Posts

Showing posts from November, 2011

எய்ட்ஸ்-பாலியல் தொழிலாளி முதல் குடும்பத்துப் பெண் வரை.

Image
கண்ணிவெடியைப்போலத்தான் ஆகிவிட்ட்து.தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்று சொல்வார்கள்.கலாச்சாரத்தில் பெருமை கொள்ளும் இந்தியாவின் நிலை பல விஷயத்திற்கு பொருந்தும்.அதில் எய்ட்ஸ் முக்கியமானது.1986 ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாலார்களிடம் முதன்முதலாக எய்ட்ஸ் கண்டறியப்பட்ட்து.                              நாம் யோசிக்க ஆரம்பித்த்து அதற்குப்பிறகுதான்.ஆனால் உலகம் 1981 ஆம் ஆண்டிலிருந்தே விழித்துக்கொண்ட்து.நம்முடைய கலாச்சாரத்திற்கு எய்ட்ஸ் அச்சுறுத்தலாக இருக்காது என்று பலரும் நினைத்தார்கள்.அப்புறம் உலகம் இந்தியாவை தெரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை.                               இப்போது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் நிற்கிறது.ஆண்,பெண்,குழந்தைகள் என்று எல்லாமும் இதில் அடக்கம்.துவக்கத்தில் ...

டென்ஷனைக்குறைக்கலாம் வாருங்கள்

Image
                                                                  டென்ஷனா இருக்கு சார்! பெரும்பாலும் குறித்த நேரத்தில் எதிர்பார்த்த ஒன்று நடக்காதபோது,பணியை முடிக்க முடியாத நிலையில் புலம்புவார்கள்.எனக்கு ஒருவரை தெரியும்.அலுவலகம் செல்லும் வழியில் யாரைப்பார்த்தாலும் விடமாட்டார்.மனிதருக்கு பேசுவதில் அப்படி ஒரு பைத்தியம்.தெரிந்தவர்கள் தவிர்க்கப் பார்த்தாலும் விடமாட்டார்.எதிரில் வந்தவர் நேரம் ஆகிறதென்று கிளம்பிப் போன பின்னர் மணி பார்த்து வண்டியை முறுக்குவார்.                                     ...

முடி கொட்டுகிறதா?

Image
  எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!"  " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை. வழுக்கை என்பது பெரும்பாலும்  பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம். இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்ட...

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்

Image
                                நாம் வளமாகவும் நலமாகவும் இருக்க எண்ணுகிறோம்.பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்கிறோம்.உடலையும் மனதையும் புதுப்பித்துக்கொள்ள தூங்குகிறோம்.பணம் சம்பாதிப்பது,சாப்பிடுவது,தூங்குவது இதையெல்லாம் தாண்டி பொழுதுபோக்கு என்று இருக்கவே செய்கிறது.                                 ஓய்வும் கிடைக்கத்தான் செய்கிறது.சில நேரங்களில் நேரம் சலிப்படையச் செய்கிறது.போர் அடிக்கிறது என்று சொல்வோம்.அப்போது ஒவ்வொருவரும் சில செயல்களை செய்கிறார்கள்.சிலருக்கு புத்தகம்,சிலருக்கு இசை,தொலைக்காட்சி,சினிமா,நண்பர்கள்,இணையம் என்று பலவாறாக உண்டு.                         ...

குடிப்பவர்களை அடித்துத் திருத்த முடியுமா??

Image
அன்னா ஹசாரே சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் பாவம்.குடிப்பவர்களை மூன்றுமுறை எச்சரிக்க வேண்டுமாம்.அப்புறம் கடவுள் முன்னால் சத்தியம் வாங்க வேண்டுமாம்.திருந்தாவிட்டால் கம்பத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடிக்கவேண்டும் என்கிறார்.ஏராளமான கண்டன்ங்கள்.தலீபான் தீவிரவாதிகள் ஸ்டைல் தண்டனை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி சொன்னார்.                                ஹசாரே சொல்கிற மாதிரி திருத்த முடிந்துவிட்டால் சமூகத்தில் பல பிரச்சினைகளை சரி செய்து விடலாம்.இப்படி அவர் வயதில் இருக்கும் விஷயம் தெரியாதவர்கள் நினைக்க வாய்ப்பிருக்கிறது.மதுவில்,போதை மருந்துகளில் எப்போதாவது பயன்படுத்துபவர் முதல் அடிமையானவர்கள் வரை வித்தியாசங்கள் உண்டு.                                என்னுடைய அனுபவத்தில் பல குடும...

வாயுத்தொல்லை,அலர்ஜிக்கு பெருங்காயம்.

Image
பெருங்காயம் வாசனைப்பொருளாக சேர்க்கப்படுவதாக பலர் கருதுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் வாத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு.நமது பாரம்பர்ய உணவில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்வது கடினம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டவை.தவிர்க்க கூடாதவை.                              அன்று மதியம் இரண்டு மணியை தாண்டிவிட்ட்து.நல்ல பசி.நானும்,பால்யகால நண்பனும் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.நெடுஞ்சாலையில் ஒரு தாபா ஓட்டலை பார்த்தவுடன் சாப்பிட்டுவிட்டு போகலாமென முடிவு செய்து உள்ளே நுழைந்துவிட்டோம்.உள்ளே போய் உட்கார்ந்தவுடன் நான் பீர் குடிக்கப் போகிறேன் என்றான் நண்பன்.அவன் முடிவு செய்தால் செய்த்துதான்.                              கூலிங் பீர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அன்று முழுக்க மின் ...

கூரியர் சர்வீஸ்-இப்படியும் நடக்கலாம்.

Image
                           கூரியர் சர்வீஸ் வந்து பெருவெற்றி பெற்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு நாட்டின் அரசு நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளிவிட்ட்து.தபால் துறையை விட மக்கள் அதிகமாக இவற்றை நாடினார்கள்.குறைந்த பணியாட்களை வைத்துக்கொண்டு நாம் எதிர்பார்க்கிற மாதிரி சேவையை வழங்கியது.இப்படி கூரியர் சர்வீஸ் நட்த்தும் சிலரை எனக்குத் தெரியும்.                            நண்பர் ஒருவர் உறவினருக்கு புதிய சட்டை ஒன்றை அனுப்பினார்.விலை உயர்ந்த பிரபல கம்பெனியின் சட்டை அது.ரகசியமாக இருக்கட்டும் என்று அவருக்கு சொல்லவில்லை.பிறந்தநாள் வாழ்த்து கவிதையும் உள்ளேயே வைத்து விட்டார்.அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.பொறுக்காமல் போன் செய்து விசாரிக்க அப்படி எதுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.       ...

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.

Image
                             பொதுமக்கள் பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் பேருந்துகள் தொடர்பானது.சுத்தம் இல்லாத பேருந்துகள்,ஓட்டை உடைசல்,மழை வந்தால் உள்ளே கொட்டும்.தூசு அலர்ஜி உள்ள நோயாளிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.அப்புறம் விலை ஏறினாலும் ஏறாவிட்டாலும் எப்போதும் தீராத பிரச்சினை சில்லறை பிரச்சினை.                              ஒரு ரூபாய்,50 பைசாவெல்லாம் நட்த்துனர்களுக்கு பணமே கிடையாது.யாராவது கேட்டுவிட்டால் அற்பமான புழுவைப்போல பார்ப்பார்கள்.ஆனால் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்தால் பேருந்தை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.நட்த்துனர்கள் மனப்பாடம் செய்துவிட்ட வார்த்தை ’’ மீதி சில்லறை அப்புறம் தருகிறேன் ”. சரியான சில்லறை வைத்துக்கொள்ளுங்கள்,என்னிடம் சில்லறை இல்லை! ”    ...

வேலை செய்யும் இடமும் மன நலமும்

Image
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடம் நாம் வேலை பார்க்கும் இடம்தான்.சுவரை வைத்தே சித்திரம் என்பது போல வேலையை வைத்தே எல்லா நலமும். தொழில் செய்பவர்களை விடுத்து  அரசாங்கத்திலோ தனியார் நிறுவனத்திலோ பணியாற்றுகிறோம்.வேலைச் சூழல் வீட்டில் எதிரொலிக்கிறது. அதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டுவதும் உண்டு.மன நலத்தை நிர்வகிக்கும் காரணிகளில் வேலை செய்யும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.அதிலும் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அதி முக்கியமானவர்.நல்லவராக இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.அவருடன் ஏற்படும் உரசல்களே பலருடைய மன நலத்தை குறி வைக்கிறது. பெரும்பாலான அலுவலகங்களில் பொதுவான ஒரு விஷயம் அரசியல்.அரசியல் இருந்தால் கூடவே இருக்கும் குழுக்கள்.நான்கு பேர் வேலை செய்கிறவர்களாகவும்,நான்கு பேர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருப்பார்கள்."வேலை செய்கிறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு! என்று சொல்லப்பட்டது சுத்தமாக பொருந்தும். எமாற்றுகிறவனின் வேலையை அப்பாவி தலையில் கட்டுவார்கள்.சில நல்ல அதிகாரிகளும் இம்மாதிரி வேலையை செய்வதுண்டு.ஏமாற்ற நின...

பெண்களின் தந்திரங்களும் குழந்தையும்

Image
பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா?  அலுவலகத்தில் சண்டையாகி விட்டது.பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார்.வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார்.நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள்.சங்கடமான சூழ்நிலை.மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய்விட்டார்.வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார்.அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும். குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை.ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் நுழைந்தார்கள்.சங்கடங்கள் கரைய ஆரம்பிக்க இணக்கமான சூழ்நிலை மறுபடியும் வந்து விட்டது.தான் சொன்னால் கணவரோ,மாமியாரோ,மற்றவர்களோ கேட்க மாட்டார்கள் என்று அப்பெண் நினைக்கிறார்.குழந்தையிடம் சொல்லி குழந்தையின் விருப்பமாக சொல்ல வைக்கிறார்.எளிதாக வெற்றி கிட்டி விடுகிறது. காதல் திருமணத்தால் முறைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் உறவுகளும் குழந்தை பிறந்தது தெரிந்தவுடன் பரவசமாகி ஓடுகிறார்கள்.சில  குடும்பங்கள் குழந...

மனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?

Image
   எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம்.ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது.எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும்.மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும்.இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும்.சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது.இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.இவர்களுக்கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன.அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள்.அவை  எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence) நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறார்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகிறார்கள். தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள். சுய மதிப்பு .(self esteem) நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமு...

பெண்களும் ரகசியமும்

Image
திருமணமான சில நாட்களில் நண்பன் புலம்பினான்.எதுவுமே சொல்வதற்கில்லை.எப்படித்தான் நம்பி ஒரு விஷயத்தை சொல்வது? உடனே வெளியே போய்விடுகிறது.எனக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று சொல்ல,அந்த முழு வார்த்தையும் அதே ஏற்ற இறக்கங்களுடன் அக்காவிடம் போய் விட்ட்து.சில நேரங்களில் அம்மாவிடம் போய்விடுகிறது.புது மாப்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள சுற்றத்தினர் ஆர்வமாக இருப்பார்கள்.                                        ரகசியம் என்பதே நம்மிடம் மட்டும் இருப்பதுதான்.இரண்டாவது நபரிடம் அது தங்குமானால் அவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும்.இன்று நாளிதழில் போட்டிருப்பதாக நண்பர் கூறியது ” அரை மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம் ” ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.இது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைதான்.                   ...

பிரபல பதிவர்கள் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?

Image
பதிவுலகில் ஒரு கருத்து இருக்கிறது.பிரபலமாக இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு வாசகர்கள் குறைந்து விடுகிறார்களா?சிலர் எழுதாமல் நிறுத்தி விடுகிறார்கள்.மதுரை குணா ஒருமுறை சொன்னார்.திருத்தணி போய் வந்தேன்,வீட்டுக்கு வந்தவுடன் அந்த அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை.ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.அப்புறம் கிழித்துப் போட்டுவிட்டேன்.                             எளிதாகவே இருக்கிறது.சொல்வதற்கு ஏதாவது இருக்கும்போது எழுதாமல் இருக்க முடியாது.உள்ளே இருப்பதை வெளியில் கொட்டித்தான் ஆக வேண்டும்.ஏதோ ஒரு ஊடகம்.அது வலைப்பதிவாக இருக்கலாம்,பேப்பரில் இருக்கலாம்.பேஸ்புக்கிலும் இருக்கலாம்.மனிதன் வெளியே கொட்டுவதற்கு வசதியாக இருப்பதால்தான் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது.                             சில காலம் எழுதாமல் போய...

ஆணின் மணவாழ்வை குறி வைத்த பெண்.

Image
                               நகரின் பிரபலமான பகுதியில் நல்ல தொழில்.ஒரே பையன்.கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தான்.கௌரவமான குடும்பம் என்று சொல்வார்களே அப்படி! கல்யாண வயது ஆகிவிட்ட்து என்று அப்போதுதான் அவர்களுடைய பெற்றோருக்கு தெரிய வந்த்து.அதே தெருவில் இருக்கும் உறவுப் பெண் ஒருவர் வந்து பேசினார். ” அந்தப் பெண்ணை உங்கள் பையனுக்கு செய்து கொள்ளுங்கள்,இத்தனை பவுன் போடுவதாக சொல்கிறார்கள் ’’                               எடுத்த எடுப்பிலேயே அந்த வரனை நிராகரித்துவிட்டார்கள்.காதலுடன் ஓடிப்போனவரை பிரித்து வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.அவனுடைய பெற்றோர்கள் போட்ட சத்த்த்தில் உறவுப்பெண் ஆத்திரத்தோடு கிளம்பிப் போனதோடு சரி! அப்புறம் பேச்சு வார்த்தையில்லை.இவனுக்கு பெண் தேட ஆரம்பித்தார்கள்.   ...