Posts

Showing posts from December, 2013

சமையல் உப்பும் உடல்நலமும்

Image
அறுபது வயதைக்கடந்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் வயலில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார்.உடன் வந்திருந்த மாமன் மகன் சொன்னான் வியர்வை வெளியேறிவிட்டால் ஒரு நோயும் கிடையாது.வியர்வை உப்புக்கரிக்கக் காரணம் சோடியம்.உடலின் நீர்சமநிலையை காக்கும் பணியைச் செய்வது இதுதான். சமையல் உப்பு   சோடியம்குளோரைடுஎன்பது உங்களுக்குத்தெரியும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொன்னார்கள்.நாம் சுவைக்காகத்தான்உப்பைச்சேர்த்துக்கொள்கிறோம்.வயிற்றுப்போக்கின்போது சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைத்தயாரித்து பருகவேண்டும்.இதில் உப்பு உயிர்காக்கும் பணியைச்செய்கிறது.நம்முடைய உணவுப்பொருட்களில் சோடியம் இருக்கிறது. உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்று கேட்பார்கள்.உப்பு ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறார்கள்.அதிக உப்பு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக உள்ளது.நோய் வந்தபிறகு உப்பைக்குறைத்து சாப்பிடுவார்கள்.உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கைமுறையில் உப்பைக்குறைவாகவே பயன்படுத்தவேண்டும். சில குடும்பங்களில் வழக்கமாகவே மிகக் கு...

இரத்தப்பரிசோதனை-அறியாத உண்மைகள்.

Image
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் இரத்தப்பரிசோதனைக்கு பரிந்துரைப்பதுண்டு.சில தினங்களாக காய்ச்சல் எனும்போது டைபாய்டு பரிசோதனை அவசியம்.மலேரியா பரிசோதனைக்கும் எழுதிக்கொடுக்கலாம்.நாம் சொல்லும் அறிகுறிகளை வைத்து தீர்மானிப்பார்கள்.சில இடங்களில் மருத்துவர்களைவிட இரத்தப்பரிசோதனை மையங்கள் அதிகமாக இருக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் காலையிலேயே வரிசையில் நிற்பார்கள்.அவர்களுக்கு சாப்பிடும்முன்பும் பின்பும் சோதனை செய்யவேண்டும்.வீடுகளுக்கே நேரில் வந்து இரத்தமாதிரி சேகரித்துச்செல்லும் மையங்களும் இருக்கின்றன.பொதுவாக பணத்திற்காக (கமிஷன்) டெஸ்டுகளை எழுதுகிறார்கள் என்று குற்றச்சாட்டும் இருக்கிறது.ஆனால் எதிர்பாராவிதமாக அறிகுறியற்ற நோயோ,குறைபாடோ கண்டறியப்பட்டதும் உண்டு. ஒருவர் இரத்தப்பரிசோதனை மையம் வைத்திருந்தார்.அவர் கொடுக்கும் சம்பளத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை.வசதியில்லாத ஒரு பையனைப் பிடித்து இரத்தம் எடுக்கக் கற்றுக்கொடுத்துவிட்டார்.பரிசோதனை செய்ய யாராவது வந்தால் போன் வரும்.வந்தவருக்கு என்ன அறிகுறி இருக்கிறதென்று கேட்கச் சொல்வார்.இரத்தம் மட்டும் எடுப்பானே தவிர சோதனை செய்யத்தெரியாது. முதலாள...

கோதுமை பிரெட்-உணவும் விழிப்புணர்வும்

Image
வகுப்புத்தோழனை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.இம்மாதிரி நேரங்களில் தேநீராவது குடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது.அடுமனை(பேக்கரி) ஒன்றுக்குள்நுழைந்தபோது ஒரு அறிவிப்பைக்கவனித்தேன்.கோதுமை பிரெட் இங்கே கிடைக்கும் என்று அறிவிப்பு சொன்னது.பலர் தற்போது கேட்பதால் தயாரிக்க ஆரம்பித்திருப்பதாக சொன்னார்கள்.மைதா பற்றிய விழிப்புணர்வின் அடையாளமாக இதைக்கருதலாம். இன்றைய விளம்பர உலகில் விழிப்புணர்வு மூலமாகத்தான் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.இணையதளங்கள்,வார,மாத இதழ்கள்,நாளிதழ்கள் உள்பட மைதா குறித்த தகவல்கள் வெளிவந்தன.பாரம்பரிய உணவுகள் குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.கேழ்வரகு பணக்காரர்களின் உணவாக மாறிவருவதாக தினத்தந்தியில் படித்தேன்.கூழ் தயாரிப்பது பற்றி ஒருவர் கேட்டிருக்கிறார். ஓட்ஸ் பற்றிய பதிவில் கேழ்வரகு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.கேழ்வரகுக் கூழ் நம்முடைய கலாச்சாரமாக இருந்து வந்திருக்கிறது.வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது கேழ்வரகுக்கூழ்தான்.சோளத்தை இடித்து நொதிக்கவைத்து தயாரிப்பார்கள்.ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோளம் கலக்காத கூழ் தருவார்கள்.குடித்தவுடன் உடல்நலம் ...

மனிதர்கள் தனிமையால் கெட்டுப்போவார்களா?

Image
எழுத்தாளர் சுஜாதாதான் என்று நினைக்கிறேன்.தனித்து,விழித்து,பசித்து இருந்தால்? என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சுஜாதாவின் பதில்-டெத்து.விவேகானந்தருடையது ஆன்மீக சமாச்சாரம்.தனிமையில்தான் ஞானம் தோன்றமுடியும் என்று சொல்வார்கள்.பாரதியும் கூட தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா! என்று பாடினார். தனிமை ஒழுக்கக்கேட்டை வளர்க்கும் என்பதும் நிஜம்தான்.நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது.தனிமை ஒருவரை அறிவாளியாக்கலாம்.கெட்டுப்போகவும் செய்யலாம்.குடும்பத்தினர் உள்ளிட்ட யாருடைய கண்காணிப்பும் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? ஒருவர் தீய பழக்கங்களுக்கு ஆளாவதற்கு சாத்தியங்கள் அதிகம். தனிமைப்படுத்துவது பொதுவாக தண்டனையாகக் கருதப்படுகிறது.ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கும் பஞ்சாயத்துகள் உண்டு.இது ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக இருக்கும்.அலுவலக அரசியலில் தனிமைப்படுத்துவது ஒருவரை வழிக்குக் கொண்டுவருவதற்கான வழி!பருவ வயதில் தனிமை ஆபத்தான காரணியாகவே பார்க்கப்படுகிறது. தனிமையில் இருக்கும் பெண் அதிகம் தொல்லையை சந்திக்கக்கூடும்.முதியவர்களுக்குத் தனிமை கொடுமையானது.கிட்டத்தட்ட நெருப்பில் இருப்பது போன்ற அனுபவம்தான்.ஆனால...

சுங்கச்சாவடியை ஏமாற்ற பயணிகளை வதைப்பதா?

Image
வேலூரிலிருந்து ஓசூர் போகும் பேருந்து அது. பேருந்தின் நடத்துனர் விறைப்பாக சொல்லிக்கொண்டிருந்தார்."நாட்றம்பள்ளி பஸ் ஸ்டாண்டுக்குள்ள போகாது.பைபாஸ் இறங்கிக்கனும் ".சிலர் கேட்டுவிட்டு போய்விட்டார்கள்.பைபாஸில் இறங்க விருப்பம்   உள்ளவர்கள் மட்டும் ஏறிக்கொண்டார்கள்.அடுத்து ஒருவர் "பர்கூர் போகுமா?" என்று கேட்டார்."பைபாஸ் மட்டும்தான்" என்றார் நடத்துனர்.அவரும் அரைமனதுடன் ஏறிக்கொண்டார். பேருந்து அவ்வளவு வேகமில்லை.வாணியம்பாடிக்குப் பிறகு கொஞ்ச தூரத்தில் பேருந்து நெடுஞ்சாலையை விட்டு பாதை மாறிப் பயணித்தது.பயணிகளுக்கு காரணம் புரியவில்லை.சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்ப்பதற்காக இருக்கும் என்று ஒருவர் சொன்னார்.உறுதியாக யாரும் சொல்லவில்லை. நூறு ரூபாய்க்காக அல்லது அற்ப விஷயங்களுக்காக பாதை மாறுபவர்களை நினைத்துக்கொண்டேன். ஒட்டுனருக்குப் பாதை பழக்கமில்லாமல் இருக்கவேண்டும்.திருப்பத்தூர் செல்லும் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.பயணிகள் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். பயணி ஒருவர் நாட்றம்பள்ளி இறங்க வேண்டியவர்.ஓட்டுனரிடம் சென்று வழி காட்ட ஆரம்பித்தார்."ரைட்ல போங்க! லெப்ட்ல போங்க...