தமிழ்ப் பதிவுகளை காட்டமாக விமர்சித்த அரசியல் நிருபர்.
பத்திரிகையாளர்கள் என்றால் பெரிய பெரிய ஆட்களெல்லாம் மரியாதை கொடுப்பார்கள்.சும்மா வெளிவேஷம்தான்.ஆனால் பத்திரிக்கை முதலாளிகள் மிகவும் மதிக்கும் நபர் ஏஜன்ட்.சில்லறையை இறைத்து பெருக்குவது என்பார்கள்.பத்திரிகைக்கு அது பொருந்தும்.பல ஏஜெண்டுகளிடம் பணம் வாங்குவது சாதாரண விஷயமல்ல.அப்படியெல்லாம் இல்லாமல் நல்ல(சொல்லி வைக்கிறேன்) ஏஜன்ட் ஒருவரின் கடைக்கு போனேன்.பல வருடங்களாக பழக்கம்."இவர் .....பத்திரிக்கை நிருபர் என்று அறிமுகப்படுத்தினார்.என்னை இவர் தமிழ் பிளாக்கர் என்று சொன்னார்.அற்பமான புழுவைப் பார்ப்பது போல் தோன்றியது.எந்த ரியாக்சனும் இல்லை.ஏஜண்டுக்கு ஏன் மீது கொஞ்சம் மரியாதை உண்டு என்று நினைக்கிறேன்.
நான்: "ஆயிரக்கணக்கில் கவிதை,கதை,அரசியல்,நகைச்சுவை என்று தமிழ் விளையாடிக்கொண்டிருக்கும் இடம் அது.நீங்கள் சொல்லும் காபி பேஸ்ட் குறைவுதான். நேரமில்லாத போது ஏதாவது பதிவு போடலாம் என்று காபி பேஸ்ட் செய்வார்கள்.
அவருக்கு நம்பிக்கை வரவில்லை .
நிருபர்:" நான் சில நேரங்களில் பார்க்கிறேன் .பத்திரிகையில் இருந்து எடுத்ததுதான் இருக்கிறது என்றார்.
நிருபர்:யார் படிக்கிறார்கள்.?சினிமாவும் காபி பேஸ்ட் டும் தான் இருக்கிறது.மற்றதையெல்லாம் நீங்கள் எழுதி நீங்களே படித்துக்கொள்வீர்களா?
நான்:(அடப்பாவி பக்கம் இருந்து பார்த்திருப்பாரோ?) நானும் பத்திரிக்கை படிக்கத்தொடங்கிய காலத்தில் சினிமா பற்றியே அதிகம் படித்தேன்.வாரப்பத்திரிகைகளில் மூன்று தொடர்கதை யாவது கட்டாயம் இருக்கும்.இப்போது அப்படியில்லை.மாற்றம் ஒன்றே மாறாதது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.
அவர் மேற்கொண்டு பேசியவை இங்கே வேண்டாம்.என்னுடைய பிளாக் முகவரியும் போன் நம்பரும் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.ஒரு நாள் அவரும் வலைப்பதிவுக்கு வருவார் என்று நினைத்துக்கொண்டேன்.



Comments
Post a Comment