Posts

Showing posts from September, 2013

மைதா உணவுகள்-ஆதரவும் எதிர்ப்பும்

Image
உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான். ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல் நிபுணர்கள்தான் தேவை. நீரிழிவு நோயாளிக்கான உணவு, இதய நோயாளிக்கான உணவு என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கூடுதலான கலோரி தேவை.ஒல்லியாக இருப்பவர்களுக்கும்,உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வேண்டும். ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.நிலத்தடி நீர் இருந்தவரை பப்பாளி,கொய்யா,வாழை,அகத்தி,நெல்லி போன்றவை வாய்க்கால் ஓரமாகவே கிடைத்துவிடும்.இன்றைய நிலை அப்படி இல்லை.நம்முடைய உணவில் தேவையான உயிர்ச்சத்துக்கள் இருக்கிறதா? என்பது நமக்குத்தெரியாது. அன்றாட உணவில் ஏ வைட்டமின் எவ்வளவு இருக்கவே...

குழந்தைகளிடம் ஏனிந்த மாற்றம்?

Image
இரவு எட்டுமணிக்கு மேல் பேருந்தில் பயணம் செய்வதில் விவரிக்க முடியாத சுகம் இருக்கிறது.அதிக கூட்டம் இருக்காது.சிலுசிலுவென்ற காற்று வீசிக்கொண்டிருக்கும்.இன்று நான் பயணித்த பேருந்தில் மனதை வருடும் பாடல்கள் வேறு ஒலித்துக்கொண்டிருந்தது.சில நேரங்களில் இரண்டுபேர்,மூன்றுநபர் இருக்கையிலும் ஒருவரே ஆக்கிரமித்துக்கொள்ளலாம்.தூங்கிமேலே விழுபவர்கள் தொல்லை இல்லை. எதிர் இருக்கையில் கணவனும் மனைவியும் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்கள்.குழந்தைக்கு சுமார் மூன்று வயது இருக்கும்.தூங்கிவிட்டது.குழந்தைக்கு வாங்கிய தின்பண்டத்தை தாய் விரலில் கோர்த்துக்கொண்டிருந்தார்.இரண்டு கையில் பத்துவிரல்களிலும் நுழைத்தாகிவிட்டது.ஒவ்வொரு விரலிலும் மெதுவாக கடித்துத் தின்ன ஆரம்பித்தார். சிலநேரங்களில் குழந்தையாக மாறிவிட மனம் விரும்புகிறது.சந்தோஷமான தருணங்களில் நம்மையே நாம் கொஞ்சிக்கொள்ளஆசைப்படுகிறோம்.கள்ளம்கபடமில்லாமல்வயல்வெளியை,பாடலை,மேகத்தை,நிலவை பிஞ்சுபோலரசித்துக்கொண்டிருப்போம்.உலகம்இனியதாகத்தெரிகிறது.குழந்தைகளுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.ஏனெனில் நாமும் குழந்தையாக மாறிப்போகிறோம். நண்பர் ஒருவர் தன்னுடைய குழந்தையின...

கணவனோ,மனைவியோ விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கிறது?

Image
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துபோகவேண்டும் என்று சொல்கிறார்கள்.விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்றும் சொன்னார்கள்.பதிவுலகம் அறிந்த திண்டுக்கல் தனபாலன் முந்தைய பதிவுக்குஇப்படி கருத்துரை இட்டார், விட்டுக்கொடுத்(த்)தால்...? எதை விட்டுக்கொடுக்கிறார்கள்? தன்னுடைய கருத்து சரியல்ல என்று ஒப்புக்கொண்டு அமைதியாகிவிடுவார்களா? பொறுத்துப்போகவேண்டும், விட்டுக்கொடுக்கவேண்டும்,அட்ஜஸ்ட் செய்து போகவேண்டும் என்பதெல்லாம் காலம்காலமாக இருந்து வருகிறது.கவனித்துப்பார்த்தவர்கள் இதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டிருப்பார்கள்.இவையெல்லாம் பெண்ணுக்காக சொல்லப்பட்டு வருகின்றன.குடும்பப் பிரச்சினையின் போது பலரும் பெண்ணைப்பார்த்துத்தான் விட்டுக்கொடுத்துப்போ என்கிறார்கள். சுமார் இருபது ஆண்டு காலமாக பொறுமையாக விட்டுக்கொடுத்து வந்தவரை எனக்குத்தெரியும்.கணவரின் நடத்தையை ஊரில் உள்ளவர்களும் விமர்சிக்கவே செய்தார்கள்.அவர்களுக்கு ஒரே மகன்.மகனுக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு தாயும் மகனும் பக்கத்து நகரத்தில் வாடகை வீடு பார்த்து போய்விட்டார்கள்.போகும்போது அவருக்கு சொல்லவில்லை. சொந்தவீட்டை விட்டு வந்து விட்டதைப்...