Posts

Showing posts from April, 2014

10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.

+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் எழுதாத குறைதான்.``எவ்வளவு மார்க் வரும்`` என்று நூறுதடவையாவது கேட்டு விட்டிருப்பார்கள்.மன அழுத்தம் கூடி பசிகூட மறந்துபோகும்.தேர்வு எழுதியவர்கள் கலக்கத்தில் சுற்றிக்கொண்டிருப்பார்கள். Read more »

பெண்ணுக்கு வீடே கதியென்று இருக்கலாமா?

Image
அந்தப்பெண்ணுக்கு இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கலாம்.பேருந்தில் தனது அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு வந்தார். கல்யாணமானதிலிருந்து எங்கேயும் வெளியே கூட்டிட்டுப் போகவே இல்லையாம் ! அவரது குரலில் ஆச்சர்யமும் பயமும் கலந்திருந்தன.திருமணகாத பெண்ணுக்கு தனது எதிர்காலம் குறித்த கலக்கத்தை ஏற்படுத்திருக்கூடும். இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான்.நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைப்பதையே சிறை என்கிறோம்.பெண்களில் சிலருக்கு வீடு அப்படி ஆகிவிடுகிறது.அவர்களின் மனதைப் பாழ்படுத்திவிடுகிறது.அதுவும் மணமான புதுப்பெண்ணிற்கு இது அதிர்ச்சியை அளித்திருக்க வாய்ப்புண்டு.மணவாழ்வில் தொடர்ந்து ஒட்டாத அணுகுமுறை வளர வளரக்கூடும். பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமாக இருக்கவேண்டும்.தோஷத்திற்கு தகுந்தது என்றோ,பணம்,வரதட்சணை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தந்திருக்கலாம்.ஆணுக்கு விருப்பமில்லாவிட்டாலும் சமாதானப்படுத்தியிருக்கலாம்.இன்னமும் வீட்டுக்கு அடங்கிய பையன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அல்லது ஏதாவது மனக்குறை இருக்கலாம்.பேசியபடி வரதட்சணை முழுமையாக கொடுக்காமலும் இருக்கலாம். தம்பதிகள் இரண்டு ஆண்...

உணவுகெட்டுப்போவது எப்போது?

Image
நண்பர் ஒருவர் சாம்பார் வாங்க கடைக்கு ஓடினார்.வீட்டிலிருந்து எடுத்து வந்த சாம்பார் கெட்டுப்போய்விட்டது.வாசனையை வைத்து அவர் கெட்டுப்போய்விட்டதாக முடிவு செய்தார்.சிலருக்கு இந்த அனுபவம் இருக்கக்கூடும்.வாசனை வந்த பின்னர்தான் உணவு கெட்டுப்போனதாகக் கருதமுடியுமா? அல்லது அதற்கு சில நிமிடங்கள்,மணித்துளிகள் முன்பே கெட்டுப்போனதாக எடுத்துக்கொள்ளலாமா? இரண்டாவதாகச் சொன்னதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.கோடைகாலத்தில் உணவுப்பொருள் கெட்டுப்போவது அதிகம்.நுண்ணியிரிகள் வளர சரியான காலநிலை நிலவுவது ஒரு காரணம்.சில நாட்களில் காலையில் தயாரித்த உணவை இரவு சாப்பிடும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.இதைத்தவிர்ப்பதே பாதுகாப்பானது. கோடையில் சாம்பாரில் புளி கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள்.சுவை கொஞ்சம் மாறும் என்றாலும் உடல்நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.கிராமங்களிலிருந்து கோயிலுக்குப் போனால் கட்டுச்சோறுதான்.புளிசாதம் இல்லாமல் புண்ணியப் பயணம் இல்லை.விரைவில் கெட்டுப்போகாது என்பதுதான் காரணம்.தேங்காய் சேர்க்கப்பட்ட உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் என்று தவிர்ப்பார்கள்.அவரைப்பருப்பு போன்றவையும் விரைவில் வாசனை வந்துவிடும் புளிச்ச...