5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.
சேலம் அருகே நடந்த பயங்கரம் இது. 5 வயது சிறுமியின் மறைவிட்த்தில் ரத்தக்கசிவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.குழந்தையை விசாரித்த பிறகு ஒரு 17 வயது பையனை அடையாளம் காட்டியிருக்கிறார்.பையனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.18 வயதுக்கு கீழ் மைனர் என்பதால் சீர்திருத்த வேண்டியிருக்கிறது.
பாலியல் நட்த்தைகளுக்கான வயது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.குழந்தைகள் மீதான வன்முறையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.இந்தியாவில் 52 சதவீத குழந்தைகள் இத்தகைய வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ ஆய்வு இருக்கிறது.இது 2007 கணக்கு.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தந்த மதுரை தலைமையாசிரியர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.புகைப்படம் எடுப்பதிலிருந்து அத்தனை வக்கிரங்களையும் செய்து வந்த்தாக விசாரணையில் தெரிய வந்த்து.வன்முறையில் ஈடுபடுபவர்கள் இப்படி குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்தவர்கள்தான்.
குழந்தைகளுக்கு நல்ல தொடுகை எது? கெட்ட தொடுகை எது? என்று சொல்லித்தரலாம் என்று சொன்னார்கள்.பள்ளியிலும் அப்படி சொல்லித்தரலாம் என்று தோன்றுகிறது.அதிகமாக வெளியில் தெரிவதில்லை என்பதால் இப்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதில்லை என்பதே நிஜம்.
குழந்தைகளுக்கான வன்முறையில் பெரும்பங்கு வகிப்பது குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப்படங்கள் மற்றும் புகைப்படங்கள்தான்.பலர் குழந்தைகளுக்கு இதை காட்டுவதன் மூலம் அவர்களுக்கு “இது தவறில்லையே’’ என்ற மனோபாவத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள்.இப்படிப்பட்ட ஆபாசப்படங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முன்பின் தெரியாத குழந்தைகள் மீது அதீத பாசம் காட்டுவது,அவர்களை அதிகமாக புகழ்வது,அவ்ர்கள் விளையாடும் பொருட்களை வைத்திருப்பது,ஆபாச படங்களையும்,புகைப்படங்களையும் வைத்திருப்பது போன்றவை இவர்களது பண்புகளாக இருக்கும்.பெற்றோர்கள் கண்காணிப்பில் இல்லாத குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள்,அவர்கள் விரும்புவதை வாங்கித்தருபவர்களாக இருப்பார்கள்.
மேற்கண்ட குணமுடையவர்களை பார்த்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம்.குழந்தைகள் மீதான் வன்முறை தொடர்பாக அதிக அளவிலான ஆய்வுகளும்,கண்காணிப்புகளும் தேவைப்படுகின்றன.பெற்றோர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும்,கல்வியும் தேவை.சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுவதுடன்,ஆபாசங்களை தடை செய்வதும் அவசியம்.



Comments
Post a Comment