கிருஷ்ணகிரிய எதுக்கு கிழிக்கணும் பதிவர்களே?

                           கிருஷ்ணகிரியை ஆளாளுக்கு கிழித்து தள்ளுகிறார்கள்.கிழிந்துபோய் மழை பெய்தால் வீடு,ரோடு என்று எல்லா இட்த்திலும் விழுகிறது.இங்கே சிறு பையனைக்கூட ஏமாற்ற முடியாது.ஸ்கூட்டர் எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்’’டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’’ என்று தெளிவாக பதில் வரும்.

                           உலகமறிந்த ரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனை அடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலக நாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலான நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.

                           மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இங்கே சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும்.பெங்களூருக்கு அருகில் இருக்கிறது.ஓசூர் நிறைய பேருக்கு தெரியும்.தொழில் நகரம்.எல்லா மாவட்ட்த்து ஆட்களையும்,மாநிலத்து ஆட்களையும்,வெளிநாட்டினரையும் இங்கே பார்க்க முடியும்.
           
                           ஓசூருக்கு அருகில் தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!லிட்டில் இங்கிலாந்துஎன்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின் விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

                             பணிபுரிபவர்கள் யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை.பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு,கன்னடம் பேசும் மக்கள்.அதனால் தேசியக் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம்.இப்போது இருப்பவர் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.இங்கே தோழர்கள் அதிகம்.தமிழ் ஓரளவு பேசுவார்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்என் பேர் சிக்கம்மா! என்பார்கள்.

                             யானைகள் அடிக்கடி கிராமத்திற்கு வந்து பீதியூட்டுவது இம்மாவட்ட்த்தில் அதிகம்.பாம்புகளும் அதிகம்.சென்ற மாதம் மியூஸியத்தில் பாம்பு படக் கண்காட்சி வைத்திருந்தார்கள்.போய் பார்த்தேன்.இத்தனை வகை பாம்புகளா? மலைப்பாம்பு கூட கிராமப்புறத்திற்கு வருவதுண்டு.கறி சமைத்து சாப்பிடுவதை நாளிதழில் செய்தியாக போட்டார்கள்.

                             5 தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரியை தொட்டுச்செல்கின்றன.விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.இன்றைய முதல்வர் போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் பெற்ற பர்கூர் தொகுதி கிருஷ்ணகிரியில் இருக்கிறது.வாழப்பாடி ராம்மூர்த்தி,இ.வி.கே.எஸ் இளங்கோவன் எல்லாம் இங்கே போட்டியிட்டவர்கள்.

                               டி.ராஜேந்தர் எதிர்த்து போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.சைக்கிள் சின்னம் கேட்டு கொடுக்காமல் ரயில் எஞ்சின் சின்னம் கொடுத்தார்கள்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமளிதுமளிப் பட்ட்து.சிங்கத்தின் கர்ஜனையை அப்போது நேரில் பார்த்தேன்.

                              கிருஷ்ணகிரி அணை இருக்கிறது.நான் ஃப்ரெஷ் மீன் சாப்பிட செல்வது வழக்கம்.விஜய்,அவரது தந்தைக்கு காவேரிப்பட்டிணம் அருகில் உள்ள கோயில் விருப்பமானது.எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி வருவதுண்டு.அழகி படம் எடுத்த உதயகுமார் இந்த ஊரைச்சேர்ந்தவர்.மிக இளைய மாவட்டம்.ஆனால் பதிவுலகில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்......

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்