மாத்தியோசி@ஓட்டவட நாராயணன் என்றொரு (ர)ஜீவன்.




                             இணையம் புதுப்புது உறவுகளை தந்து விடுகிறது.பேருந்து நிலையத்தில்,ஏதோ ஒரு கூட்ட்த்தில் சிலரை பார்த்தவுடன் பிடித்துப்போகிறது.சிலர் மீது வெறுப்பு ஏற்படுகிறது.ஒரு சொல்லோ,வரியோ,முகபாவமோ,பாவனையோ,கருத்துக்களோ ஒருவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

                             அன்றிரவு பனிரெண்டு மணிக்கு கிளம்பி சென்னை செல்லவேண்டும்.நண்பர்களுடன் காரில் பயணம்.அவர்கள் சேர தாமதமாகிக்கொண்டிருந்த்து.ஏதாவது எழுத எண்ணி வலைப்பதிவுகள்,பதிவர்கள் மற்றும் நான் என்று ஒரு பதிவை எழுதினேன்.யோசிக்க தேவையில்லை என்பதால் அந்த தலைப்பு.

                              வேகமாக இரண்டு,மூன்று கமெண்ட் வந்து விழுந்த்து.நான் கேள்விப்பட்டிராத பெயர்கள் இருந்தன.அதில் ஒன்று மாத்தியோசி! அது சரி,முன்னுக்கு வருகிற எண்ணமில்லையா? என்று கேட்டிருந்தார்.நண்பர்கள் வந்துவிட்டார்கள்.கிளம்பிவிட்டேன்.

                              இரவு பயணம் முழுக்க யோசித்துக் கொண்டே இருந்தேன்.யாராக இருக்கும்? இப்படியே இருந்து விடப்போகிறீர்களா? என்று யார் கேட்பார்கள்? நான் முன்னுக்கு வரவேண்டுமென்று ஆசைப்படும்,தோழமை கொள்ள முன்வரும் இந்த ஜீவன் யார்? ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருக்கும்போது என்னிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு கோரிக்கை?


                                                                             ஒருவர் முன்னேற வேண்டுமென்று யார் விரும்புவார்கள்? அண்ணன்,தம்பி,உறவுகள்,நண்பர்கள் இவர்களில் யாராவது இருக்கலாம்.யாரையாவது இழுத்து கீழே தள்ளினால்தான் நம் முகம் தெரியும் என்று குழிபறிக்கும் வேலைகளை செய்யும் ஆட்கள்தான் அதிகம்.நிச்சயமாக நமக்கு தெரிந்த ஆளாகத்தான் இருக்கும்.

                             எழுதுவதில் ஆர்வமுள்ள நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு.அவர்களில் யாராவது இருக்கும்.சரி பார்ப்போம்.சென்னையில் ஸ்பென்சரில் உள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் போனால் அரத பழைய கணினிகள்.தொடர்பு சரியில்லை.படுத்திவிட்ட்து.

                             வீட்டுக்கு வந்த பின்னால் பார்த்தேன்.பாரீஸில் இருக்கும் ஆளென்று பிறகு தெரிந்த்து.இருவருக்கும் தோழமை ஏற்பட்டுவிட்ட்து.தமிழ்மணத்தில் மாத்தியோசி –அறிமுகம் என்ற பதிவை சுண்டிப் போனால்,அங்கே போட்டோவுடன் ஆளைப் பார்த்தேன்.ஜனாவின் தளம் அது.ஜனா தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பது தெரிந்து சந்தோஷம்.

                             எங்கள் வீட்டு பக்கத்தில் கார்த்தி என்கிற பையன்.அண்ணா,அண்ணா என்று என்னுடன் சுற்றிக்கொண்டிருப்பான்.அவனைப்போன்றே முகம்.அப்போதிருந்து தம்பியாக்கிக் கொண்டுவிட்டேன்.அண்ணே,தம்பி என்று மாத்திமாத்தி எங்கள் உறவு வளர்ந்து கொண்டிருக்கிறது.

                             காலையில் ஆறு மணிக்கு டாஷ்போர்டு பார்த்தால் ரஜீவனின் பதிவு இருக்கும்.தினசரி ஓட்டும்,கமெண்டும் போடுவதுதான் முதல் வேலை.தம்பியின் பதிவுகள் நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் ரகம்.சிலது நன்றாக இருக்கும்,சிலது சுமார்.எப்படியிருந்தாலும் ஓட்டு போட்டுவிடுவேன்.என் சமாச்சாரமோ வேறு.

                                ரஜீவனுக்கு நான் ஓட்டு போட்டு தூக்கிநிறுத்த வேண்டிய அவசியமில்லை.நான் மற்ற தளங்களுக்கு செல்வது அபூர்வம்.(நீ உருப்பட்ட மாதிரிதான்).ஆனால் எங்கே பார்த்தாலும் ஓட்டும் கமெண்டும் போட்டுக்கொண்டிருக்கிறான்.
                                வலைப்பதிவுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களில் அவனும் ஒருவன்.எவ்வளவு நீளம் எழுதினாலும் முழுமையாக படித்துவிட்டு ஒருவரியில்,வார்த்தையில் சொல்லிவிடுகிறான்.அவன் எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டும்.

                             

Comments

Popular posts from this blog

உயிரற்ற உறவுகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்