெண்கள் தான் அப்படி இருப்பார்கள்.’’மாணவர்களுக்கு அறிவுரைகள் தந்தவாறு இருந்தார்.

                                  பெண்கள்தான் மற்றவரை குற்றம் சாட்டுவார்களா? ஆண்கள் குற்றம் சாட்டமாட்டார்களா? தனது தவறுகளுக்கும்,தோல்விக்கும் தன்னை விடுத்து இன்னொருவர் மீது பழி போடுவது மனிதர்களுக்கு பழக்கமான விஷயம்தான்.தான் மிகச்சிறந்தவன்,அதி புத்திசாலி ,எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை! அடுத்தவர்கள்தான் காரணம் என்பவர்களை பார்த்திருக்கிறோம்.



                                  ஒரு பெண் தீவிரமாக காதலித்து வந்தார்.பையன் வெளியூரில் இருந்தான்.அடிக்கடி ஏதோ ஒரு பிளாக்மெயில்.இந்த மாத்த்துக்குள் கல்யாணம் செய்யாவிட்டால் எனக்கு வேறொருவருடன் நிச்சயமாகிவிடும் என்பார்.தோழி ஒருவரை விட்டு அவளுக்கு உன்னை பிடிக்கவில்லையாம் மறந்து விடுங்கள் என்றிருக்கிறார்.அப்புறம் அந்த காதல் தோல்வியடைந்து விட்ட்து.அப்பெண் தோழியை பார்த்து சொன்னது “எல்லாம் உன்னால்தான்!

                              இருத்தைந்து வயது பையனுக்கும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கும் கள்ளக்காதல்.பெண்ணின் மகனுக்கு விஷயம் தெரியவே வீட்டில் சண்டை.கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவமனைக்கு சென்று காதலன் பார்த்தவுடன் அப்பெண் சொன்னதுஎல்லாம் உன்னால்தான்

                             கல்யாணமான பின்னர் கணவன் புதியதாக தொழில் தொடங்கினார்.கொஞ்சமாக குடிக்கும் பழக்கம்.ஒவ்வொரு ஆர்டருக்கும் நண்பர்களுக்கு பார்ட்டி.சந்தோஷத்தை கொண்டாட வேண்டுமில்லையா? சில மாதங்களிலேயே தொழில் படுத்துவிட்ட்து.கணவன் மனைவியை பார்த்து சொன்னதுஎல்லாம் உன்னால்தான்!

                              ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.தோல்வியோ தவறோ நிகழ்ந்து விட்டால் மனம் தப்பித்துக்கொள்கிறது.என்னால் இல்லை.அடுத்தவர்தான் காரணம் என்று.முதலில் காதலில் தோற்ற பெண்ணின் மோசமான அணுகுமுறையே தோல்விக்கு காரணம்.அவர் சொல்லித்தான் தோழி போன் செய்தார்.

                              இரண்டாவதான கள்ளக்காதலில் பையனை குறை சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை.அப்பெண்ணுக்கு திருமணமான மகன் இருக்கிறான்.கணவனின் தொழில் நஷ்டமடைய காரணம் திறமையின்மையும்,முறையற்ற பழக்கங்களும்தான்.இன்னும் சிலர் நீ வந்த நேரம்தான் இப்படி ஆகிவிட்ட்து என்பார்கள்.இதைப்போல மனித்த் தன்மையற்ற செயல் வேறில்லை.

                               ஒழுக்கம் சாராத ஆளுமை(personality) கொண்டவர்கள் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வது அதிகம்.குடிக்கு அடிமையானவனை கேட்டுப்பாருங்கள்.தவறு செய்பவனை கேட்டுப்பாருங்கள்.எதையாவது,யாரையாவது குறை சொல்வார்கள்.இப்படிப்பட்டவர்கள் முன்னேறுவது கஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

                                  இன்னொருவரை குற்றம் சாட்டுவது ஒரு தோல்விக்குள்ள நிஜமான காரணத்தை கண்டறியும் முயற்சியில் தடை உண்டாக்கும்.நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியாது.

                                  முதல் பத்திக்கு வருவோம்.அந்த பெரிய மனிதர் ஏன் அப்படி சொன்னார்? அவர் காலத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிகம் வெளி விவகாரங்களீல் ஈடுபடுவதில்லை.இப்போதும் குறைவுதான்.சம்பாதிப்பது,முடிவெடுப்பது எல்லாமும் ஆணிடம் இருந்தன.அவர்கள் ஆண்களை குற்றம் சொல்லாமல் யாரை சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில் இருந்து பேசியிருக்கவேண்டும்.உண்மையில் இது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஒன்றுதான்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்