பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்
அமெரிக்க புற்று நோய் கழகத்தின் அறிவிக்கைப்படி, ஆண்டுதோறும் 1.3 மில்லியன் மார்பு புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது.இவற்றில் இறப்பு 465,000.இந்நோய் தொடர்ந்து அதிகரித்து கவலை தரும் ஒன்றாக மாறி வருவதை தொடர்புள்ள துறையினர் சுட்டுகிறார்கள்.ஆரம்ப காலத்தில் கண்டறிவது இழப்பைத்தடுக்கும்.அதிகம் பெண்களையே தாக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு அவசியம்.
அறிகுறிகள்:
மார்பு இயல்புக்கு மாறாக வீங்கியிருத்தல்,வலிஆகியன தெளிவான முதல் அறிகுறி.சிவப்பு கலராக மாறியிருப்பது,காம்பில் நமைச்சல்,எரிச்சல்,புண்,போன்றவை உடனே மருத்துவரை அணுகத்தக்கவை.
காரணிகள்:
பெண்களின் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை,வயது (வயது அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது) ,குடும்பத்தில் ஏற்கெனெவே வரலாறு இருப்பது,பருவமடையும் வயது,மரபுக்கூறுகள் போன்றவை தீர்மானிக்கின்றன.மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றி குழந்தை பெறுவது,பாலூட்டுவதில் உள்ள நடத்தைகள் ஈஸ்ட்ராஜன் ஹார்மோனை அதிகரிக்க செய்து மார்பக புற்றை ஏற்படுத்தலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது,அதிக எடை,சுற்றுச்சூழல்(பூச்சிக்கொல்லி மருந்துகள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்தலாம்).மது அருந்துவதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோசன் அளவை கல்லீரல்ஒழுங்குபடுத்த முடியாமல் போவது போன்றவை குறிப்பிடத்தக்க காரணங்கள்.மேலும்,இளம் வயதில் கதிர்வீச்சு சிகிச்சை இந்நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
முன்னெச்சரிக்கையாக,
- சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.கண்ணாடி முன் நின்று மார்பில் கைவைத்து கட்டிகள் இருக்கிறதா என்றும்,வீக்கம்,சிவப்பு கலரில் இருத்தல் போன்ற அறிகுறிகளையும் பரிசோதித்துகொள்ளலாம்.ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
- உடலில் கொழுப்பு மிகுதியான உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.வயது ஏற ஏற கொழுப்பு உணவுகளை குறைத்துக்கொண்டே போவது பல வகையில் நல்லது.
- தேசிய புற்று நோய் நிறுவனத்தின் அறிக்கைப்படி,அதிக எடை மார்பு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறது.
- உடற்பயிற்சியுடன்,ஹார்மோன் சிகிச்சைகளை தவிர்த்து மாற்று வழிகளை கண்டறிவது நல்லது.
Comments
Post a Comment