Posts

Showing posts from March, 2011

ஆணும் ஆணும்

Image
ஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள்ள வேண்டும்.எப்போதாவது உங்களை மாதிரி இருக்கும் நண்பரிடம் பேசலாம்.இம்மாதிரி வாழ்க்கையை உலகில் சுமார் 5சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தங்களுடைய பழக்கங்களை,ஆர்வங்களை வெளியே பேசினால் கேவலமாக பார்ப்பார்கள்.                              அவர்கள் தனது ஜோடியுடன் அவசரமாக லாட்ஜில் ரூம் எடுப்பார்கள்.சில நேரம் குழுவாக! போலீஸ் பயம் வேறு.அப்படி ஒரு பழக்கம்.ரகசிய உலகத்தில் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் ஆணும்,பெண்ணும் அல்ல! ஆணும் ஆணும்! ஆமாம்,அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.                               நகரில் ஒரு பெரிய வீட்டில் குடும்பம் நட...

என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்

Image
அவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள்.                                                                                                                உங்கள் நண்பர்களைப் பற்றி கூறுங்கள்.அவர்களும் பதிவர்களா?                            ...

நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டுமா?

Image
                              நம் அனைவருக்கும் ஒரு மைய ஆசை உண்டு.எப்போதும் வெற்றியாளராக இருக்க வேண்டும்.ஆம், ஆனால் பல நேரங்களில் வறட்டு கௌரவம்,வீண் பிடிவாதங்கள்,பொறாமை போன்றவற்றால் நல்ல உறவுகளை இழந்து விடுகிறோம்.சில ஒட்டவைக்க முடியாமல்கூட போய்விடுகிறது.நம் குழந்தைகள் தவறு செய்தால் சில காலங்களில் ஏற்றுக்கொள்ளும் மனம் மற்றவர்களுக்கு வழி விடுவதில்லை.                                                                            வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ...

உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?

Image
நமக்கு சில திறமைகள் அவசியமானவை.அதில் முக்கியமானது கேட்பது( listening). யாராவது பேசும்போது நான் கேட்பேனே என்று சொன்னால் மன்னிக்கவும்! அது உண்மையல்ல.தொடர்ந்து படித்துவிட்டு சூழ்நிலைகளை கவனித்துப்பாருங்கள்.உங்களுக்கு புரியும்.இந்த ஒரு திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டாலே நீங்கள் மற்றவர் விரும்பக்கூடிய மனிதர். ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை , துக்கங்களை கொட்டும்போது , புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா ? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும் , நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும் , மனக்கோளாறுகள் , மனநோய்கள் அதிகரித்திருக்காது , தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம். பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை ? ஏனென்றால் , நாம...

என் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரபல பதிவர் அதிரடி

Image
                             அவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆம்.அவரேதான்.அவருடன் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.   தாங்கள் எழுத்தாளரான பின்னணி என்ன?                                அது சுவையானது.என்னுடைய சிறு வயதில் என் தாயார் எழுந்திரு என்றது என் காதில் எழுத்து என்று விழுந்துவிட்ட்து.அப்போதிருந்து அதை பிடித்துக் கொண்டு விட்டேன்.ஆரம்ப்ப் பள்ளியில் சேர்த்தார்கள். ’ அ ’ எழுத சொன்னால் நான் ‘எ ’ என்று எழுதினேன்.அப்போதிருந்து எங்கேயாவது எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.எந்த பஸ் ஸ்டாண்ட்,தியேட்டர் பாத்ரூமிலும் எழுதாமல் வந்த்து இல்லை. வலையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?            ...

உங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எப்படி?

Image
                                                                                          வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில் , உறவுகளில் , பணியிடங்களில் , குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன.        ...

தமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா?

Image
மக்கள் தொகை பெருக்கல் விகித்த்தில் அதிகரிக்கும்போது உணவு உற்பத்தி கூட்டல் விகித்த்தில் அதிகரிக்கும் என்றார் பொருளாதார அறிஞர் மால்தஸ்.ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கையும்,திரையரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டேபோகிறது.                                  தமிழ் சினிமா வெள்ளிவிழாக்களை தொலைத்து விட்ட்து.இளைய தலைமுறைக்கு வெள்ளிவிழா என்றால் என்னவென்றே தெரியாது.திரையரங்குகளில் உள்ள  பழைய வெள்ளிவிழா கேடயங்களை காட்டி விளக்க வேண்டியிருக்கும்.தொழில் தேய ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்ட்து.                                   “மண்டபமாக மாற்றி விடலாம் என்றால் என் பையன் ஒத்துக்கொள்ள மாட்ட...

பதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி!

Image
சென்னை,மார்ச் 33                                 தமிழ் பதிவர் ஒருவர் வெளியிட்ட புத்தகத்தால் தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது பற்றி கூறப்படுவதாவது,                               தமிழில் 1800 பக்கம் கொண்ட நாவலை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் மலைநாட்டான்.அதை அவரே பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகை வியப்படைய வைத்த்து வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.சம்பவத்தன்று காலை ’ காக்கா ’ என்ற இலக்கிய பத்திரிகையை புரட்டியபோது தன்னுடைய ’ பாம்பின் அப்பா அம்மா ’ நாவலுக்கு 20 பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.                       ...