நாட்டுப்பற்றை வளர்க்கும் கிரிக்கெட்
நான் தமிழன்,நான் மராட்டியன்,கன்னடியன் என்ற உணர்வுகளைத்தாண்டி அனைத்து நெஞ்சுகளிலும் இருந்த உணர்வு ஒன்றுதான்.ஆம்.நான் இந்தியன்.பரபரப்பாக நடந்த ஆட்ட்த்தின் முடிவில் இந்தியா வென்றுவிட்ட்து.எந்த நாடு வெற்றி பெற்றிருந்தாலும் இவ்வளவு அதிகமான மக்களை சந்தோஷப்படுத்தியிருக்காது.
கோடிக்கணக்கான இதயங்களில் மகிழ்ச்சி குடிகொண்ட்து.இலங்கை வெற்றி பெற்றிருந்தால்,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து எந்த நாடு கோப்பையை பெற்றிருந்தாலும் உலக மக்கள் தொகையில் அதிக மக்களை இந்த மகிழ்ச்சி சென்றடைந்திருக்காது.எல்லைகளை கடந்து கொண்டாடித் தீர்த்தார்கள்.
சேலத்திலிருந்து ஒருவர் சென்னைக்குப் போனால் நான் சேலத்தை சேர்ந்தவன் என்கிறார்.டெல்லிக்கு போனால் தமிழ்நாடு,வெளிநாடு சென்றால் இந்தியா.உலக அரங்கில் நம்முடைய அடையாளம் இந்தியா!வெளிநாடுகளில் மதம்,மண்டலம் தாண்டி இந்தியன் என்ற உணர்வுடனே கொண்டாடினார்கள்.
கிரிக்கெட் ஏன் இந்த அளவுக்கு விரும்ப்ப்படுகிறது என்பதற்கு உளவியலில் காரணங்கள் சொல்லப்படுவதுண்டு.மனிதனுக்கு இயல்பாகவே சண்டை போடும் உணர்வு இருக்கிறது.அதை கிரிக்கெட் தீர்த்து வைக்கிறது என்கிறார்கள்.விளக்கமாக இங்கே சொல்வது சிரம்ம்.
இந்திய சுதந்திரப் போராட்ட்துக்கு அடுத்து நான் இந்தியன் என்ற உணர்வு போர்கள் நடைபெறும் காலத்தில்தான் வெளிப்படுவதை பார்க்கமுடியும்.போர்க்காலங்களைத் தாண்டி கிரிக்கெட்தான் அந்த உணர்வை தோற்றுவிக்க முடியும் என்று தோன்றுகிறது.பல்வேறு கிரிக்கெட் போட்டிகளின் போது நான் இதையே உணர்ந்தேன்.
உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியைவிட அதிக மக்களால் பரபரப்புடன் எத்ர்பார்க்கப்பட்ட்து,பார்க்கப்பட்ட்து பாகிஸ்தானுடனான போட்டிதான்.என்ன காரணமாக இருக்க முடியும்? தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் அண்டை நாட்டை நாம் வெல்லவேண்டும் என்பதே இந்தியர்களின் ஆர்வம்.அப்போது பற்றிக் கொண்டிருந்த உணர்வு நான் இந்தியன் என்பதே!
பல விமர்சன்ங்கள் இருக்கத்தான் செய்கின்றன.எல்லாவற்றையும் தாண்டி இந்தியா முன்னேறிக் கொண்டுதானிருக்கிறது.


Comments
Post a Comment