நகைச்சுவை பதிவுகள் நாட்டுக்குத்தேவையா?
ஆனந்த விகடன் தமிழர்களோடு ஒன்றிப்போனதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது அதன் நகைச்சுவை உணர்வுதான்.விகடனின் குறும்பும்,களிப்புமே என்னை பள்ளிப் பருவத்திலிருந்து வாசகனாக தொடர வைத்திருக்கிறது
நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.சவால்களை எளிதில் வெற்றியாக மாற்றுவதில் வல்லவர்கள் அவர்கள்.சிரிப்பு எல்லாவிதமான அழுக்குகளையும் போக்கிவிடுகிறது.நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது.
சிரிப்பைத் துணையாக கொண்டவர்களுக்கு மனநோய்கள் நெருங்காது.இறுக்கத்தைப் போக்கி விடுவதால் மன அழுத்தம் போன்ற நலக்குறைவுகள் ஏற்படுவதில்லை.மற்ற நோய்களும்தான்.ஆரோக்யத்தின் திறவுகோல் அது.உடனிருப்பவர்கள் உடல்நலனையும் கூட்டும் மந்திரம்.

தவறு செய்து மாட்டிக்கொண்டவர்கள் சிரித்து வைப்பதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்(அரசியல்வாதிங்கள சொல்ல்லப்பா!) அல்லது குறைந்த தண்டனையே பெறுகிறார்கள்.சிரிப்பின் சாகசம் அது.
சிரிக்க வைப்பவர்கள் புண்ணியவான்கள்.உலகம் அவர்களுடயது.நகைச்சுவை பதிவர்கள் வாழ்க!
இப்போதுதான் வீடு வந்தேன்.இந்தப்பதிவு வெகுநாட்களாக டிராஃப்டில் இருந்த்து.வழக்கமாக கமெண்டும்,ஓட்டும் போடும் ஓரிருவருக்குக்கூட அதைச் செய்ய முடியவில்லை.மன்னிக்கவும்.போகட்டும் நகைச்சுவைக்கு ஒரு சீரியஸ்பதிவா? என்று கேட்பவர்களுக்கு எப்போதோ படித்து நினைவில் இருக்கும் ஒன்று.
மகனுக்கு எந்த வேலை ஏற்றதாக இருக்கும் என்று கண்டறிய மனோத்த்துவ மருத்துவரிடம் அழைத்துப்போனார் ஒரு அம்மா.டாக்டர் நர்ஸை அழைத்து,”ஒரு சுத்தி,ஒரு திருப்புளி,ஒரு குறடு மூன்றையும் மேசை மீது வை! பையன் சுத்தியலை எடுத்தால் தச்சன் ஆவான்.குறடை எடுத்தால் மெக்கானிக் ஆவான்,திருப்புளியை எடுத்தால் எலக்ட்ரீசியன் ஆவான்.’’ பையன் மூன்றையும் விட்டுவிட்டு நர்ஸை பிடித்து இழுத்தான்.

Comments
Post a Comment