மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! திருந்தவேமாட்டாங்களா?
தமிழ்நாட்டில் மாணவிகள் தற்கொலைகள் தொடர்கதை ஆகிக் கொண்டிருக்கிறது . ஈரோடு கவுந்தப்பாடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த மாணவி சாந்தினி தூக்கு போட்டு தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.ஆசிரியர் ஒருவர் தன்னை அடித்த்தாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
நிறைய பேசியாகிவிட்ட்து.பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதின.நானும் இது குறித்து இரண்டு இடுகைகள் எழுதியிருக்கிறேன்.ஆசிரியருக்கு திட்டுவது அடிப்பது தவிர வேறு வழியில்லையா? என்றொரு பதிவும்,பத்திரிகையும் டிவியும் தற்கொலையைத் தூண்டுகிறதா? என்ற தலைப்பில் ஒரு பதிவும்.
இதற்கு முன்பு நடைபெற்ற தற்கொலைகளின் காரணங்களுக்கும் மாணவி சாந்தினியின் தற்கொலைக்கும் உள்ள வித்தியாசம்,இவர் ஆசிரியர் தன்னை அடித்த்தால் தற்கொலை செய்து கொண்ட்தாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது குறித்த அரசு உத்தரவுகள் பல ஆசிரியர்களுக்கு தெரியாது போல தோன்றுகிறது.
தனியார் பள்ளிகள் கல்லூரிகள் மாணவ மாணவிகளை தங்கள் விருப்பம் போல அடிமையாக நட்த்த அனுமதி த்ந்துவிட்ட்து போல நினைத்துக்கொள்கின்றன.மாணவர்கள் நலனுக்காக செயல்படுவதாக ஜம்பம் வேறு.உண்மையில் எங்கெங்கோ இருக்கும் கோபத்துக்கு அப்பாவி மாணவிகள் அடியும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மனித உரிமைகளை மீறுவோர் காக்கும் கடவுளாக பீற்றிக் கொள்வது இந்தியாவில் தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.மனித்த் தன்மையற்ற செயலை செய்துவிட்டு அவர்கள் நல்லதுக்கு அடித்தேன் என்று சொல்கிறார்கள்.சொந்த கோபதாபங்களை வாசலில் கழற்றிவிட்டு விட்டு எப்போது ஆசிரியர்கள் வகுப்பறைக்கு நுழைவார்கள் என்று தெரியவில்லை.
பத்தொன்பது வயதுடைய பெண்ணை மற்ற மாணவிகள் முன்பு கையை நீட்டி அடித்தால், அவரது உள்ளம் அடையும் அவமானமும்,வெறுப்பும் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளை உணராத ஒருவருக்கு ஆசிரியர் பட்டம்கொடுப்பது நமது கல்விமுறையின் தோல்வி.சாரமற்ற கல்விமுறை நமது சொத்தும்கூட.
இனியும் இது போன்ற அவலங்கள் தொடராதவாறு தகுந்த உத்தரவுகளும் சட்டங்களும் நமக்கு தேவை.யாவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
Comments
Post a Comment