பிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.ஒரு குறிப்பிட்ட சதவீதம் தோல்வியடைந்து விடுகிறார்கள்.அக்கம் பக்கத்து பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று கௌரவம் அடையும்போது தோல்வியுற்றவர்கள் வெளியே வராமல் தலை குனிந்து நடப்பதுண்டு.

                              நாமெல்லாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.ஒரு கிராமப்புற பள்ளியில் எண்பத்து நான்கு பேரில் பதிமூன்று பேர்தான் பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றோம்.இப்போது அத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தொழிதிபர்களாகவும்,அரசு அதிகாரிகளாகவும்,தனியார் நிறுவன பணியாளர்களாகவும் இருக்கிறார்கள்.



                              யாரும் மருத்துவர் ஆகவில்லை என்பது உண்மைதான்.ஆனால் அத்துறை மட்டுமே சமூக அந்தஸ்தை வழங்குமா? துரதிருஷ்டவசமான உண்மை தோல்வியடைந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆட்களே இல்லை என்பதுதான்.கூட்டுக்குடும்பம் சிதறிப்போன இன்றைய சூழலில் பாவம் இவர்கள்.தாத்தா,பாட்டி இருந்தால் கொஞ்சம் ஆறுதல் சொல்வார்கள்.

                              பெற்றோர்களைப் பொருத்தவரை தனது மகனோ,மகளோ தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் குடும்ப கௌரவம் போய்விட்ட்தாகவே நினைக்கிறார்கள்.அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே ஆள் தேவைப்படுகிறது.டீனேஜ் வேறு என்பதால் மனதளவில் பாதிக்கப்ப்டும் குழந்தைகள் தனித்து விடப்படுகிறார்கள்.

                               தேர்வு முடிவுகள் பாதிப்பால் நிகழும் தற்கொலைகள் இன்னொரு பிரச்சினை.குடும்பத்தில் தற்கொலை வரலாறு உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.ரொம்ப இயல்பாக,சந்தோஷமாக இருந்து திடீரென்று யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை.ஏற்கனவே மன அழுத்த்தில் பாதிக்கப்பட்டவர்களே தற்கொலை செய்து கொள்வார்கள்.



                               எதிலும் விருப்பமின்றி இருத்தல்,தூக்கமினமை அல்லது அதிக தூக்கம்,சரியாக் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவது,தன் சுகாதாரத்தில் அக்கறையில்லாமல் இருப்பது,மற்றவர்களுடன் அதிகம் கலந்து பழகாமல் இருப்பது போன்றவை மன அழுத்தம் இருப்பதன் அறிகுறிகளில் சில.

                               மாணவ,மாணவிகளிடம் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தோல்வி முடிவால் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.இது அனைவருக்கும் பொருந்தும்.மேலும்,குலைக்கிற நாய் கடிக்காது என்பார்கள்.தற்கொலைக்கு அது பொருந்தாது.



                          தோல்வியடைந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாராவது கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.திட்டமிடல் இருந்தால் நிச்சயம் நடக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.திட்டமிடல் என்றால் எந்த வகையில் என்று முடிவு செய்திருப்பார்கள்(மாத்திரையா? தீக்குளிப்பா? தூக்கா? என்று).யாரேனும் அறிவித்தால் அவர்களுக்கு மனநல மருத்துவ உதவி அவசியம்.கண்காணிப்பில் இருக்கவேண்டும்.

                            ஒருவரை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமிருக்கிறதா என்று கேட்பது தற்கொலை பற்றிய எண்ணத்தை தூண்டாது.மன அழுத்த்த்தில் உள்ள ஒருவரை அப்படி கேட்பதே சரியானது என்பது உளவியலாளர்கள் கூற்று.உதாரணமாக, சிலர் எதற்காக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்,உனக்கு அந்த மாதிரி எண்ணம் வருவதுண்டா? என்று கேட்கலாம்.அவர்களை அதிகம் பேச வைத்தால்,நீங்கள் பொறுமையாக கேட்டால் ஆபத்தை பெரும்பாலும் தவிர்க்கமுடியும்.

                             வழக்கம்போல நடுத்தர வர்க்கமே அதிகம் பாதிக்கப்ப்டுகிறார்கள்.கனவு,கௌரவம்,முன்னேற்றத்துக்கு குழந்தைகளை நம்பியிருத்தல் போன்றவை அதிகம்.உங்களுக்கு சுற்றுப்புறத்தில் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவுங்கள்.

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்