அழகில் மயங்கி வலையில் விழுந்து........
ஆறு வாரங்களில் அல்ல! ஒரே நாளில் முகம் வெள்ளையாக மாற வழி உண்டாவென்று ஒருவர் தேடியிருக்கிறார்.டாஷ்போர்டை பார்க்கும்போதெல்லாம் தினமும் யாராவது முகம் வெள்ளையாக அல்லது சிவப்பாக என்று தேடியிருப்பதை பார்க்கிறேன்.கூகுள் தேடலில் இந்த வார்த்தைகள் என்னுடைய பதிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.ஆறே வாரங்களில் முகத்தை சிகப்பாக்கிய அழகு க்ரீம் என்ற பதிவு அது.ஆறு வாரம் கூட பொறுக்கமுடியாதுஒரே நாளில் நடந்தாகவேண்டும் என்ற விருப்பம் ரொம்பவே அதிகம்.நடைமுறைக்கு ஒத்துவராத சிந்தனை என்பது மனிதர்களை அதிகம் துன்பத்தில் ஆழ்த்தும் விஷயம்.பெரும்பாலானதனி மனித துயரங்களுக்கு காரணமும் இதுதான். ...