சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள்.
பெரும்பாலானோருக்கு தெரிந்தே நடக்கும் ஒரு விஷயம்தான்.தெர்ந்த இடங்களில்,பக்கத்து தெருவில் பணியிடங்களில்,பயிற்சி முகாம்களில் மணம் மீறிய உறவு ஏற்பட்டு வளர்வதை பார்த்திருப்போம்.இளம் வயது காதலர்கள் போலவே துடிப்புடன் காதல் செய்வார்கள்.
கடைக்குச் சென்று கடலை மிட்டாய் வாங்கி வருவதிலிருந்து பேருந்தில் இடம் பிடித்து தருவது வரை ஆண்மகன் தீயாய் உதவி செய்து கொண்டிருப்பான்.வேறு ஆண்களுடன் அப்பெண் பேசிவிட்டால் மொத்த மனமும் கெட்டுப்போய் இரவு அவன் தூங்குவது கஷ்டமாகிவிடும்.
அது ஒன்றும் ரகசியம் கிடையாது.குற்றவாளி ஏதாவது ஒரு தடயத்தை விட்டு வைப்பான் என்று கோட்பாடு இருக்கிறது.கள்ளக்காதல்களில் நிறைய பேருக்கு அவர்கள் ரொம்ப நெருக்கம் என்று பலர் கருத ஆரம்பித்த பிறகுதான் அவர்களுக்குள் காதலே முழுமையடையும்.
சுற்றி இருக்கும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கூச்ச நாச்சமெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை.அநேகமாக நம்மை வேடிக்கை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்திருக்க மாட்டார்கள்.காதலில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு இருப்பதால் சுற்றி உள்ளவர்களை கவனிக்க தோன்றுவதில்லை.
உடனடியாக இதை தெரிந்துகொள்வது காதல் நாயகியின் உடனிருக்கும் தோழிகள்தான்.புன் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துவிட்டு மற்ற பெண்களுக்கு,ஆண்களுக்கும் போட்டுக் கொடுப்பவர்கள் இவர்கள்தான்.ஒரு குழுவை சேர்த்துக் கொண்டு அவர்களை கமெண்ட் செய்துகொண்டு ஜாலியாக இருப்பார்கள்.
நான் ஒரு பெண்ணைக் கேட்டேன்,”நீங்கள் கொஞ்சம் புத்தி சொல்லக்கூடாதா? ” என்னை அப்பாவி போல பார்த்தார்.சொல்ல்லாம்தான் ஆனால் அதற்குப் பிறகு என் முன்னால் மட்டும் உஷாராக நடந்து கொள்வார்கள்.என்னை பார்க்கும்போது அவளுக்கும் ஒரு மாதிரி இருக்கும்.
மூன்று குழந்தைகள் உள்ள ஒரு பெண் எழுதிய கடிதம் ஒன்றை எனக்கு காட்டினார்கள்.எப்படியோ எடுத்திருக்கிறார்கள்.அதில் இருந்த வாசகம் என் மனதை கவர்ந்துவிட்ட்து.”எனக்கு உங்களைத் தவிர வேறு எண்ணமில்லை.குழந்தைகள் நினைவுகூட வருவதில்லை.
மனிதர்கள் முழுமையான விலங்காக மாறி விடுவதை இப்படிப்பட்ட காதல்களில்தான் பார்க்க முடியும்.உணர்ச்சி தவிர எந்த சிந்தனையும் அவர்களிடம் பார்க்கமுடியாது.காதல்,காம்ம் மட்டுமல்ல! ஆத்திரம்,கோபம்,பொறாமை போன்ற உணர்ச்சிகளும் அவர்களுக்கு அதிகம்.அதனால் கொலைகளும்,தற்கொலைகளும் மலிந்து போகின்றன.குடும்பங்கள் சிதறிப் போகின்றன.சுற்றி உள்ளவர்கள் யாராவது கொஞ்சம் யோசிக்கவைத்தாலே சிலரை பிரச்சினைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம்.



Comments
Post a Comment