சீச்சீ.......பதிவர்களுக்கு ஏனிந்த பொறாமை?
டீனேஜில் அதிகமாக இருக்கும் உணர்வுகளில் ஒன்று பொறாமை.அந்த வயதில் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதும் அவனை மாதிரி அழகில்லையே,பணம் இல்லையே என்று மனம் பொறாமை கொள்வதும் இயல்பு..அடுத்தவன் வளர்ச்சி கண்டு,தன்னால் முடியவில்லை என்ற எண்ணத்திலும் தோன்றுவது.
பொறாமை மனிதனிடம் இயல்பாக காணப்படும் உணர்வுதான்.சில விலங்குகளுக்கும் உண்டு.குழ்ந்தை முதல் மனிதனிடம் இயல்பாக காணப்பட்டாலும் ஏற்கனவே கூறியது போல டீனேஜில் அதிகமாக இருக்கும்.எதிர்பாலினரை கவரும் எண்ணம் அதிகமிருப்பது ஒரு காரணம்.
நமக்கு பொதுவான பிரச்சினைகள் சில இருக்கின்றன.அந்த இளமைப் பருவத்தை தாண்டியும் நாம் முதிர்ச்சியடையவதில்லை என்று தோன்றுகிறது.நல்ல நண்பர் வட்டமோ,வாசிக்கும் பழக்கமோ,குடும்ப சூழலோ இல்லாமல் மனம் அந்த வயதை தாண்டி பக்குவம் வராமல் தனக்கும் தான் சார்ந்தவர்களுக்கும் கேடு விளைவித்துக் கொள்பவர்கள்தான் அதிகம்.
அவனுக்கு ஓட்டு போடாதே.கமெண்ட் போடாதே என்பதும்,ஒருவருக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்வதும் நம்மை முந்திவிடுவார்களோ என்ற பொறாமை உணர்வால் வருவதுதான்.கூந்தல் இருப்பவர்கள் அள்ளி முடிகிறார்கள்,உனக்கென்ன? ஒருநாளைக்கு இரண்டு,மூன்று பதிவு போட்டால் அது அவர்களுடைய உழைப்புதான்.அதற்கான பலனை பெறுகிறார்கள் அவ்வளவே!
திருவள்ளுவர் அழுக்காறாமை என்ற அதிகாரம் படைத்தார்.பாரதி மரணத்துக்கு காரணமான அதிர்ச்சி தரும் என்றார்.பொறாமை நன்மை தரும் என்று யாரும் சொல்லவில்லை.முதிர்ச்சியில்லாத்தால் வருவதுதான்.வளர விடாமல் தடுக்க முயற்சி செய்து பார்த்துவிட்டு வளர்ந்த பின்னால் ”நண்பேண்டா” சொல்வதும் இயல்பானது.
சோதிடர்களிடம் கேட்டால் அதெல்லாம் பன்னிரெண்டு கட்ட்த்துக்குள் இருக்கிறது.யார் தலையெழுத்தையும் யாரும் மாற்ற முடியாது என்கிறார்கள்.சில கெடுதல்களின் வலிமையை குறைக்க பரிகாரம் இருக்கிறது.இன்னொருவன் அழிந்து போக பில்லி,சூன்யம் எல்லாம் உண்மையல்ல!
உடல்நலம் சார்ந்து பொறாமை உணர்வு அதிகமாக இருக்கும்போது வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும்.பசி குறையும்.சரியாக சாப்பிட முடியாத்தால் நுண் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராது.தூக்கமின்மை ஏற்படலாம்.இயக்குநீர்கள் சுரப்பு தாறுமாறாக இருக்கும்.பொறாமையில் மனிதனுக்கு நல்லது இல்லையா? இருக்கிறது.அடுத்தவனை போல நாமும் வளரவேண்டுமென்று தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தால்,உழைக்கத்துவங்கினால் நல்லது.

Comments
Post a Comment