அன்னையை போற்றுவோம் -இரண்டு

கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை. பெண்ணுக்கு பதினைந்து வயது. வயதுக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. வழக்கமாக சொல்லக்கேட்பதுண்டு,மச்சினிச்சி சூப்பர்டா ,நீ குடுத்து வச்சவன்டா.....யாரும் வீட்டில் இல்லாதபோது தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை அவளுடைய அக்காவின் கணவன் கற்பழித்தான்.ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".கொஞ்ச நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒரு தாய் அவ்வளவுதான் தண்டனை தரமுடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள் .

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

சாருவும் தமிழ்ப்பெண்களும்