வலைப்பதிவுகள்,பதிவர்கள் மற்றும் நான்
2008- ம் ஆண்டு குமுதத்தில் பிரபலமான வலைப்பதிவுகள் பட்டியல் போட்டிருந்தார்கள் . அதைப்பார்த்து விட்டு அந்த தளங்களுக்கு சென்றேன் . இட்லி வடை , பி . கே பி . ஆகியன . அவற்றைத் தான் படித்து வந்தேன் . பிறகு ஆனந்த விகடன் மூலமாக சில பதிவுகள் அறிமுகம் . டாக்டர் ஷாலினியின் பதிவுகள் போன்றவை . வேறு விபரங்கள் எனக்கு தெரியாது . இணையத்தில் இலவசமாக எழுத முடியும் என்றோ , யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதெல்லாம் தெரியாது . ஒரு நாள் create blog மீது தொடப்போக நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.ஒரு வருட்த்திற்கும் மேலாக அப்படியே கிடந்த்து.எப்போதாவது திறந்து பார்ப்பேன்.அவ்வளவுதான்.தமிழில் எழுத்முடியும் என்பது கூட தெரியாது.தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பது அதனால்தான்.கூகுள் ஒலிபெயர்ப்பு,மொழி பெயர்ப்பும் தெரியாது. புதிய தலைமுறை இதழொன்றில் இ-கலப்பை பற்றி படித்தேன்.அதைத் தேடப்போய் ஒவ்வொன்றாக தெரிந்த்து.பதிவு ...