பொய் பேசுபவர்கள் யார்? யார்?


சிலருக்கு வாயைத் திறந்தால் பொய் சாதாரணமாக வரும்.அவர் அப்போதுதான் எனக்கு அறிமுகம்.என் கணவர் பி.இ படித்திருக்கிறார்,ஆனால் அவருக்கு சொந்தமாக தொழில் நட்த்துவதில்தான் ஆர்வம்.எனக்கு பிடிக்கவில்லை.உங்களுக்கு யாரையாவது சாஃப்ட்வேர் கம்பெனியில் இருப்பவரை தெரியுமா? என்று ஒருவர் கேட்டார்.எனக்கு தெரிந்த தம்பி ஒருவருக்கு போன் செய்து கூறினேன்.அவனும் என்னுடைய இ மெயில் முகவரியை கொடுத்து ரெஸ்யூம் அனுப்பச்சொல்லுங்கள் என்றான்.நான் தகவலைச் சொல்லப்போக “அவருக்கு விருப்பமே இல்லை சார்என்று முடித்துக் கொண்டார்.அடுத்த சில தின்ங்களில் தெரிந்த உண்மை அவருடைய கணவர் படிக்கவேயில்லை!

                               உண்மை எப்படியும் தெரியத்தான் போகிறது என்றாலும் பொய் பேசுவதை விடுவதாக இல்லை.தன் கணவர் படிக்காதவர் என்ற மனக்குறையை பொய் பேசுவதன் மூலம் தணித்துக்கொள்கிறாரா? மேலும் மற்றவர்களுக்கு தன் மீதான மதிப்பு அதிகரிக்கும் என்ற நோக்கமும் இதில் உண்டு.அப்புறம் விஷயம் தெரிந்த பிறகு சிரித்து மழுப்பி சமாளிப்பார்கள்.அப்போதைக்கு அவர்களை மதித்துவிட்டால் போதுமானது.

                               குற்றவாளிகள் தவறு செய்து விட்டு இல்லவே இல்லை என்று பொய் கூறுவது சகஜம்.பெரும்பாலான பொய்களும் தன்னை உயர்த்திக் காட்டவே உபயோகப்படுத்துகிறார்கள்.தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் அதிகம் பொய் பேச வாய்ப்புண்டு.மற்றவர்களிடம் ஏதேனும் உதவி பெற விரும்புபவர்கள் பொய்யை அதிகம் கையாள்கிறார்கள்.தன்னை பெருமையாக நினைத்தால் உடனே கோரும் உதவி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை.

                                                            பொய்களைச் சொல்லி பிறரை நம்ப வைப்பதன் மூலம் புத்திசாலியாக நினைத்துக் கொள்பவ்ர்கள் உண்டு.ஒரு விஷயத்தைப் பற்றி  அதிகம் தெரிந்த்து போல காட்டிக்கொள்வது ஒரு வகை.இவை எல்லாமும் முன்பே சொன்னது போல மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று செய்யப்படும் முயற்சிகள்தான்.

                             காதலில் பொய்கள் உலவுவது சாதாரணம்.காதலன்/காதலி தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக அவிழ்த்து விடுவார்கள்.ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நட்த்த வேண்டும் என்று தவறாக திரிந்துவிட்ட்தாக சொல்கிறார்கள்.ஆயிரம் முறை போய் சொல்லியாவது திருமணம் நட்த்தி வைக்க வேண்டும் என்று இருக்க வாய்ப்பு அதிகம்.
                       
                       காதலிலும் கல்யாணத்திலும் பொய் சொல்லும் கொடூரம் வேறில்லை.இருவரும் காலம் முழுதும் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் பொய் சொன்னவர்கள் மீதான நம்பிக்கை உடைந்து போகிறது.நம்பிக்கை போன பின்னால் அந்த உறவில் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.பலரும் எப்படியாவது நடந்துவிட்டால் பின்னர் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று இந்த மோசடியை செய்கிறார்கள். 

                           சகிப்புத்தன்மை குறைந்து போய்விட்ட்து என்பதை விட நவீன பெண்கள் நேர்மையை எதிர்பார்ப்பது அதிகரித்திருக்கிறது.சாதாரண பொய்கள்கூட குடும்ப நல கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்துகிறது.பெரும்பாலும் அது நீர்க்குமிழி.எப்போது வேண்டுமானாலும் உடைந்துபோகும்.குற்ற உணர்வைத் தரும் விஷயமும் கூட!உண்மையை உணர்ந்தவர்கள் பொய் பேசுவதில்லை.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்