கவலையற்றிருத்தலே வீடு . களியே அமிழ்தம் -மகாகவி பாரதி
பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?
பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய எனது பதிவை படித்துவிட்டு ஒருவர் கேட்டார்.ஆண்களுக்கு இவையெல்லாம் ஏற்படாதா?.விதி விலக்குகள் விதிகள் ஆகுமா என்று தெரியவில்லை.சில ஆண்களுக்கு பெண்கள் மீது தீராத ஆத்திரம் உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.எங்கேயாவது ஆணுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்தால் அவன் பாவம்.அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த சந்தோஷமும் இல்லை.பெண்களைப்போல அவனால் வெளியே சொல்லவும் முடியாது.அடேயப்பா என்று மேலும் கீழும் பார்ப்பார்கள். ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுத...
Comments
Post a Comment