காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

                            மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.

                             காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100  பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.

                             பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்  புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

                               புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள் அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.

                                 பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம் இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும் அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

                                 காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ் தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது நல்லதல்ல.

                                 அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம் கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள் முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும் வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்