படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

                                  அவன் போதையில் இருந்தான்.சுற்றி ஒரு கூட்டம்.பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பாக்கெட்டை பிரித்து நாக்குக்குக்கீழே வைத்துக்கொண்டான்.இவருக்குக் கீழே முப்பதுபேர் வேலை செய்கிறார்கள்என்றார் அறிமுகப்படுத்தியவர்.கை குலுக்க நீட்டியபோது எனக்கு தயக்கமாக இருந்த்து.வேறு வழியில்லாமல் கை குலுக்கிய பின் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.மூன்று பட்டங்களும்,மூன்று பட்டயங்களும்(diplamo) அவனது பெயரின் பின்னால் இருந்தன.

                                                                                          செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.மிஸ்டுகால் கொடுத்தா கூப்பிட மாட்டாளா அவ!? அவ எப்படி வேல செய்றான்னு பார்க்கறன்” “ விடாதீங்க பாஸ்’’ என்றார்கள் உடன் இருந்தவர்கள்.சரி நீங்க கிளம்புங்கஎன்று சற்று தூரம் நகர்ந்து போனார்கள்.அறிமுகப்படுத்திய நண்பர் அவனைப்பற்றி பேச ஆரம்பித்தார்.

                                                                                 நிறைய படித்திருக்கிறான் என்று சொல்லி வேலை கொடுத்தார்கள்.எப்போதும் குடித்துவிட்டு பெண்களை கலாட்டா செய்துகொண்டு.....கொடுமை.ஒரு வேலையும் செய்யமாட்டான்.இரவு முழுக்க குடித்துக் கொண்டிருந்துவிட்டு படுத்தால் பகல் பன்னிரண்டு மணிக்கு தூங்கி எழுவான்.இது ஒரு தற்காலிக பணி.அதனால் மேலிட்த்திலும் அதிகம் கண்டு கொள்வதில்லை.வேறு மாவட்ட்த்தில் உள்ள வீட்டுக்கும் போவதில்லை.

                                நான் மீண்டும் அந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை பார்த்தேன்.சமூக சேவைக்காக படித்திருந்தான்.மற்ற படிப்புகளும்.எதை சமூக சேவை என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்பது புரியவில்லை.பட்டங்கள் பெற்ற அவன் கற்ற கல்வி ஏன் அவனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மாற்றவில்லை?சேவை செய்வது கிடக்கட்டும்,தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் கூட உருவாக்க முடியாத கல்வியால் என்ன பயன்?

                                                                              உலகெங்கும் பொருள் சார்ந்த கலாச்சாரம் வளர்ந்த அளவுக்கு பொருளற்ற கலாச்சாரம்(Non Material culture) வளரவில்லை.புதுப்ப்து அறிவியல் கண்டு பிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்கின.மனம் மட்டும் குப்பையாக அப்படியே கிடக்கிறது.அது வளரவேயில்லை.மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.

                                மனிதனிடம் நல்ல குணங்களை உருவாக்குவதில் கல்விக்கு எந்த பங்கும் இல்லை.மனப்பாடம் செய்து பக்கங்களை நிரப்புவதும்,விடைத்தாள்களின் கனத்தை பார்த்து மதிப்பெண் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கற்பனை ஆற்றலுக்கும்,சிந்திக்கும் திறனுக்கும் இங்கே இடமில்லாமல் இருக்கிறது.

                                கல்வியாளர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது அவர் கூறியது, “ இந்தியாவில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொள்வதே இன்னும் நூறு சதவீதம் ஆக்கமுடியவில்லை.நீங்கள் சொல்வது அடுத்த கட்டம்.அடுத்தடுத்து அவையும் வரும் என்று நம்புகிறேன்.மற்ற நாடுகளை விடவும் இந்தியாவுக்கு த்த்துவம் சார்ந்த பாரம்பர்யம் அதிகம் இருக்கிறது.ஆனால் அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டிய நேரம் இது

                                தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆற்றல் பெற்ற கல்வியே நமது தேவை.மனதில் அன்பையும்,மலர்ச்சியையும் உருவாக்கும் திறன் படைத்த கல்வியை அடையாளம் காண வேண்டிய தருணம் இது.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்