Posts

Showing posts from December, 2010

செம்மொழியான தமிழ் மீது

Image
செம்மொழியான தமிழ் மீது பற்று அவனுக்கு எனக்கும்தான் ஆங்கிலத்திற்கு எதற்கு கொண்டாட்டம் என்கிறான் தமிழோ ஆங்கிலமோ வாழ்வை கொண்டாடு அந்நியனோ நம்மவனோ அடுத்தவனை நேசி நமதென்றால் நலமாகும் வாழ்வு

முகம் மாறிப்போன தமிழ் சினிமா

Image
பல தமிழ் சினிமாவை நின்றுகொண்டே பார்த்திருக்கிறேன்.உட்கார இடம் கிடைக்காது.இருக்கைகளின் அளவுக்கு தாண்டி டிக்கெட் கொடுத்து விடுவார்கள்.இரண்டரை மணி நேரமும் நின்றுகொண்டே படம் பார்க்கவேண்டும்.கீழே உட்கார நினைத்தாலும் இடம் இருக்காது.அதுவும் முதல் நாளன்று அப்படி ஒரு கூட்டம் இருக்கும். மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கவேண்டாம்.தொண்ணூறுகளின் துவக்கத்தில்கூட இந்நிலை இருந்த்து.அப்புறம் வந்த்து திருட்டு சிடி யுகம்.தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுவிட்ட்து.நூறு நாட்கள் என்பது சாதாரணமாக இருந்த நாட்கள் போய் இந்த ஆண்டு பன்னிரெண்டு படங்களே பார்த்திருக்கின்றன. சினிமா டிக்கெட்டுகளின் விலையும் இப்போது வசதியானவர்களும்,காதலர்களும் படம் பார்க்க போகும் அளவுக்கு இருக்கிறது.சாதாரணமானவர்கள் திருட்டு சிடியில் குடும்பத்தோடு பார்த்துவிடுகிறார்கள்.செலவும் குறைவு.நினைத்த நேரத்தில் அணைத்துவிடலாம். சினிமாக்களுக்கு சென்று பாதியில் எழுந்து வந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.உட்காரமுடியாத அளவுக்கு தரத்துடன் அவை இருக்கு...

அவரவர் கஷ்டம்

Image
அந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு பேசும் கருவியை உடைத்து விட்டான். கண்களில் நீர் கைகளில் நடுக்கம் சுய நினைவின்றி புகைத்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது? ஏன் கேட்கிறீர்கள்? யாருடைய கண்ணீரையாவது துடைக்க உங்களுக்கு மனமிருந்தால் உங்கள் அருகே உங்கள் வீட்டில் உங்கள் தெருவில் அதை செய்யுங்கள். வம்புக்கு அலைய வேண்டாம். அவரவர் கஷ்டம் அவரவருக்கு.

தமிழ்மணம் போட்டியில் இரண்டாம் கட்ட்த்துக்கு தேர்வான கதை.

Image
கடுமையான போட்டியில்!?நான் கூட இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.சென்ற ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் பதிவுலகில் இருக்கிறேன்.எனக்கு நேரடியாக எந்த பதிவரையும் தெரியாது.(ஈரோட்டிற்கு செல்ல முடியவில்லை.)தமிழ்மணம் விருது அறிவிப்பை பார்த்தவுடன் கலந்துகொண்டால் நான்கு பேர் பார்வை படும் என்று நினைத்து பரிந்துரை செய்தேன். முதல் கட்ட வாக்கெடுப்பு துவங்கியவுடன் சில நாட்களில் மங்கை அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார். ” அருமை.வாழ்த்துக்கள். ’- என்று.ஏதேது நாம் கூட கவனிக்கப்படுகிறோம் என்று சந்தோஷமாக இருந்த்து.மீண்டும் ஒரு முறை நன்றி! மங்கை அவர்களே! தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து தொடர்பான நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றியது.ரதி,மன்மதன் கதை.யாரையும் முட்டாளாக்கும் காமத்தை கட்டுப்படுத்துவது பற்றிய நம்பிக்கை அது.இடுகைத்தலைப்பு, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காம்ம். ...

இந்தியா நற்பண்புள்ள வல்லரசாக நீங்கள் உதவலாம்.

இந்தியா வல்லரசாவது உறுதி.அதென்ன நற்பண்புள்ள வல்லரசு?பொறுமை,சகிப்புத்தன்மை, ஆபத்தில் உதவுதல்,தரமற்ற செயல்களில் ஈடுபடாதிருத்தல்,மனிதாபிமானம் போன்ற நற்பண்புகளை கொண்டிருப்பதே நற்பண்புள்ள வல்லரசு. இந்தியாவில் சுமார் எட்டு மில்லியன் குழந்தைகள் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.குழந்தைகளுக் கு "கல்விக்கான உரிமை"-என்பது இலவசமாக கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.இது குறித்த விழிப்புணர்வுக்காகவும்,நமது ஆதரவுக்காகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்(UNICEF) Awaaz Do என்னும் இயக்கத்தை துவக்கியுள்ளது . இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களது கல்விக்கான உரிமையை பெற நாம் கரம் கொடுத்து வலு சேர்ப்போம்.அறியாமையில் திளைக்கும் ஒரு நாடு வல்லரசாக முடியாது.கீழ்க்கண்ட செய்தியை நண்பர்களுடன்,தெரிந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். Hi, Recently I came across a startling fact that 8 million children in our country are denied their basic right to education. With the Right to Education Act making education free and compulsory, we must now join hands t...

வெடித்து சிதறியது ராக்கெட்தான்!

Image
வெடித்து சிதறியது ராக்கெட்தான் இந்தியனின் இதயமல்ல சோதனைகளை சாதனையாக்கும் நெஞ்சுரம் எங்களுடையது. தோல்விகளை கண்டு துவண்டதில்லை நாங்கள் மீண்டு(ம்) வருவோம் உலகை வெல்ல!

கள்ளக்காதல் இயற்கையானதா?

Image
குற்றமாக தண்டனைக்குரியதாக கருதப்பட்ட சில செயல்கள் தற்போது இயல்பானதென்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.தனி மனித உரிமைகளாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகிவிட்டது.எளிய உதாரணம்.-ஓரினச்சேர்க்கை.இதே போல பாலியல் தொடர்பான இன்னொரு பொருள் கள்ளக்காதல். சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்தது. வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில் கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காத...

பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

அமெரிக்க புற்று நோய் கழகத்தின் அறிவிக்கைப்படி, ஆண்டுதோறும் 1.3 மில்லியன் மார்பு புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது.இவற்றில் இறப்பு 465,000.இந்நோய் தொடர்ந்து அதிகரித்து கவலை தரும் ஒன்றாக மாறி வருவதை தொடர்புள்ள துறையினர் சுட்டுகிறார்கள்.ஆரம்ப காலத்தில் கண்டறிவது இழப்பைத்தடுக்கும்.அதிகம் பெண்களையே தாக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு அவசியம். அறிகுறிகள் : மார்பு இயல்புக்கு மாறாக வீங்கியிருத்தல்,வலிஆகியன தெளிவான முதல் அறிகுறி.சிவப்பு கலராக மாறியிருப்பது,காம்பில் நமைச்சல்,எரிச்சல்,புண்,போன்றவை உடனே மருத்துவரை அணுகத்தக்கவை. காரணிகள் : பெண்களின் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை,வயது (வயது அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது) ,குடும்பத்தில் ஏற்கெனெவே வரலாறு இருப்பது,பருவமடையும் வயது,மரபுக்கூறுகள் போன்றவை தீர்மானிக்கின்றன.மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றி குழந்தை பெறுவது,பாலூட்டுவதில் உள்ள நடத்தைகள் ஈஸ்ட்ராஜன் ஹார்மோனை அதிகரிக்க செய...

மூட்டைப்பூச்சியுடன் ஒரு பயண அனுபவம்

சென்னைக்கு செல்ல வேண்டும்.முந்தைய இரவிலிருந்தே தயாராகிக் கொண்டிருந்தேன்.தூங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது.அடுத்த நாள் இரவு பேருந்து ஏறினால் காலையில் சென்னை சென்று சேர்வேன்.ஓரளவு தூங்கிக்கொண்டு போகிற மாதிரி பேருந்தாக இருந்தால் நல்லது.உடன் வரும் நண்பனிடம் கூறினேன்."பணம் போனாலும் பரவாயில்லை.நல்ல பஸ்ஸாக இருந்தால் பரவாயில்லை"."முன் பதிவு தீர்ந்து போய்விட்டது".பெங்களூருவிலிருந்து நிறைய பஸ் வருகிறது.எந்த பிரச்சினையும் இல்லை. பத்து மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம்.அவன் சொன்ன மாதிரியே பல பஸ்கள் வந்து நின்றது.எந்த பஸ்சிலும் இடம் இல்லை. இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.வேலூர் போய் அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.அதற்கும் பஸ் கிடைக்கவில்லை.காஞ்சிபுரம் தாண்டி செல்லும் பேருந்து ஒன்று.வேலூர் வரை போய் விடலாம் என்று ஏறிக்கொண்டோம்.நண்பனுக்கும் எனக்கும் வேறுவேறு இடத்தில் இருக்கை. ...

ஓநாயும் வீட்டு நாயும் -பாரதி

Image
ஓநாய்:- ஹே சகோதரா,நான் உன்னைச்சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.எனக்குத் தயவு செய்து விடைகள் அளிப்பாயா? வீட்டு நாய்:-அடா ஓநாயே,நாம் நம்முடைய அந்தஸ்துக்கு குறைவான எந்த நாயோடும் சினேஹம் பாராட்டுவதில்லை.ஆயினும்,உன் மேல் நம்மையறியாமலே நமக்குப்பிரீதி ஏற்படுகிற படியால் நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல சம்மதித்தோம். ஓநாய்:-ஐயா,உம்முடைய அந்தஸ்தென்ன?நீ வசிக்கும் இடமெங்கே?இக்காட்டிற்கு வந்த காரணமென்ன?உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்கனம் ஏற்பட்டது? வீட்டுநாய்:-நாம் உக்கிரேச பாண்டியநிடத்தில் இருக்கிறோம் அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார்.நமக்கும் அவரிடத்தில் பக்தியுண்டு.நம்மை அவர் மற்றெந்த நாய்களைக்காட்டிலும் மேலாக மதித்து வருகிறார். ஓநாய்:-அண்ணா,என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?காற்றிலும் மழையிலும் வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியிருக்கிறது.பசியின் கொடுமையை சகிக்க முடியாததாய் இருக்கிறது. வீட்டுநாய்:-தம்பி,உன்னுடைய ஊழ் வினைப்பயனை நீயே அனுபவித்து தீர வேண்டும்.பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இப்பதவி கிடைத்தது. ஓநாய்:-நாயாரே,நானும் உக்கி...

சாகித்ய அகாதமி மீது ஏனிந்த காட்டம்?

சென்னை தரமணியில் இயங்கி வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தை வெளியேற்ற தமிழக அரசின் சில துறைகள் தொடர்ந்து கடிதம் அனுப்பி நெருக்கடி தருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.இது முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா என்பது தெரியவில்லை.இலக்கியம் தொடர்பான ஒரு மத்திய அரசு நிறுவனம் தமிழகத்துக்கு வேண்டாம் என்று ஏன் நினைக்கவேண்டும்?அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? சுதந்திரம் பெற்ற பின் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது சாகித்ய அகாதமி.ஞான பீட விருதுக்கு அடுத்து தேசம் தரும் உயரிய அங்கீகாரமாக சாகித்ய அகாதமி விருது கருதப்படுகிறது.சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளானபோதும் தகுதியானவர்களுக்கே கிடைத்து வந்திருக்கிறது.தமிழ் இலக்கியங்கள் மற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது .சகோதர மொழிகளின் இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. எதிரிகள் யாரோ உள்ளே நுழைந்து விட்டதைப்போல காலிசெய்!காலிசெய்...

உலகில் துயரங்கள் அதிகமாக இருப்பது ஏன்?

மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும்,நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார்?ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன்?துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா?அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது?துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா?அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா? துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" "எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார்? கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக...