Posts

Showing posts from June, 2014

கோழியின் தொடைக்கறி(சிக்கன் லெக்பீஸ்) மோகம் சரியானதா?

Image
நண்பர்களுடன் பிரியாணி சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது.உடன் வந்தவர்கள் லெக்பீஸ் கேட்க நான் மட்டும் வேண்டாம் என்று சொன்னேன்.கோழிபிரியாணியில் நம்மவர்களிடையே மிக விருப்பமானது தொடைக்கறி.இப்போது சாலையோர கடைகளில் விளம்பரத்திற்காக தொங்கிக் கொண்டிருக்கின்றன.கண்ணைப்பறிக்கும் கலரில் சாப்பிடத்தூண்டுகின்றன. செயற்கை வண்ணங்கள் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.கடையில் சில்லி சிக்கன் சாப்பிட்டு விட்டு வந்த ஒருவரை நாக்கை நீட்டுமாறு நண்பர் சொன்னார்.நாக்கு முழுக்க வண்ணம் பூசப்பட்டிருந்தது.உணவுக்குழாய் முழுக்க சிவப்பு வண்ணம் படிந்திருக்கும் நிலையை கற்பனை செய்யுங்கள். தொடைக்கறி சாப்பிட்டால் கறி சாப்பிட்ட திருப்தியைத்தரும் என்று தோன்றுகிறது.ஆனால் மேலை நாடுகளில் தொடைக்கறியை விரும்பாமல் ஏற்றுமதி செய்துவிடுவதாக ஒரு தகவலைப்படித்தேன்.நமக்கு அதிக விருப்பம் தரக்கூடியது சில இடங்களில் ஒதுக்கப்படுகின்றன.சுவையா? ஊட்டச்சத்தா? என்பதில் நாம் சுவைக்கு முக்கியத்துவம் தருகிறோம். கோழியின் தொடைக்கறியை ஒப்பிடும்போது நெஞ்சுப்பகுதியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.விழிப்புணர்வு உள்ளவர்கள் நெஞ்சுப்பகுதியை வ...