கள்ளக்காதல் தந்திரங்கள்.
போலியான உறவுகளுக்கு கள்ளக்காதல் ஒரு நல்ல உதாரணம்.ஒருவர் இன்னொருவரை ஏமாற்றும் உறவுமுறை அது.எனக்கு அறிமுகமில்லாத புதிய இடம்.யாரையும் நேர்முகமாகத் தெரியாது.ஒருவர் அன்போடு என்னிடம் பழகினார்.எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்.முகத்தை நேராக பார்த்து சிரிக்காத்தால் அவரிடம் ஒட்டவில்லை.
என்னிடம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் அன்புடனும்,கனிவுடனும் நடந்து கொள்வதை கவனித்தேன்.யாரோ நன்கொடை கேட்டு வந்தார்கள்.மற்றவர்களைவிட அதிகம் எழுதினார்.யாருக்காவது உடல்நிலை சரியில்லாவிட்டால் வீட்டில் இருப்பவர்களைவிட அதிகம் கவனிப்பார்.யார் வேண்டுமானாலும் அவரிடம் கடன் வாங்கலாம்.பலருடைய கஷ்டம் அவரால் தீர்ந்திருக்கிறது.
மதிய உணவு இடைவேளையின் போது ஒருவர் சொன்னார்” சார்,ரொம்ப மோசம் சார்! ரெண்டு கொழந்தைங்க சார்! நல்ல சாவு வராது சார்,வீட்டில் யாரையும் மதிப்பதே இல்லை!”அவரது கள்ளக்காதலை எனக்கு புட்டுபுட்டு வைத்தார்.எனக்கு ஆச்சர்யமாகப் படவில்லை.இந்த மாதிரி ஆட்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
ஒரு பெண் குற்றம் சுமத்திவிட்டார் என்பதற்காக விசாரிக்க அழைக்கப்பட்டார்.சட்டப்பூர்வமாக அல்ல.உள்ளேயே பேசித்தீர்க்கும் விஷயம்.பத்து வருடங்களுக்கு முன்பு விளையாட்டு போட்டி ஒன்றில் வென்ற சான்றிதழ்களை எடுத்து வந்திருந்தார்.பிரபலமான யாரையோ எனக்கு உறவு என்றார்.
தவறு செய்பவர்களும்,செய்து விட்டவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்.தந்திரமாக அனைவருடனும் நல்ல உறவுகளைப்பேணி விட்டால் தவறுகள் மறக்கப்பட்டுவிடும் என்பது எண்ணம்.உண்மையில் இது மனம் எடுக்கும் ஒரு முயற்சிதான்.நான்கு பேர் காறித்துப்புவது போல செயல்களைச்செய்பவர்களுக்கு குற்ற உணர்வு இயல்பாக இருக்கும்.அதே சமயம் நல்ல உறவுகளைப் பேணுபவர்கள் எல்லாம் இப்படித்தான் என்று பொருள் அல்ல!
குற்ற உணர்வை சரி செய்ய உள்ளமே தேர்ந்தெடுக்கும் ஏற்பாடுதான் அது.கள்ளக்காதல் என்றில்லாமல் தெரிந்தோ,தெரியாமலோ தவறு செய்யும் எல்லோருக்கும் இது பொருந்தும்.இவர்களிலும் சிலர் வீராப்பாக பெரிய ஆள்போலக் காட்டிக் கொள்வார்கள்.இதுவும் தந்திரமே! யாருக்கும் தெரியாது என்று நினைப்பவர்கள் போக்கு இது.
இவர்களின் அன்பையும்,கருணையையும் உண்மை என்று நம்பி ஏமாந்து போகிறவர்கள் உண்டு.நம்பிக்கையில் தனது ரகசியத்தையும்,குடும்ப விவகாரங்களையும் கொட்டி விடுவார்கள்.அப்புறம் அவர்களுக்கு அடிமைதான்.
நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக்கூடாது-திருவள்ளுவர்.



Comments
Post a Comment