Posts

Showing posts from January, 2012

சப்பாத்தியா? சாதமா?

Image
                           நீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்தி போதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமை தின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.                             உடல் பலத்திற்கும் மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்கு பசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிர நெல் விளைச்...

நண்பனின் பொங்கல் வேட்டை.

Image
சினிமாவுக்கு போகலாம் என்று அழைத்தான் நண்பன்.  5 காட்சியா?   டேய் நீ எந்த காலத்துலடா இருக்கே? அதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு! அவனவன் 4 காட்சி ஓட்டறதுக்கே கண்ணுமுழி பிதுங்கி கிடக்கிறான் . பழைய காலத்து ஆளாக இருக்கிறானே என்று  நினைத்திருக்க வேண்டும்.   அதெல்லாம் போகில எரிச்சாச்சு   என்றான்.நான் சொன்னேன், இதற்கும் போகிக்கும் என்ன சம்பந்தம்? மழைக்காலம் முடிந்து ஈரத்தில் பழைய துணிகள் போன்றவற்றில் பூஞ்சை தொற்றியிருக்கும்.அவற்றை எரிப்பதற்கு சரியான நேரம் இது.ஒரு மாதம் கழித்து வெயில் ஆரம்பித்துவிடும் . போதும் நிறுத்து! சினிமாவுக்கு போகலாமா? வேண்டாமா?                                கிராமத்தில் போரடிப்பது போல ஆகிவிடுகிறது.ஒலிப்பெருக்கி சத்தம் பல நேரங்களில் இனிமையாக இல்லை.கோயிலின் முன்னால் மாடுகளை கொண்டுவந்து நிறுத்தினால் இவ்வளவுதானா? என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறது.எனக்கும் சினிமாவுக்கு போகலாம் என்று தோன்றியது. சரி,எந்த ப...

சோர்வாக இருக்கிறதா?

Image
                               சில நேரங்களில் சோர்வாக இருக்கிறது.இரவு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் கூட சோர்வு ஏற்படும்.கடுமையான உடல் உழைப்பு,அலைச்சலுக்கு பின்பு சோர்வு வர வாய்ப்பிருக்கிறது.உடல் நலக்குறைபாடுகளில் இப்படி இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து உடல் சோர்வு,மூச்சு வாங்குதல்,தோல் வெளுத்து காணப்படுதல் போன்றவை இருந்தால் ரத்த சோகையாக இருக்கலாம்.இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இப்பிரச்சினைக்கு ஆளாகி சிரமப் படுகிறார்கள்.பிரசவம் தொடர்பான சிக்கல்களுக்கு ரத்த சோகை முக்கிய காரணமாக இருக்கிறது.                                 சுவாசித்தல் பணியில் பங்கேற்பது ஹீமோகுளோபின்.ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பதும்,கழிவை கொண்டுவருவதும் இதன் முக்கிய பணி.ஹீமோகுளோபின் குறைவையே ரத்தசோகை என்கிறோம்.உடல் இய...

ஹோட்டலில் அசைவம் சாப்பிடுவீங்களா? உஷார்!

Image
கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போவது அதிகரித்து வருகிறது.இரண்டு பேரும் சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை.சில நாட்களில் சமைப்பதை விடவும் ஹோட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள்.சும்மா ஒரு சேஞ்சுக்காக சாப்பிடலாம் என்று வருபவர்களும் உண்டு.இப்படி முடிவு செய்யும்போது பெரும்பாலானவர்கள் அசைவத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.                              ஹோட்டலில் கிடைக்கும் அசைவம் சுத்தமானதாக ,ஆரோக்கியமானதாக இருக்குமா? நான் பெரும்பாலும் அசைவத்தை தவிர்த்துவிடுவேன்.மற்ற உணவுகளை விட வெகு சீக்கிரம் கெட்டுப்போகும் தன்மை அசைவ உணவுகளுக்கு உண்டு.விலை அதிகம் என்பதால் ஹோட்டல் வைத்திருப்போரும் விற்பனை ஆகாவிட்டாலும் வீணாக்க விரும்ப மாட்டார்கள்.மிளகு நஞ்சை எடுத்துவிடும் என்பார்கள்.கொஞ்சம் அதிகம் சேர்த்து சூடாக்கி பணமாக்கி விடுகிறார்கள்.                    ...

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?-இரண்டு

Image
தெனாலிராமனின் சூடுபட்ட பூனையை நினைவிருக்கிறதா? சூடான பாலை சுவைத்து நாக்கை சுட்டுக்கொண்ட பூனை மீண்டும் பாலை வைத்தால் குடிக்கவில்லை.சமூக பயம் என்பது இப்படித்தான்.கடந்தகால அனுபவங்களே பயத்தை ஏற்படுத்துகின்றன.செல்லுமிடமெல்லாம் வெற்றியை கண்டால் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் மனம் ஆட்படாது.ஒதுங்கிப்போகாமல்,ஒளிந்து கொள்ளாமல் சமூகத்தை எதிர்கொள்வோம்.நிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.மாலை நேரம்.லேசான இருட்டு படியத்துவங்கி இருக்கிறது.கவனிக்கவில்லை.பாம்பை மிதித்திருப்பேன்.இருதயத்துடிப்பு அதிகமாக உடல் வியர்த்து கொடூர அனுபவம்.அவ்வளவு நெருக்கமாக பாம்பை அதுவரை நான் பார்த்த அனுபவம் இல்லை.                                 அதே வழியில் நான் நடமாடித்தான் ஆக வேண்டும்.அந்த இட்த்தை கடக்கும் போதெல்லாம் என்னிடம் அதே விளைவு.சில காலம் வரை அப்படி இருந்து கொண்டிருந்த்து.கவனிக்கவும் சில காலம்தான்.பிறகு சரியாக போய் விட்ட்து.இதே போன்ற அனுபவங்கள் ...

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?

Image
போபியா( phobia) என்று சொல்கிறோம்.சரியான காரணமின்றி அச்சப்படுவதை குறிப்பிடலாம்.இதில் பல வகை உண்டு.நாம் ஒவ்வொருவரும் கவனித்திருப்போம்.சிலர் மட்டும் ஒதுங்கியே இருப்பார்கள்.நான்கு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கும் போது எதுவும் பேச மாட்டார்கள்.திருமணங்களை,விழாக்களை தவிர்ப்பார்கள்.எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது இவர்களுக்கு ஆகாத காரியம்.மற்றவர் முன்னால் செல்போனில் கூட பேச மாட்டார்கள்.                                வளரிளம் பருவத்தில்தான் இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.குழந்தையிலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணம்.மற்றவர்கள் போல நாம் இல்லை என்று மனம் விழ,நண்பர்களின் கேலியும்,கிண்டலும் நிலையை இன்னும் மோசமாக்கும்.கல்லூரியில் இருந்தாலும் விவாதங்களில் பங்கு கொள்ள மாட்டார்கள்.             ...

எமன் அலையும் சாலைகள்.

Image
 சாலை விபத்துக்களுக்கு தனிக் குணம் உண்டு.அநியாய மரணம் என்பார்கள்.கேள்விப்படும் அனைவரிடமும் அதிர்ச்சியை உருவாக்கும்.பலர் கேள்விப்பட்டிருப்பார்கள்.சில விபத்துக்களை நேரில் பார்த்திருப்பார்கள்.நான் பார்த்த விபத்துக்கள் எத்தனை இருக்கும் என்று நினைவில் இல்லை.இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமர்ந்திருக்கிறது எங்கள் கிராமம்.நாளிதழ் படிக்க தினமும் நெடுஞ்சாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வரவேண்டும். ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும் சாலை.பல மாநிலத்து வாகனங்களும் இருக்கும்.விபத்துகளும் பலவகைப் பட்டதாக இருக்கும்.சின்னஞ்சிறு குழந்தை முதல் ஒரே நேரத்தில் குடும்பமாக இருபது பேர் பலியான விபத்து வரை நேரில் பார்த்திருக்கிறேன்.என்னுடைய நெருங்கிய நண்பர்களை விபத்தில் பறி கொடுத்த கொடூர சம்பவங்களை  சந்தித்ததுண்டு.கால் மட்டும் தனியாக,முகம் சிதைந்து தலை நசுங்கி,சதைத்துண்டுகளாக என்று இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது. ஏராளமான விபத்துகளை நேரில் கண்ட அனுபவத்திலிருந்து அதற்கான காரணங்களையும் விவாதிப்பார்கள்.வேகமாக செல்லும் ஒரு லாரியிலிருந்து தம்ளர் ஒன்று கீழே விழுந்து விட்டது.கி...

குடும்ப வன்முறை.

Image
                              குடும்ப வன்முறைக்கு சட்டம் வந்தபோது எதிர்க்குரல்களும் வந்தன.எத்தனை பேர் பயன் அடைந்திருப்பார்கள்? பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என்று சொன்னார்கள்.ஆனால் சட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் பல்வேறு ஆய்வுகளை பின்னணியாக கொண்டிருக்கிறது.இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது.                                 எழுத்தறிவு வளரவளர பண்பும் வளர வேண்டும்.ஆனால் படிப்போ,மற்ற தகுதிகளோ இந்த விஷயத்தில் மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.குடும்ப வன்முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொதுவானதாக இருக்கிறது.ஏழை,பணக்காரன்,சாதி,மதம் எந்த வேறுபாடுகளும் இல்லை .                ...

ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.

Image
                              இரவு நேரங்களில் தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவு செரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில் சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.                               பசுவின் தயிரை கொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்த நினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிக கொழுப்பை  உடையது.சில வீடுகளில் குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரே வகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டு வாங்...