சாருவும் தமிழ்ப்பெண்களும்

                                                                                          எதையாவது எழுதிக்கொண்டிருப்பவனுக்கு(!) சமகால நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்காது.அப்படித்தான் முள்வேலி உறுத்தியபோது “தமிழன் என்ற சொல் குற்ற உணர்வு தரும் சொல்லாகிவிட்ட்துஎன்று எழுதினேன்.அதற்கு தொப்பிதொப்பி போட்ட கமெண்ட் “வேண்டாம்
மீண்டும் எழுவோம் தமிழன் என்றால் உலகே அதிசயிக்கும்

                                   இன்றும் தமிழனை உலகம் அதிசயமாக பார்க்கிறது.சாரு விஷயத்தைத்தான் சொல்கிறேன்.எழுத்தாளர்கள்,அறிவு ஜீவிகள் என்றால் சமூகத்தில் இருக்கும் மதிப்பு தனி.கேரளாவில் எழுத்தாளன் தான் தன் குழந்தையின் கையைப்பிடித்து அட்சரம் எழுதக்கற்றுத்தரவேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்’’ என்கிறார்விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன்.

                                    குடிக்கும் எழுத்தாளர்கள்,புகைக்கும் எழுத்தாளர்கள் பற்றி விமர்சன்ங்கள் வந்திருக்கின்றன.ஆனால் சாருவின் விஷயம் அருவருப்பானது.வயது வித்தியாசமின்றி ஒரு இளம்பெண்ணிடம் நடந்துகொண்டுள்ள செயல் எழுத்துலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதே நிஜம்.

                                    இந்த மாதிரி விஷயங்களை பெண்கள் எப்போதும் வெளிப்படுத்த தயங்கியே வந்திருக்கிறார்கள்.உடனே திரும்பும்,அவனுடன் எதற்கு பேசினாய்?,பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருக்கவேண்டியதுதானே?உடனே நீ வீட்டுக்குள் ஓடி கதவை சாத்திக்கொள்வதுதானே? ஆண்கள் என்றால் அப்படித்தான்,கண்டும் காணாமல் போவதுதானே? இப்படியே நீளும்.

                                      சாருவுடன் சாட் செய்த பெண் பேச்சு திசைமாறுவது தெரிந்தும்,ஏதோ பிரபல எழுத்தாளர் என்று நினைத்தால் சாக்கடைத்தனமாக ஏதேதோ வருகிறது என்று தெரிந்தும் தொடர்ந்திருக்கிறார்.இது திட்டமிட்டு செய்த்துதான்.தான் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஆசாமி இல்லை என்றவுடன் அவர்களை வீழ்த்துவதற்கு ஆதாரங்களை அதிகப்படுத்தவே முயல்வார்கள்.இது பெண்களிடம் இருக்கும் குணங்களில் ஒன்று.ஒரே வித்தியாசம் வழக்கமாக நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்குவார்கள். இங்கு பதிவாக வருகிறது.

                                      ஒரு பெண் வீட்டு மனிதர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றால் இருபத்துநான்கு மணிநேரமும் காமிரா வைத்து பெற்றோர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று பொருள் அல்ல.அவர் யாருடன் பேசுகிறார்,பழகுகிறார் என்பதை கவனிப்பார்கள்.பிரபல எழுத்தாளருடன் சாட் செய்தால் அவர்கள் பெருமையாகவே நினைத்திருப்பார்கள்.

                                                                                               பாலியல் ரீதியாக பெண்களிடம் வரம்பு மீறுபவர்கள்மீது காவல்துறையில் புகார் செய்தால் இதற்கென்று ஊருக்கு ஒரு காவல்நிலையம்தான் திறக்கவேண்டும்.இன்று படித்த பெண்கள் பலருக்கும் அதற்கென உள்ள சட்டங்கள் கூட தெரியாது.இதை புதியதாக சொல்லவில்லை.என்னுடைய ஆரம்பகால பதிவுகளில் ஒன்றான “பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்’’ என்ற பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                                     ஆம் நண்பர்களே! பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்.அதிர்ந்து பேசக்கூடாது.வீட்டில் சமையல் செய்து கொண்டு,குழந்தை பெற்றுக்கொண்டு,கணவன் சாப்பிட்ட மீந்த்தை சாப்பிட்டு,பின் தூங்கி முன் எழுந்து,வாய் திறக்காமல்.................... சரிதான்.எழுந்து நின்று ஜோராக கைத்தட்டுங்கள். இந்தியா வல்லரசாகப்போகிறது.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்