பதிவரைப்பற்றி எனக்கு வந்த பரபரப்பு இமெயில்.
அரசு அலுவலகம் ஒன்றில் நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன்.ஒருவர் வந்து நண்பரிடம் சார் என்று ஆரம்பித்தார்.’’அவங்க உங்களப்பத்தி என்ன சொன்னாங்கன்னா.....’’அந்த கோபத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.கோள் சொல்ல வந்தவர் ஒரு நிமிடம் திகைத்துப்போனார்.”இத எதுக்காக சொல்லுற? இந்த மாதிரி என்னிடம் வந்து இனி சொல்லக்கூடாது!”
அவர் புதியதாக வேலைக்கு சேர்ந்தவராம்.அலுவலகங்களில் எத்தனையோ அரசியல்கள்.கோள் சொல்லி நல்ல பிள்ளை ஆகிவிடலாமென்று பலர் திரிவதுண்டு.நானும் இந்த மாதிரி ஆட்களை ஆதரிப்பதில்லை.நாம் சொல்வதை அவர்களிடம் போய் சொல்வார்கள்,இரண்டு பக்கமும் நல்லவனாக வேஷம் போடவும் கூடும்.
நண்பர் செய்த்து சரிதான்.ஆனால் பலருக்கும் இதில் பெரிய ஆவல் ஏற்பட்டு விடும்.இந்த மாதிரி ஆட்களின் நண்பர்களாக ஆகி விடுபவர்கள் உண்டு.அதனால் இழப்புத்தானே தவிர நன்மை எதுவும் இல்லை.இவையெல்லாம் நல்ல உணர்ச்சியை உருவாக்காது.சொறி சிரங்கு போல சொரிந்து கொண்டிருந்தால்தான் சுகமாக இருக்கும்.
இன்னொன்றை சொன்னார்” என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.” கொஞ்சம் முயற்சி செய்தால் நமக்கும் இது சுலபமாக கை வரக்கூடிய கலைதான்.ஒவ்வொரு வார்த்தையையும்,செயலையும் கவனிக்க வேண்டும்.யாருக்கும் தீங்கு செய்யாதவர் உங்களுக்கும் செய்யமாட்டார்,இன்னொருவருக்கு பாதகம் நினைத்து உங்களுக்கு நல்லது செய்பவர் ஒரு நாள் உங்களுக்கு எதிராகவும் மாறக்கூடும்.
தலைப்பு விஷயத்துக்கு வருகிறேன்.ஒரு பதிவரைப்பற்றி கோள் சொல்லி எனக்கு இமெயில் வந்த்து.(சில மாதங்களுக்கு முன்பு.)அது சுருக்கமாக,
அந்த பதிவர் உங்கள் மீது ஆத்திரமாக இருக்கிறார்.உங்களை ஆதரிக்க்க் கூடாது என்று பலரிடமும் பேசி வருகிறார்.பதிவுலகில் பல சண்டைகளை மூட்டி விடுவது அவர்தான்.அவருடைய குழுவில் உள்ள எல்லாரையும் கெடுத்துவிட்டு தான் மட்டும் நல்லவன் மாதிரி உங்களிடம் நடிப்பார்.பலரிடமும் அப்படித்தான்.உங்களைத் தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்லிவருகிறார்.உஷாராக இருங்கள்.உண்மையைச் சொல்லப்போனால் அவரது நண்பர்கள் அதிக ஓட்டும் கமெண்டும் வாங்குவது அவருக்கு பிடிக்கவில்லை.
இம்மாதிரி மெயில்களை இனி எனக்கு அனுப்ப வேண்டாம் என்று பதில் அளித்தேன்.மெயில் அனுப்பியவரின் நோக்கம் என்னவென்று எனக்கு புரியவில்லை.என் மீது மதிப்பு இருந்தால் எனக்கு ஓட்டும் கமெண்டும் போட்டு ஆதரிக்கலாமே? எத்தனை பேருக்கு இப்படி அனுப்பினார் என்று தெரியவில்லை.
பல பதிவுகள் தமிழ்மணத்தில் ஆறு ஓட்டுக்களுடன் நின்று போனது.என் மீது அக்கறை இருப்பவர் அப்போதெல்லாம் இவர் ஓட்டு போட்டிருக்கலாம்.பொறாமை போன்ற உணர்ச்சிகள் மனிதனுக்கு இயல்பானவை.அரசியல் நிலவும் பதிவுலகில் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.வாழ்க்கையிலும் சரி பதிவுலகிலும் சரி கோள் சொல்பவரை புறக்கணியுங்கள்.



Comments
Post a Comment