அவரவர் கஷ்டம்

அந்தத் தொலைபேசி
உரையாடலுக்குப் பிறகு
பேசும் கருவியை
உடைத்து விட்டான்.
கண்களில் நீர்
கைகளில் நடுக்கம்
சுய நினைவின்றி
புகைத்துக் கொண்டிருந்தான்.
என்ன நடந்தது?
ஏன் கேட்கிறீர்கள்?
யாருடைய கண்ணீரையாவது
துடைக்க
உங்களுக்கு மனமிருந்தால்
உங்கள் அருகே
உங்கள் வீட்டில்
உங்கள் தெருவில்
அதை செய்யுங்கள்.
வம்புக்கு
அலைய வேண்டாம்.
அவரவர் கஷ்டம்
அவரவருக்கு.
Comments
Post a Comment