Posts

Showing posts from September, 2011

காதலியை,உறவுகளை புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கா?

Image
காதலர்கள் , தம்பதிகள் , நண்பர்கள் , உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.                 காதலர்கள் , தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார். மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும் , அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே , அவரை உற்றுநோக்கவேண்டும் , சொல்வதை கவனமாக கேட்கவேண்டும் , அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம். உண்மையை உணர்த்தும் உடல்மொழி ! படிப்பெதுவும் தேவைய...

ஓட்டு ,கமெண்டு யாருப்பா இதெல்லாம் கண்டு புடிச்சது?

Image
  நாம் ஒன்று நினைத்தால் அது (ஒரு புளோவில் வந்து விட்டது.யாரும் புகார் அனுப்பாதீங்கப்பா!) ஒன்று நடந்து விடுகிறது. கூகுள் பிளாக்கர்களுக்கு பிரபலமாவதற்கு சில வழிகளை சொல்லித் தந்திருக்கிறது.நிறைய பேருக்கு கமென்ட் போடுங்கள் என்பதும் அதில் ஒன்று.இதை கடைப் பிடித்தவர்கள் வெற்றிகரமாக உலா வருவது நமக்கு தெரியும்.என்னுடைய கதை பதிவரிந்தது,அதாம்பா பதிவுலகம்.பிளாக்கர் சொல்லாமல் விட்ட ஒன்று ஓட்டு போடுவது! ஒருவர் மெயில் மூலம் என்னுடைய போன் நம்பர் கேட்டார்.அனுப்பி வைத்தேன்."வணக்கம் சார் என் பெயர் ராஜன்.நான் பிளாக் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன்." ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமாக இருந்தது.எதற்கு இந்த வேண்டாத வேலை உங்களுக்கு என்று கேட்கலாம்.ஆனால் அப்போ நீ மட்டும் எதற்காக ? என்று நினைத்து விடுவாரோ என்று பயம்.பிரௌசிங் செண்டர் பணியாளிடம் போனிலேயே சொல்ல அவரும் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டார். சில புத்தகங்களை எழுதியிருப்பதாக சொன்னார்.பழனிபாபா,குந்தவை பற்றிய இரண்டு புத்தகம் கொடுத்திருக்கிறார்.இன்னும் படிக்கவில்லை.அவருக்கு முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும் ...

ஃபிகர் என்றவரை செருப்பால் அடித்த இளம்பெண்.

Image
அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி இது.ஒரு பெண் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இருக்கலாம்.ஒருவரை ஆக்ரோஷமாக செருப்பால் விளாசியதை கண்டு கூட்டம்கூடி விட்ட்து.பெண்ணின் உறவினர்கள் கூடி விட்டார்கள்.பேருந்தில் இடிப்பதிலிருந்து ஆண்களால் ஏற்பட்ட அத்தனை சங்கடங்களையும் சொல்லிக்காட்டி அழுது கொண்டிருந்தார்.                                 பக்கத்தில் இருந்த போலீஸ் வந்து விசாரித்த போது “ ஃபிகர் நல்லா இருக்குன்னு சொன்னேன் சார் ” அவ்வளவுதான் என்றான் அவன்.அவனுடைய நண்பனும் ஆமாம் சார் அது மட்டும்தான் சொன்னான் என்றான். ’’ போய்  உன்னுடைய அம்மா,தங்கை என்று மீண்டும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார் அப்பெண்.இருவரையும் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு தெரியாது.                           ...

ஏலகிரியில் கல்லூரி இளசுகளின் குத்தாட்டம்.

Image
ஏலகிரி வேலூர் மாவட்ட்த்தில் உள்ள சுற்றுலாத்தளம்.ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பிலிருந்து அருகாமையில் இருக்கிறது.வேலூரிலிருந்து பேருந்துகளும் உண்டு.திருப்பத்தூரிலிருந்தும் செல்ல்லாம்.இரைச்சல் இல்லாத அமைதியும்,இயற்கைக் காற்றும் வரப்பிரசாதம்.முன்னாள் முதல்வரும்,பா.ம.க தலைவரும் இந்த வருட்த்தில் ஓய்வெடுக்க வந்து பிரபலப் படுத்தினார்கள்.                                   கோடைகாலம்தான் சீஸன்.அப்போது தங்குவதற்கு இடம் கிடைப்பதே கஷ்டம்.சனி ஞாயிறுகளில் கொஞ்சம் கூட்டம் இருக்கும்.பெரிய ஹோட்டல்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.சில ஹோட்டல் முதலாளிகள் பணம் செய்ய ஏதேதோ செய்ய ஆரம்பித்திருப்பது நேற்று வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.                                   இளமையைப் பற்றித்தான் ...