என் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரபல பதிவர் அதிரடி
அவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆம்.அவரேதான்.அவருடன் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
அது சுவையானது.என்னுடைய சிறு வயதில் என் தாயார் எழுந்திரு என்றது என் காதில் எழுத்து என்று விழுந்துவிட்ட்து.அப்போதிருந்து அதை பிடித்துக் கொண்டு விட்டேன்.ஆரம்ப்ப் பள்ளியில் சேர்த்தார்கள்.’அ’ எழுத சொன்னால் நான் ‘எ’ என்று எழுதினேன்.அப்போதிருந்து எங்கேயாவது எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.எந்த பஸ் ஸ்டாண்ட்,தியேட்டர் பாத்ரூமிலும் எழுதாமல் வந்த்து இல்லை.
வலையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?
மூக்குப்பொடி வாங்கிய பேப்பரை படித்த போது கூகுள் இலவசமாக பிளாக் தருவது தெரியவந்த்து.இலவசமாக தரும் எதையும் நான் விட்ட்தில்லை.என் வாழ்வில் திருப்பம் நிகழ்ந்த்து.அப்புறம் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன்.இதோ இப்போது பிரபல பதிவர்.
பிரபல பதிவர் என்பதற்கு என்னதான் இலக்கணம்?
இங்கே பொறாமை பிடித்தவர்கள்தான் அதிகம்.அதனால் பிரபல பதிவர் என்று நானே சொல்லிக் கொண்டேன்.மற்றவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் விடிந்து விடும்.தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.
உங்களுக்கும் ஓட்டுபோட குழு இருப்பதாக சொல்லப்படுகிறதே?
ஒருவர் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ள முடியும்.எனக்கு நான்கு இருக்கிறது.நண்பர்களும் இருக்கிறார்கள்.எங்கே குழு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மகளிர் குழுக்கள் இருக்கிறது.பாராளுமன்றத்தில் குழுக்கள் இருக்கின்றன.ஆண்கள் சுய உதவிக் குழுக்கள்கூட இருக்கிறது.
ஒரு நாளைக்கு எத்தனை பேர் படிக்கிறார்கள்.? நீங்கள் STAT வெளியில் காட்டவில்லையே?
ஏற்கனவே வயிறு எரிந்து சாகிறார்கள்.அதை பார்த்தால் அவ்வளவுதான்.பதிவர்கள் எல்லாம் வெந்து போய்விடுவார்கள்.எத்தனை பதிவர்கள்,எத்தனை குடும்பங்கள் யோசித்துப் பாருங்கள்.அந்த பாவம் எனக்கு வேண்டாம். அப்புறம் நான் மட்டும்தான் பதிவிட வேண்டும் திரட்டிகள் என் ஒருவனுடைய பதிவை மட்டும் காட்டிக் கொண்டிருக்க முடியாது.
பதிவுலகம் வந்த பிறகு உங்கள் மனைவி பிரிந்து விட்ட்தாக கூறப்படுகிறதே?
கணவன் மனைவி ஊடல் சங்க காலத்தில் இருந்து வரும் ஒன்று.கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஒரு வருடம்கூட ஆகவில்லை.நேற்றுகூட நான் பேசினேன்.அது கிராம்ம் என்பதால் டவர் வீக்காக இருக்கும்.காது கேட்ட்தோ,இல்லையோ அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை.நேரில் போகலாம் என்றால் பதிவுலகை விட்டு செல்ல முடியவில்லை.லட்சக்கணக்கான வாசகர்களை ஏமாற்றியதுபோல ஆகிவிடும்.அவர் நல்லவர்.கல்யாணமாகி ஆறு மாதங்கள் டி.வி.பார்த்துக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தார்.நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தொல்லை தரமாட்டார்.என்னுடைய வளர்ச்சி பொறுக்க முடியாமல் ஏதேதோ கிளப்பிவிடுகிறார்கள்.
உங்கள் எழுத்து புகழ் பெற்றதற்கு என்ன காரணம்?
நான் NHM WRITER-ல் எழுதுகிறேன்.சுலபமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் ka என்று டைப் செய்தால் ‘க’ என்று வருகிறது.



Comments
Post a Comment