காது கொடுத்து கேளுங்கள் ;கடவுள் ஆகலாம்!
ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம். பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை? ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாக இருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில் இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விர...