Posts

Showing posts from June, 2013

உணர்ச்சிகளை வெளியே கொட்டுங்கள் .

Image
கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும்."படபடவென்று பேசுபவனை நம்பலாம்,உம்மென்று இருப்பவனை நம்பமுடியாது."ஆமாம்.படபடவென்று பேசுபவர் வெளியே கொட்டிவிடுகிறார்.அங்கே எதுவுமில்லை.அவர் தனது கருத்தை ஒளித்துவைக்கவில்லை.அவர் யார் என்று நமக்கு புரிந்துவிடுகிறது.நமக்கு அவர்மீது சந்தேகமோ கலக்கமோ இல்லை.அவரை நம்புவதில் சிரமம் இல்லை.அங்கே உள்ளே எதுவும் இல்லை!?என்பது நமக்குத்  தெரிந்துவிடுகிறது.பேசாமல் இருப்பவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரிவதில்லை.நம்மைப் பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.அவர் ஒரு புதிராக தெரிகிறார்.ஒருவேளை காத்திருந்து தாக்கவும் செய்யலாம்.நாம் சஞ்சலப்படுகிறோம்.புறக்கணிக்கத் தயாராகிறோம். குட்டீஸ் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சி சன் டி.வி.யில் வந்து கொண்டிருக்கிறது.இமான் அண்ணாச்சி தொகுத்து வசங்குகிறார்.பையன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறான்.மட்டுமரியாதை இல்லாமல் பேசுவது என்று சொல்வோமில்லையா? அப்படி பேசுகிறான்.பக்கத்தில் இருக்கும் பாப்பா பெரியவர்களை அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறாள்.அதிகப்பிரசங்கித் தனத்தை கண்டித...

கள்ளக்காதல் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா?

Image
தில்லியில் நடந்த வன்புணர்ச்சியின் அதிர்ச்சி அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை.சமீபகாலமாக செய்திகளில் கவனம் கொண்டிருப்பவர்கள் இவற்றை அறிந்திருக்க முடியும்.பாலியல் குற்றங்களும் கள்ளக்காதலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கொலைக்கான காரணங்களில் முதலிடம் வகிக்கும் அளவுக்கு கள்ளக்காதல் பெருகியிருக்கிறது.கள்ளக்காதலுக்கான காரணங்களைத்தாண்டி அதன் தாக்கத்தை கவனித்து வந்திருக்கிறேன்.                                கள்ளக்காதல் போன்றதொரு நிகழ்வை உற்று நோக்கும் வாய்ப்பு கிட்டியது.அலுவலகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.இருவரும் மணமாகி குழந்தைகள் இருந்தார்கள்.வேலையைக்காரணம் காட்டி மற்றவர்கள் வருவதற்கு முன்பே அலுவலகத்தில் இருந்தார்கள்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.வேலை நேரத்தை தாண்டியும் வெளியேறாமல் கிடந்தார்கள்.நிகழ்ச்சிகளில் புகைப்பட்த்துக்கு ஒன்றாக நின்று கொண்டார்கள்.பல நாட்கள...

நெல்லிக்கனி-சி வைட்டமின் -திரிபலா

Image
ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் குறித்த அச்சம் நிலவுகிறது.இது குறித்த விரிவானபதிவை இத்தளத்தின் வாசகர்கள் ஏற்கனவே படித்திருக்க வாய்ப்புண்டு.படிக்காதவர்கள் சுட்டியை அழுத்திப் படிக்கவும். மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா உஷார்! புதிய ஆய்வு முடிவு ஒன்றை படித்தேன்.தற்போதுள்ள காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களை சி வைட்டமின் அழித்துவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.இதே வைட்டமின் ஆண்டி ஆக்ஸிடெண்டாக செல் சிதைவை தடுக்கிறது என்று சென்ற பதிவில் பார்த்தோம். ஆயிரம் மில்லிகிராம் வரை உணவில் சேர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.ஆனால் தினமும் மாத்திரைகளாக உண்பதை பலரும் ஆதரிக்கவில்லை.உணவு மூலம் அதிக அளவு சி வைட்டமினை பெறுவது இன்று நமக்கு முக்கியமான சவால்.உணவின் மூலம் குறைந்த செலவில் எப்படி பெறுவது? என்று ஒருவர் கேட்டார்.எலுமிச்சை விலை குறைவுதான்.மேலும் இதைப்பற்றிய சிந்தனையின் போது எனக்கு நினைவுக்கு வந்தவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார். அதியமான் வள்ளலான கதை நமக்குத்தெரியும்.தமிழ் மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமென்று நினைத்திருக்கவேண்டும்.தனக்கு கிடைத்த நெல்...