Posts

Showing posts from April, 2011

கள்ளக்காதலுக்கு காரணங்கள்-ஓர் அலசல்(வாத்ஸ்யாயனர் உதவியுடன்)

Image
வலிபோக்கன் said... இது போன்ற பிரச்னைகளுக்கு காரணகர்த்தா யாருன்னு சொல்லுங்க சார்.                                                        மேற்கண்ட கருத்துரை “சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள் ” பதிவிற்கு இடப்பட்ட்து. கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள். படிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் எண்ணம் ஏன் இப்படி?ஆனால் தெளிவாக சொல்ல யாருமில்லை.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம். உறவுகளிலும் , குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை , தற்கொலை , குடும்பசிதைவு , என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன ? இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை ? படி...

சட்னி,சாம்பார் சாப்பிடுவீங்களா? இதப்படிங்க!

Image
                               நண்பர் ஒருவர் சுகாதாரம் பேணுவதில் வல்லவர்.எப்போதும் கொதித்து ஆறிய நீர் மட்டுமே பருகுவார்.அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது என்று பல சஞ்சிகைகளில் படித்த்தன் விளைவு அதை கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.அநேகமாக மருத்துவம் தொடர்பான எல்லா புத்தகங்களும் அவரிடம் இருக்கும்.                                அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டி வந்து விட்ட்தால் அவர் வீட்டிலிருந்து எடுத்துவரும் நீர் போதவில்லை.அலுவலகத்தில் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் ஒன்றை நிறுவ முடிவு செய்தார்.பணியாளர்கள் அனைவரிடமும் பணம் வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.சிலர் முனக ஆரம்பித்தார்கள்.               ...

உடல் நலம் :உயிரைக் குடிக்கும் பழக்கங்கள்

Image
                                                            படித்தவர்களுக்கு கிராம மக்கள் பரவாயில்லை என்று சில நேரங்களில் தோன்றும். கிராம மக்களிடம் உடல் நலன் குறித்த மூட பழக்கவழக்கங்கள் ஏராளம் இருந்ததுண்டு.சில இடங்களில் இன்னும்கூட இருக்கிறது.உடல்நலம் சரியில்லாவிட்டால் கடவுளிடம் போவது , சடங்குகள் செய்வது என்று ஆரம்பித்து விடுவார்கள்.இல்லாவிட்டால் பாட்டி வைத்தியம்.                                                   ...

நமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி?

Image
                              நாம் உண்ணும்  உணவுகள் கலோரியால் மதிப்பிடப்படுகிறது.பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது எவ்வளவு கலோரி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.கடும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக கலோரிகளும்,வளரிளம் பருவத்தினர் குழந்தைகள் என்று கலோரிகளின் தேவை வேறுபடும்.கீழே அளவுகள் தரப்பட்டுள்ளன. குழந்தைகள் (2-6 வயது)------------------1200-1800 கலோரி             (7-12 வயது)------------------1800-2000 இளம்பருவத்தினர் –ஆண்கள்---------------2500                    பெண்கள்---------------2200 வயது வந்தோர்- ஆண்கள்-(உடல் உழைப்பு –2400                    ...

வாக்குமூலம் -பெண் பாலியல் தொழிலாளி

Image
   என் கணவர் வேலை செய்யுமிடத்தில் பழக்கமாகி வேறொரு பெண்ணுடன் போய் விட்டார்.அம்மா வீட்டிலும் ஒன்றுமில்லை.ஒரே ஒரு சகோதரி மட்டும்தான் .குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது.அங்கே இங்கே கடன் வாங்கி விட்டேன் .கடனை அழைக்க வழி தெரியவில்லை. அப்போது ஒரு அக்கா வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.அவரிடம் என் கஷ்டங்களை சொல்லிக் கொண்டிருந்தேன்."நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா?" தன்னுடன் பாலியல் தொழிலுக்கு வருமாறு என்னை அழைத்தார்.அவ்வளவு பணம் வரும் ,இவ்வளவு பணம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.அவரை பற்றி எனக்கு தெரியாது டவுனுக்கு வேலைக்கு போவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.நான் மறுத்துவிட்டேன். சில மாதங்களுக்கு பிறகு கஷ்டம் அதிகமாகிவிட்டது.வட்டி கட்டக்கூட முடியவில்லை.நானே அந்த அக்காவை தேடித் போனேன்.ஆரம்பத்தில் தவறு செய்கிறோமே என்று கஷ்டமாக இருந்தது.என் குழந்தைகளை நினைத்துப்பார்த்தேன் .பின்னர் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இரண்டு மாதம் போயிருக்கும் எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் குடிகாரன் நேராக தேடி வந்துவிட்டான்." எனக்கு உன்னை பற்ற...

இணையத்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கிறதா?

Image
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சாபக்கேடு.ஆண்டுதோறும் தொடர்ந்து இவை அதிகரித்து வருகின்றன.1990-ஆம் ஆண்டு 9518 ஆக இருந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 2009-ல்   21397 ஆக அதிகரித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் இது.                             பெருநகரங்களில்தான் கற்பழிப்புகளும்,பெண்களுக்கெதிரான குற்றங்களும் மலிந்துள்ளன.பல வல்லுநர்களும் நகரமயமாதலை முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.பணி காரணமாக பெண்கள் தனியாக வாழ்வது நகரங்களில் அதிகம்.குறிப்பிட்ட வயதில் உள்ள ஆண்களும்  அதிகம்.                             வீட்டைவிட்டு வெளியில் தங்கி பணிபுரியும் ஆண்களிடம் சகவாசம் காரணமாக போதைப்பழக்கங்கள் உள்பட பல்வேறு சீரழிவுகள்.இந்தியாவில் குற்றங்களின் தலைநகர...

மனித மேம்பாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம்.

Image
                            தனி மனிதன் ஒருவன் தன்னை மேம்படுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த வரம் புத்தகங்கள்.இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இயற்கை அல்லது எழுத்தாளர்கள்.எப்படி எடுத்துக்கொண்டாலும் புத்தகத்தின் ஆற்றலை மட்டும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.                            வரலாற்றை நமக்கு தருபவை புத்தகங்கள்.சரித்திரத்தை மாற்றிக்காட்டியவையும் எழுத்துக்களே! தனி மனிதனை மட்டுமன்றி நாட்டை உயர்த்தவும் இவை பயன்பட்டன.புரட்சியை தூண்டின.கிளர்ச்சியை உருவாக்கின! புத்தகங்களே மாற்றத்தின் திறவுகோல்.                            பள்ளிப்பாட்த்தை தாண்டி கல்வி புத்தகங்களில்தான் இருக...

மின்னல் வேகத்தில் திருடப்பட்ட என்பதிவு -தமிழ்மணம் பதில்

Image
பெண்மைக்குறைவு-ஆண்மைக்குறைவு- நரம்புத்தளர்ச்சி   என்ற பதிவை   திரட்டிகளில் இணைத்துவிட்டு வெளியில் சென்று விட்டேன்.இரண்டு மணி நேரம் கூட இருக்காது என்று நினைக்கிறேன் .தமிழ்மணத்தை பார்த்தபோது எனது இடுகை வேறொருவர் பதிவாக முதல் பக்கத்தில் இருந்தது.அந்த பதிவை சுட்டிப்போனால் சரவணன் எழுதி வெளியிட்டதாக ஓடிக்கொண்டிருக்கிறது.சுத்தமாக காபி.எனக்கு சிரிப்புதான் வந்தது.இவ்வளவு வேகமாகவா ? அதுவும் இருப்பதை அப்படியே!                                                              நெருக்கமில்லாத தம்பதிகள் அதிரும் மணவாழ்க்கை பதிவில் என்று குயபிட்டிருந்தால் அதுவும் அப்படியே இருக்கிறது.என் பதிவில் பெண்மைக்குறைவு பற்றி எழுதிவிட்டு , ஆண்மைக்குறைவு , நரம்புத்தளர்ச்சி பற...

நம் உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்.

Image
சில நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்ட்தென்று தெரியவில்லை.இன்னும் நீங்கள் இதை கேட்டிருப்பீர்கள்.வாயின் ஓரங்களில் சிறிதாக கொப்புளம் ஏற்பட்டிருக்கும்.பல்லி ஒண்ணுக்கு போய்விட்ட்து என்பார்கள்.மிகச் சரியாக பல்லி அந்த இட்த்தில்தான் ஒண்ணுக்கு போக வேண்டுமா?                                அது ஒரு மூட நம்பிக்கைதான்.நிறைய இடங்களில் நான் கேட்ட்துண்டு.நானும் அதையே நம்பிக்கொண்டிருந்தேன்.மேற்சொன்னமாதிரியான கொப்புளங்கள் வந்தால் கொஞ்சம் உஷாராக வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து விட்ட்து என்று அர்த்தம்.                                நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது அடங்கியிருக்கும் கிருமிகள் தனது வேலையை ஆரம்பித்து விடுகின்றன்.பல்லி ஒண்ணுக்கு போவதும் அப்படித்...