Posts

Showing posts from August, 2011

கொத்தமல்லி உயிரைக் காப்பாற்றும்.

Image
                                இரவு பன்னிரண்டு மணி இருக்கும்.அத்தை வீட்டில் இருக்கிறேன்(தந்தைக்கு மூத்தவர்).வயிற்றை புரட்டியது போல உணர்வு.பேதியாகி விட்ட்து.கொஞ்ச நேரத்தில் வாந்தி.சிறுவயதில் எங்கெங்கோ விற்பதை வாங்கித்தின்பதுதான்.அடிக்கடி பாத்ரூம் போவது தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்ட்து.                                தூக்கத்தில் இருந்து அத்தை எழுந்துவிட்டார்.சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.கையில் ஒரு தம்ளரை கொடுத்து குடிக்கச்சொன்னார்.கொத்தமல்லி வாசனை தூக்கலாக இருந்த்து.பிறகு அவரே விளக்கினார்.அந்த பானத்தில் கொஞ்சம் சுக்கும்,பனை வெல்லமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.                    ...

கண்களில் தெரியும் உணர்ச்சிகள்

Image
                              யாரைப்பார்த்தாலும் கண்களைக் கவனிப்பது எனக்கு பழகிப்போய் விட்ட்து.கடவுளைப் பார்த்தால் கூடவா? ஆமாம்.இணையத்தில் சாமி பட்த்தை பார்த்தால் கூட!சகோதரி ராஜராஜேஸ்வரி வலைப்பதிவில் விநாயகரைப்பார்த்தேன் .எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.கடவுள் கண்ணை அசைத்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார்.வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.                               கும்பாபிஷேகம் செய்யும்போது கண் திறப்பது என்பார்கள்.புதியதாக சிலைஅமைத்தாலும் கண் திறப்பதே இறுதி செயல்.கண்களைக்கொண்டுதானே அருளாசி வழங்க முடியும்?கண்களைக் கவனிக்க பழகி விட்டால் உடல் மொழியில்( body language) ஒருவர் தேறிவிட்டார் என்று அர்த்தம்.எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தை கூட நம்மிடம் பேசத்தேவையில்லை.   ...

பணியிடங்களில் பாலியல் தொல்லைகள்

Image
சமீபத்தில் தமிழக அரசு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தி ன் வழிகாட்டுதல்படி அரசு,பொதுத்துறை ,தனியார் துறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை அமைப்புகள் அமைக்கப்படவேண்டும்.பணியாளர் தரும் புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயர் அதிகாரி என்றால் நேரடியாக அரசுக்கு அனுப்பவேண்டும்.எனது ஆரம்ப கால பதிவொன்றில் இருந்து சில பத்திகளை  தருகிறேன். பெண்கள் பணிபுரியும் இடங்களில் உடன் இருப்பவர்களால்,அலுவலர்களால் தரப்படும் பாலியல் தொல்லைகள் அமிலம் போல அவர்களது உள்ளத்தை சிதைக்கிறது.இரண்டு நிகழ்வுகளையும் அதன் எதிர்வினையையும் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி.அந்நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தான் .அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது முறையற்ற பாலியல் வேட்கையை வெளிப்படுத்தியவாறு இருந்தான்.அந்தப்பெண் திருமணமானவர்.முடியாமல் போகவேஅந்த பெண்ணைப்பற்றி தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான் ."ஒழுங்காக பணிபுரிவதில்லை.நேரத்துக்கு வேலையில்இருப்பதில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் கள்ளக்காதலில் ...

பெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி?

Image
                              உணவகம் ஒன்றில் நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். தங்கையின் தோழியுடன் நன்றாகப் பேசுவது வழக்கம்.சில நேரங்களில் கேட்ட உதவியும் செய்வதுண்டு.போன் செய்து சந்தேகம் கேட்டாலும் இயல்பாக பேசுவார்.அடிக்கடி வீட்டுக்கு வருவதுண்டு என்பதால் காமெடியாக பேசிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம்.                               திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கப்போனார்கள்.வீட்டுக்கு வரும் வழியில் தங்கையின் இன்னொரு தோழியைப்பார்த்து எதேச்சையாக பேசப்போக அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விட்டார்.நன்கு பழகிய தங்கையின் தோழிக்கு போன் செய்தால் பேசவில்லை.தங்கையை கேட்டாலும் அவரும் ஆச்சர்யமாக கேட்கிறார்.பின்னர் தெரிய வந்த விஷயம் தங்கையி...