அதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.
அதிகமாக உண்பதால் ஏற்படும் விளைவுகள் நமக்கு தெரிந்த்துதான்.உடலின் கொழுப்பின் அளவு அதிகரித்து பருமனாகிவிடும்.அதற்குப்பிறகு வருவதெல்லாம் நோயதான்.அளவுக்கு மீறிப்போய் அறுவை சிகிச்சை தேவைப்படுவோரும் உண்டு.
மன அழுத்தம் உள்ளவர்கள் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவோ அல்லது மிக்க் குறைவாகவோ உணவு உண்பார்கள்.அவர்களுக்கு மன அழுத்தம் தீர ஆலோசனையோ,சிகிச்சையோ அளித்தால் இந்த பழக்கம் சரியாகிவிடும்.மனப்பதட்டம் உள்ளவர்கள் மிக்க் குறைவாக உணவு உண்பார்கள்.சரியாக பசியெடுக்காது.பதட்டம் நீங்கினால்,அல்லது சிகிச்சை அளித்தால் சரியாகிவிடும்.
சில குடும்பங்களில் அதிக உணவு எடுப்பதை பழக்கமாகவே வைத்திருப்பார்கள்.எப்போதும் சுவையான கொழுப்பு நிறைந்த உணவுகளை தயாரிப்பதும்,உண்பதுமே அவர்களுடைய முக்கிய பணியாக இருக்கும்.இம்மாதிரி குடும்பத்துக் குழந்தைகள் எடை கூடி பருமனாவது சாதாரணம்.இதற்கு குடும்ப ஆலோசனை தேவை.
இன்றைய இளம் பெண்கள் பலரும் உடல் எடை அதிகரிக்காமல் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமென்பதற்காக உணவை வெறுக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.இது ஆபத்தான பழக்கம்.இவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை பார்க்கலாம்.
உடல் பிரச்சினையின்றி இயங்க போதுமான கலோரிகளும்,உயிர்ச்சத்துக்களும்,தாதுக்களும் தேவை.உடல் எடை அதிகரிப்பு பயத்தால் சரியான அளவு உண்ணாமல் இச்சத்துக்கள் கிடைக்காமல் போனால் உடல் இயக்கத்தில் கோளாறுகளும்,நோய்களும் தவிர்க்கமுடியாது.
உணவுதான் உங்களையும்,என்னையும் உருவாக்கியிருக்கிறது.ஆற்றலைத் தந்து கொண்டிருக்கிறது.இயல்பாக அல்லாமல் அதிகமாகவோ,குறைவாகவோ உண்ணும் பழக்கம் இருந்தால் அதற்கான் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.



Comments
Post a Comment