Posts

Showing posts from December, 2011

எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.

Image
                              இன்னும் ஓராண்டு கழிகிறது.நாட்காட்டி மாற்றுகிறோம்.இங்கே எதற்காக பிறந்திருக்கிறோ என்று தெரியாது.மனிதனுக்கு ஆகச் சிறந்த வேலை நாட்களைக் கொல்வது என்று ஆகிவிட்ட்து.ஒவ்வொரு நாளும் முடியும்போது நம்மால் பலன் பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதை சிந்திப்பதுண்டா? போகட்டும்.ஒரு வருட்த்தில் அப்படி ஏதாவது செய்திருக்கிறோமா?                               இன்னொருவனை முந்துவது பற்றி,வீழ்த்துவது பற்றி மனிதன் யோசிக்கிறான்.ஏமாற்றி பணம் ஈட்டுவது பற்றி,பொய்,வஞ்சகம்,கீழ்த்தரமான தந்திரங்கள்,சக மனிதன் மீது வெறுப்பு இன்னும் இன்னும் மனதில் குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறான்.குப்பை அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது.தானும் அமைதி இழந்து அடுத்தவனையும் கெடுக்கிறான்.      ...

உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?!

Image
                              உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.                               மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல்  உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நானும் காலையில் நடக்கிறேன்,என்னென்னவோ பயிற்சி ...

ஹார்மோன்களின் விளையாட்டு

Image
                                                                          உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை ஹார்மோன்கள்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருபத்தாறு வயது நண்பருடன் சேர்ந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை கொலை செய்து விட்டார்.மாணவர் 14 வயது காதலியுடன் பேசிக் கொண்டிருந்த்தை பையன் பார்த்துவிட்டான்.வெளியே சொல்லிவிடுவான் என்ற கலக்கத்தில் கொன்று விட்டார்கள்.                                 இம்மாதிரி பிரச்சினைகள் இன்று அதிகரித்து வருகிறது.சம்பவம் பற்றி பேசிக...

நம்மை உணரும் தருணங்கள்.

Image
                               புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது சிலர் உணர்ச்சிவசப் படுகிறார்கள்.சினிமா பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காட்சியில் அழுகிறார்கள்.ஆனால் படம் பார்க்கும் அத்தனை பேரும் அழுவதில்லை.நாவல் படித்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள்.கலை,இலக்கியமெல்லாம் எல்லோரிடமும் ஒரே பாதிப்பை ஏற்படுத்துமா?                                 தோப்பில் முஹம்மது மீரானின் கடலோர கிராமத்தின் கதை நாவலை பலர் படித்திருப்பார்கள்.வெளியாகி அதிக விற்பனையான நாவல் என்று பேசிக்கொண்டார்கள்.ஒரு இரண்டாயிரம் இருக்குமா? தமிழ் எழுத்தாளன் நிலை அப்படித்தான்.கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து கொண்டிருந்தேன்.50 வயதைக்கடந்த ஒருவர் பேச்சுக் கொடுத்தார்.         ...

காளான் சாப்பிட்டால் என்ன நன்மை?

Image
                              நல்ல பசியாக உணர்ந்தேன்.நண்பர் ஒருவருடன் அருகில் உள்ள மெஸ் நோக்கி போய்விட்டோம்..நண்பர் காளான் தோசை சாப்பிடலாம் என்றார்.கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன்,காளான் நான்கையும் தட்டில் வைத்து ஒன்று தேர்வு செய்யச்சொன்னால்,நான் காளானை தேர்ந்தெடுப்பேன்.காளான் தோசை வந்த பிறகு “இதில் காளானே இல்லை ’’ என்று நண்பன் சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.தோசையில் காளான் மசால் வைத்துக்கொடுத்தால் அது காளான் தோசை. ’’ சிறுசிறு துண்டுகளாக இருக்கும் சார் ” என்று சமாளித்தவாறே சில துண்டுகளை வைத்தார்கள்.சண்டை பிடித்து கேட்டு வாங்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.அவர்களுக்கு அதிக காளான் துண்டுகள் கிடைக்காது.                              இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.நண்பன் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க நான் பால்யகால நினைவுகள...

2011-அதிக வாசகர்கள் படித்த எனது பத்து பதிவுகள்

Image
வலைப்பதிவுகளில் விதம்விதமாக எழுதிக் குவிக்கிறோம்.எம்மாதிரியான பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்த்தன என்பது நமக்கு உதவும்.இவை வாசகர்களின் மனப்போக்கை நமக்கு அறிவிக்கின்றன.அதிகம் படிக்கப் படும் பரபரப்பான அரசியல் பதிவுகளை நான் எழுதியதில்லை.சினிமா குறித்த இடுகைகளும் மிக குறைவு.தனி மனிதனுக்கு பயன் தரும் விஷயங்கள் முதன்மை பெற்றதை உணர முடிகிறது.தலைப்புக்கு அடுத்துள்ள எண்ணிக்கை எத்தனை பேர் படித்தார்கள் என்பதைக் குறிக்கிறது. தொப்பையைக்குறைக்க என்னதான் வழி? -4677                                  பலருக்கு தொப்பை ஒரு பிரச்சினை.அதிக வாசகர்களை கவர்ந்த்தில் ஆச்சர்யம் இல்லை.பல ஆலோசனைகள் இருக்கின்றன.இப்பதிவும் தகவல்களை கூறியது. பெண்களின் வாழ்வைக் கெடுக்கும்வக்கிரங்கள்.- 4272                               ...

சத்திய சோதனைகள்.

Image
                               சத்தியத்தை கடைபிடித்தால் சோதனைக்கு உள்ளாகித்தான் தீர வேண்டுமா?நேர்மையாக இருப்பது பெரிய தவறா? எங்கெங்கும் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடும்போது நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்றால்? அப்படியும் யாரோ ஒருவர் இருக்கவே செய்கிறார்கள்.பிறருடைய ஏளனத்தையும்,நமட்டுச்சிரிப்புக்கும் ஆளாகி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.                                நேர்மை என்பது இன்று சமூகத்திற்கு எதிரான குணமாக பார்க்கப்படுகிறது.லஞ்சம் வாங்கமாட்டேன் என்பவர் ஓநாய்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பவர் போல இருக்கிறார்.கிட்ட்த்தட்ட தனிமைப்படுத்தப் படுகிறார்.ஒதுக்கப் படுகிறார்.அலுவலகத்தில் மனசாட்சி போல நடமாடிக் கொண்டிருக்கிறார்.மற்றவர்களை அந்த மனசாட்சி உறுத்துகிறது.     ...

எலுமிச்சைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

Image
புத்தாண்டு இன்னும் சில பதிவுகளுக்குள் வந்துவிடும்.முக்கியமானவர்களை சந்திக்க போக வேண்டுமானால் வெறும் கையோடு போக முடியாது.நமக்கு எப்போதும் எலுமிச்சைதான் வசதி.கல்யாணம்,கோயில் என்று பயணம் கிளம்புகிறார்கள். சக்கரத்தின் அடியில் எலுமிச்சை வைக்கிறார்கள்.அருள்வாக்கு இல்லாத பகுதிகள் குறைவு.பெரும்பாலும் எலுமிச்சம்பழத்தை மந்தரித்து தருகிறார்கள்.                                 எலுமிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அப்படி என்ன இருக்கிறது அந்த சிறிய பழத்தில்? இத்தனைக்கும் புளிப்பு.சுவைக்கு காரணம் அதில் உள்ள அமிலம்.அஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வார்கள்.உயிர்ச்சத்து( vitamin) சி குறிப்பிட்த்தக்க அளவு இருக்கிறது.வாசனைப்பொருளாக உணவில் சேர்க்கும் பொருளாக மதிப்பு பெற்று விளங்குகிறது.                            ...

மம்பட்டியான் நினைவுகள்.

Image
சிறுவயதில் ம்ம்பட்டியான் கதை கேட்ட நினைவு இன்னும் இருக்கிறது.பெரியப்பா வீட்டில் இருந்தேன்.மலையோர கிராமத்திலிருந்து ஒரு பாட்டி வந்திருந்தார்.அண்ணன்களுக்கு(பெரியப்பா மகன்கள்) அம்மாவைப்பெற்ற பாட்டி.ஒரு கிளியை கூண்டில் அடைத்து எடுத்து வந்திருந்தார்.குச்சி செருகியிருந்த்து.அவ்வளவு உறுதியான கூண்டு இல்லை.                             மனம் முழுக்க கிளியிடமே இருக்கிறது.அதன் அழகை பார்க்க பார்க்க சலிக்கவில்லை. ” கிளி பேசுமா? என்று கேட்டேன். ” சொல்லிக்கொடுத்தால் பேசும்.இன்னும் பழகவில்லை.நேராக காட்டில் இருந்து கொண்டு வருகிறேன். ” எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லாயே என்று கவலையாக போய்விட்ட்து.அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டேன்.                               பாட்டி ம்ம்பட்டியான் கதை சொல்ல ஆரம்பித்தார்.உணர்ச்சிப்பெருக்கோடு சொல்லிக் ...