Posts

Showing posts from July, 2013

எய்ட்ஸ் இப்படியும் பரவுமா?

Image
இந்தியாவில் 1986   ஆம் ஆண்டு சென்னையில்தான் எச்.ஐ.வி கண்டறியப்பட்ட்து.சில ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விஷயம் இது.தொலைதூர வாகன ஓட்டுநர் அவர்.எய்ட்ஸ் நோய் முற்றிய நிலையில் இருந்தார்.அப்போது எச்.ஐ.வி கட்டுப்படுத்தும் மருந்துகள் இல்லை.(எச்.ஐ.வி என்பது வைரஸ்,எய்ட்ஸ் என்பது பல்வேறு நோய்களின் கூட்டு.எச்.ஐ.வி யால் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு குறைந்த பின்னர் இந்நிலை ஏற்படும்).மேலும் தகவல்களுக்கு பிரபல இடுகைகள் பகுதியில் உள்ள எய்ட்ஸ் பற்றிய இடுகையை படிக்கவும். எய்ட்ஸ் நிலையில் இருந்த வாகன ஓட்டுநர் விஷயத்திற்கு வருவோம்.மருத்துவமனையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள்.அவரை வீட்டுக்கு கொண்டுவராமல் நேரடியாக சுடுகாட்டில் கொண்டுபோய் போட்டுவிட்டார்கள்.சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது உத்திரப்பிரதேச கிராமத்தின் செய்தியை படித்தேன்.எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப்பிறந்த குழந்தைகள் சுடுகாட்டில் வாழ்க்கை நட்த்துகிறார்கள்.அவர்களுக்கும் எச்.ஐ.வி இருக்கலாம் என்ற கலக்கத்தில் உறவினர்களால் ஒதுக்கப்பட்டார்கள்....

குழந்தை வளர்ப்பில் முக்கியமானவை!

Image
லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள்.எதிரில் நிற்பவன் ஏழை என்று தெரியும்.அவன் கடன் வாங்கித்தான் கொடுக்கவேண்டும்.அடுத்தவன் கஷ்டம் நமக்கு முக்கியமல்ல்! பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.தங்களது கீழ்த்தரமான ஆசைகளுக்காக உயிர்களைப் பலியாக்குவது பற்றி கவலைப்படுவதேயில்லை.இன்னும் இன்னும் இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள விஷயம் இதுதான் –நாம் சக மனிதனை எந்திரமாகவே பார்க்கிறோம்.நமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்று கருதுகிறோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்திரமாக நினைத்துக்கொள்வதில் பிரச்சினை துவங்குகிறது.நான் விரும்பும் படிப்பை படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.தாங்கள் சொல்லும் பையனை,பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.அவர்களுக்கு நல்லது எது என்று எனக்குத்தெரியும் என்பார்கள்.குடும்பங்களைக் கவனிக்கும் பலருக்குத்தெரியும்.பெரும்பாலும் இவையெல்லாம் தந்தையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். தனது மனைவிக்கு,குழந்தைகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்கு பொருட்டே அல்ல! மனத்த...

குழந்தைகளிடம் வளர்க்கவேண்டிய திறமைகள்.

Image
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியம் கட்டாயத்தில் இருக்கிறார்கள். கிடைக்கும் நேரத்தையும் தொலைக்காட்சிப்பெட்டி விழுங்கித் தொலைக்கிறது.தாத்தா பாட்டியும் அருகில் இல்லை.பக்கத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளை வசீகரிக்கும் கதைகள் தெரியாது. அவர்களும் தொலைக்காட்சிப்பெட்டியே கதியாக கிடக்கிறார்கள்.இன்று குழந்தைகளையின் நிலை பரிதாபகரமானது.வாய்ப்பு கிடைத்தால் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு விலகிவிடவே முயற்சி செய்கிறார்கள்.இன்று பலரிடமும் காணப்படும் நோய்க்கூறுகளுக்குக் காரணம் சமூகத்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்தான். நல்லவன் கெட்டவனை பிரித்தரிய முடியவில்லை.யாரை நம்பி என்ன பேசுவதென்று தெரியவில்லை.உடனிருப்பவர்களை புரிந்து கொள்வது எளிதாக இல்லை.நாலுபேர் மதிப்பதில் பெரும்பிரச்னை நிலவுகிறது.விவாகரத்துக்கள்அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.மதிப்பீடுகள் சரிந்துகொண்டிருக்கின்றன.புரிந்துகொள்ளும் திறனையும்,பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வலிமையையும் உருவாக்குவதே முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஒருவர் பேசுவதை பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டாலன்றி அவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.கவனமாக கேட்பது என்பது அவசி...