Posts

Showing posts from October, 2011

இணைய மையங்கள் அடல்ட்ஸ் ஒன்லியா?

Image
 இணைய மையங்களை காவல்துறையினர் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக விரோதிகள் பிரௌசிங் சென்டர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.நிறைய கட்டுப்பாடுகள்.வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பதிலிருந்து கேமரா வைப்பது வரை .பலர் முணுமுணுத்துக்  கொண்டிருக்கிறார்கள். இணைய மையங்கள் கால் வைக்கவே கூசுகிறது என்று நண்பர் புலம்பினார்.ஒரு வேளை சுத்தமில்லாமல் பேச்சுலர் ரூம் போல இருந்திருக்கும் என்று நினைத்தேன்.(ஒரு நாளைக்கு மூன்று முறை அறையை சுத்தம் செய்து அற்புதமாக சமைக்கும்பிரம்மச்சாரிகளையும்  நான் பார்த்திருக்கிறேன்.) காலையிலேயே புலம்புகிறானே என்று நினைத்துக் கொண்டு என்னே ஏதென்று விசாரித்தேன். மாமியார் வீட்டுக்கு போன இடத்தில் ஒரு பிரௌசிங் சென்டருக்கு போயிருக்கிறான்.அவனுடைய எட்டு வயது மகளும் கூடவே !என்னுடைய பதிவை திறந்து படிக்க ஆரம்பிக்க,அவருடைய மகள் ஆபாச இணைய தளங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.நண்பர் ஆடிப் போய்விட்டார். அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தால் சுவர்களில்,கேபினில் எழுதி வைத்திருப்பதை காட்டியிருக்கிறார்.ஆபாச இணையதள ரசிகர்...

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

Image
நமக்கு பழக்கமில்லாத எதையாவது செய்யவேண்டிய நிலை வந்தால் பலருக்கு படபடக்கும்.சில நேரங்களில் நான்கு பேர் முன்னால் பேசுவது கூட நெஞ்சு அடித்துக்கொள்ளும்.நேர்முகத்தேர்வுக்கு செல்வது போன்றவற்றைக்கூட உதாரணமாக சொல்ல்லாம்.மனதில் இறுக்கம் ஏற்பட்டு உடலிலும் விளைவுகள் தெரியும்.சிலருக்கு கை நடுங்கும்.மனசு போராடும்.குறிப்பிட்ட நேரத்தில் சில சரியாகப்போய்விடும்.ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டும் என்றால் அறைகுறையாக பேசிவிட்ட கொஞ்ச நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும்.                                  தொடர்ந்து சில காலங்கள் மனமும் உடலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் உண்டு.சில விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய பழகிவிடும்.நம்மை மிரட்டும் விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் மனம் அமைதியாகிவிடும்.கிராமத்தில் படித்த பலருக்கு ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய பிரச்சினை.அது ஒரு பெரிய அறிவாளியை காட்டுவது போல நினைத்துக் கொள்பவர்கள் உண்டு.      ...

பீர் தீபாவளியா? குவார்ட்டர் தீபாவளியா?

Image
                          குடிக்கத் துவங்கும் பலர் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில்தான் ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.(நிறைஞ்ச அமாவாசை என்பதனாலா?).அதுவும் பீரில் ஆரம்பித்து அடுத்த தீபாவளிக்குள் குவார்ட்டருக்கு வந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளிக்கு மது விற்பனை விண்ணைத்தொடுகிறது.எப்போதாவது குடிப்பவர்களும் இந்த மாதிரி நாட்களை தவரவிடுவதில்லை.ஏன் என்பதற்கான அலசல் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவிலிருந்து...                            தீபாவளி மட்டுமல்ல , பொங்கல் , திருவிழாக்கள் , திருமணம் , சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம் ? பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி ? கெட்ட பழக்கம் ஏ...

தும்மல் வந்தால் ஆயுசு நூறா?

Image
மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும்.அலர்ஜி காரணமாகவும்,வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும்,சைனஸ் பிரச்சினையாலும் தும்மல் வரும்.இந்த சமயங்களில் ஹிஸ்டமின் தூண்டப்ப்ட்டு மூளைக்கு தகவல் போய் அச் என்று சத்தம்.அதுவும் ஒவ்வொருவருக்கும் தனி சத்தம் இருப்பது போல் தோன்றுகிறது.அப்புறம் ஏதோ இழந்த்தை திரும்ப பெற்றது போல ஒரு உணர்வு.                                 நான் சிறுவனாக இருந்தபோது வெடித்த பட்டாசுகளைவிட இப்போதைய சிறுவர்கள் வெடிப்பது குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு சரத்தை பிரித்து சட்டை பாக்கெட்டில்,டிராயர் பாக்கெட்டில் நிரப்பிக்கொள்வோம்.ஊதுபத்தியை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு வெடியாக வெடித்து,ஆஹா ஆனந்தம்! என் நண்பனுக்கு சட்டை பாக்கெட் இருந்த வெடிகள் வெடிக்க ஆரம்பித்து காயம் ஆன சம்பவமும் உண்டு.கரும்புகை கிளம்பும்.               ...

தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவீங்களா?

Image
                                                                       அலர்ஜி முதல் ஆண்மைக்குறைவு வரை இனிப்புகள் நோயைக் கொண்டுவரலாம் என்பதே நிஜம்.  தீபாவளிக்கு பட்டாசுக்கு அடுத்து இனிப்புகள்தான் நினைவுக்கு வரும்.பட்டாசுகளின் விலையேற்றத்தால் இப்போது வெடிச்சத்தம் குறைவாகத்தான் இருக்கிறது.நகரத்தில் அல்ல! கிராமத்தில் சொல்கிறேன். நகரத்தில் மட்டுமே அதிகம் முக்கியத்துவம் பெற்ற இனிப்புகள் இப்போது கிராமத்திலும் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.விதம்விதமான இனிப்புகள்.கிராமத்து ஆட்களுக்கு அதன் பெயரைக் கூட அவ்வளவாக தெரியாது.தீபாவளி சீட்டுகள்தான் இதை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நகையுடன்,பட்டாசு பெட்டியும்,இனிப்பும் காரமும் சேர்த்துக...

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.

Image
                              தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந்தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மருத்துவர்கள்.சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு.சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.இதெல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.தாய்ப்பாலுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனையில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம்.                              பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும்,அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்கவேண்டும்.அடுத்து குழந்த...

வயிற்றில் பொங்கும் அமிலத்தின் அவஸ்தை

Image
வழியில் கிடைத்த எதாவதொன்றை விழுங்கி விட்டு பறக்கும் இன்றைய அவசர யுகத்தில் இழந்தவற்றுள் முக்கியமானது நமது உடல்நலம்.ஆம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.உணவுக் குழாய் சுவர்களை அரிக்கும் ஒரு உடல் நலக்கோளாறு நெஞ்செரிச்சல்.உணவு செல்லும் பாதையில் அமிலம் பொங்கும் அவஸ்தை.                                                                              வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் உணவுப்பாதையில் நெஞ்சு வரை பயணித்து இதயத்தில் பிரச்சனையா என்று கவலைப்படும் அளவுக்கு வாட்டும்.உண்மையில் நெஞ்சுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.அப்பகுதியில் எரிச்சலும்,அரிக்கும் உணர்வு ஏற்படும் அவ்வளவே. வழக்கமாக ச...

நிரூபனின் இன்னொரு பக்கம்.

Image
                              பதிவை வெளியிட்டாரோ இல்லையோ மளமளவென்று ஓட்டு விழுகிறது.கருத்துரைகளும் அப்படியே!தொடர்ந்து மகுடம் பெற்று வியக்க வைத்தவர்.பேஸ்புக்கில் அதிக அளவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.எப்படி இவருக்கு மட்டும் முடிகிறது? அவர் நிறைய பேருக்கு ஓட்டு போடுகிறார்.அதனாலா? ஆனால் அது மட்டும் உண்மையல்ல                             குழு அமைத்து ஓட்டு போடுவது பற்றிய அவரது பதிவுதான் நான் முதன்முதலில் படித்த பதிவு.இப்போது அவர் மீதே அந்த குற்றச்சாட்டு விழுந்த்து வேடிக்கையான விஷயம்.பிரௌசிங் செண்டரில் இருந்து படித்த்தால் கருத்துரை இடவில்லை.பின் தொடரவும் இல்லை.                           ...