இவற்றை தவிர்க்க முடியாதா சி.பி. செந்தில்குமார்?
இன்று இ-மெயிலை திறந்தபோது ஒரு ஆச்சர்யம்.சி.பி.செந்தில்குமாரிடமிருந்து கமெண்ட்.இவர் நம்ம பக்கமெல்லாம் வரமாட்டாரே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.சில கமெண்டுகள் சங்கடப்படுத்திவிட்ட்தால் comment moderation வைத்திருக்கிறேன்.அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஏமாந்த நேரமாக பார்த்து மெயிலிலிருந்து கமெண்ட் publishசெய்வது வழக்கம்.
அவருக்கும்,சதீஷ்குமாருக்கும் ஃபாலோயராக இருக்கிறேன்.சில நேரங்களில் சினிமா பார்க்கவேண்டுமென்று தோன்றினால் அந்த விமர்சனத்தை படிப்பது வழக்கம்.நினைவுள்ள வரையில் இரண்டு கமெண்ட் என்னவோ போட்டிருக்கிறேன்.சினிமா விமர்சனத்தில் தனித்துவமாக இயங்குகிறீர்கள் என்று!அவருடைய எல்லா சினிமா விமர்சனத்துக்கும் பொருந்தும்.
அரசியல் பதிவெழுதுவதோ,அரசியல் பதிவுகளுக்கு கருத்துரையிடுவதோ சில தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் முடியாமல் இருக்கிறது.விகடனில் அவரது ஜோக்ஸ்படித்து சிரிப்பேன்.ஜோக் சம்பந்தப்பட்ட ஒரு பதிவுக்கு really super என்று ஒரு கமெண்ட் போட்டிருக்கிறேன்.அவ்வளவுதான்.
தொடர்ந்து தமிழ்மணத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்.தினம் இரண்டு மூன்று பதிவுகூட போடுகிறார்.அவரது உழைப்பு என்னை வியக்க வைத்த்துண்டு.தூங்குகிறாரா,இல்லையா? என்று எண்ணியிருக்கிறேன்.தவிர எங்கே பார்த்தாலும் கமெண்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார்.பலரை தூக்கிவிட்டு அவரும் உயர்ந்து நிற்கிறார்.
முதன் முறையாக கமெண்ட் போட்டிருக்கிறார்,அவருடைய தளத்துக்கு சென்றுவரலாம் என்று போனேன்.விமர்சனம் படிப்பவர்கள் படம் பார்க்காதவாறு’நச்’என்று இருக்கிறது.இது எனக்கு பிடித்த விஷயமும் கூட.சினிமா பெருவாரியான மக்களால் விரும்ப்ப்படும் ஒரு கலை.அதற்கான சரியான விமர்சனமும் ஒரு சேவைதான்.நம்முடைய பணத்தை செலவளித்து சினிமாவுக்கு போகிறோம்.பணத்தையும் கொடுத்து,மனமும் கெட்டுவருவது கஷ்டமான அனுபவம்.
சொல்லவந்த்து வேறு.அந்த சினிமா விமர்சனத்தில் ‘2 ல ஒண்ணு செம கட்ட’என்று ஒருவரி.எனக்கு சங்கடமாக இருந்த்து.இவற்றையெல்லாம் தவிர்த்தாலும் நீங்கள் முதல் இட்த்தில் இருப்பீர்கள் நண்பரே!இவை உங்களுக்கான அறிவுரை அல்ல!ஒரு நட்பு வேண்டுகோள்.என்னுடைய வாழ்த்துக்கள்.

Comments
Post a Comment