Posts

Showing posts from November, 2012

பெண்ணுக்கு உண்மையில் சாதி உண்டா?

Image
கலப்பு மணங்களில் சரியான புள்ளி விபரம் தெரியவில்லை.எந்த வகுப்பைச் சார்ந்த பெண்கள் அதிகம் கலப்பு மணம் புரிந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.நான் பார்த்த பெரும்பாலான திருமணங்களில் பெண்கள் முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.அவர்கள் தைரியமாகவே முடிவெடுத்தார்கள்.ஆனால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுதான். பெண்  சாதியை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.சாதி  தந்தையை சார்ந்து வருகிறது.ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது.அவனுக்கு பெருமையைத்தருகிறது.கௌரவத்திற்காக பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டார்கள்.பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிக கீழான நிலையில் இருக்கிறாள்.இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் ஜாதிதான் . குழந்தையிலிருந்தே துவங்கி விடுகிறது.எந்த வீட்டிலும் ஆண் குழந்தைக்கு கிடைக்கும் மரியாதை ஒரு பெண்ணுக்கு கிடைப்பதே இல்லை.பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்கு மனக்குறையையும் சுமையையும் தரும் பொருளாகவே பெண் பார்க்கப்படுகிறாள்.கருவில் சிதைக்க சட்டத்திற்கு அப்பா...