தவற விட்ட சொல்

மனநல காப்பகம் ஒன்றில்
அழுதுகொண்டிருந்த
அவனைக்கேட்டேன்
இங்கே எப்படி வந்தாய்?
விபத்தொன்றில்
தவற விட்ட சொல்லை
தேடிக்கொண்டிருந்தேன்
புத்தகங்களில் தேடினேன்.
நண்பர்களிடம்
தெரிந்தவர்களிடம்
உறவினர்களிடம்
பின்பு
கடவுளிடம்
புத்தனிடம்
காந்தியிடம்
எங்கும் கிடைக்காமல்
அலைந்தபோது
சாக்கடையில் இருக்கலாமென
யாரோ சொன்னார்கள்
அங்கே இறங்கி
தேடிக்கொண்டிருந்தபோது
இங்கே
அழைத்து வந்துவிட்டார்கள்.
Comments
Post a Comment