Posts

Showing posts from July, 2011

நல்லது மட்டுமே நடக்கவேண்டுமானால் என்ன வழி?

Image
நமக்கு நல்லது மட்டுமே நடக்கவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம்.இயற்கையாக நிகழும் சில விஷயங்களை தடுக்க முடியாது.சில நேரங்களில் நாமே நமது முன்னேற்றத்திற்கு எதிரியாய் அமைந்து விடுவது பற்றியது இந்தப் பதிவு.நமது பழக்க வழக்கங்கள்,உறவுகளில் கோணல்கள் என்று பல இருந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் ஒருவரை அதிக அளவு பாதித்து முடக்கி விடுகின்றன.                                   நமது எண்ணங்கள்தான் செயலாக மாறுகின்றன என்பது உங்களுக்கு தெரியும்.நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்றும் கெட்ட்து நினைத்தால் அப்படியே நடக்குமென்றும் சொல்லப்பட்டுவிட்ட்து.மனதின் ஆற்றல் என்பது அளவிட முடியாத ஒன்று.வழக்கமாக நேர்மறையாகத்தான் எண்ண வேண்டும்.ஆனால் எதிர்மறை எண்ணங்கள் சிலருக்கு தவிர்க்க முடியாமல் இருக்கிறது.                           ...

இந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமண ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு.

Image
                               இந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமணம் டெல்லிக்கு அருகில் ஹரியானாவில் நடந்த்து. 25 வயதானசவீதா என்ற பல்கலைக்கழக மாணவியும்,20 வயதுள்ளவீணா என்ற அவரதுஇணையும் திருமணம் செய்து கொண்டார்கள் தம்பதிகள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.அவர்களுடைய உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதால்,தம்பதிகள் தங்கியுள்ள வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருக்கிறது..                               சவீதா ஏற்கனவே வேறொரு ஆணுடன் திருமணமானவர்.மணமாகி 5 மாதம் கழித்து கணவரை விட்டு வெளியே வந்துவிட்டார்.ஆணுடனான குடும்ப வாழ்க்கையில் அவரால் பொருந்திப் போகமுடியவில்லை.தன்னை கட்டாயப்படுத்தி வீட்டில் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட்தாகவும்,வீணா என்பவருடன் லெஸ்பியன் உறவு இருப்பதாகவும் நீதிமன்...

காட்டிக்கொடுக்கும் செல்போன்கள்.

Image
                                   செல்போன் நிறுவன்ங்கள் ஒரு கட்ட்த்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.ஆரம்பத்தில் இன்கமிங் சேவைக்கும் கட்டணம் வசூலித்த கம்பெனிகள்,எங்கள் சிம்கார்டை வாங்கினால் மட்டும் போதும்.எல்லாம் இலவசம் என்றார்கள்.டாடா டொகொமோ வியாபார தந்திரமாக ஒரு பைசா என்றவுடன் மற்ற நிறுவன்ங்களும் வேறு வழியில்லாமல் இறங்கி வந்தன.அதே நம்பருக்கு வேறு நிறுவனம் மாறிக்கொள்ளலாம் என்று வந்து மாற விரும்பியவர்கள் மாறியும் விட்டார்கள்.                                   இனி நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று முடிவாகி விட்ட்து.செல்போன் இல்லாமல் இனி வாழ்க்கையும் இல்லை.போட்டி எல்லாம் முடிந்து ஓரளவு நிலை பெற்றாகிவிட்ட்து.அப்புறம் இந்த மக்கள் அடிமைகள்தானே! விலை ஏற்றினால் சிம்...

மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார்!

Image
பல்வேறு பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய்களுக்கு தரப்படுவது ஆண்டிபயாடிக் மாத்திரைகள்.சாதாரண சளிக்கும் கூட அடுத்த கட்ட தொற்றை தவிர்க்க இம்மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.நம்மில் ஒவ்வொருவரும் இந்த மாத்திரைகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுங்காமல் இருந்த்தில்லை.தலைப்பில் உஷார் என்று இருப்பது நாம் உஷாராக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.அரசாங்கமும் செயலில் இறங்கிவிட்ட்து.                                     போதுமான அளவு நமக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடாமல் போவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கிட்ட்த்தட்ட கத்தி மாதிரி.சரியாக பயன்படுத்தாவிட்டால் நம்மையும் பதம் பார்த்துவிடும்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இத்தனை நாட்கள்,அளவு என்று கணக்கிருக்கிறது.முழுமையான அளவு எடுக்காமல் போனால் குறிப்பிட்ட மாத்திரைகளுக்கு கிருமிகள் பழகிவிடுகின்றன.       ...

அதிக தண்ணீர் குடிப்பது சரியா?

Image
உயிரின்ங்கள் உயிர்வாழ அத்தியாவசியமான ஒன்று நீர்.உடலியக்கம் சீராக நடைபெற போதுமான அளவு நீர் குடிப்பது அவசியம்.கொழுப்பு நீங்கலாக உடலில் எழுபது சதவீதம் தண்ணீர்தான்.வைட்டமின்களில் பி,சி ஆகியவை தண்ணீரில் கறையும்.இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு மஞ்சளாக சிறுநீர் வெளியேறுவதை பார்க்கலாம்.எத்தனை கிராம் வைட்டமின் எடுத்துக்கொண்டாலும் உடல் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது.                                    எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம் என்று பொதுவாக சொல்வார்கள்.ஆனால் அவரவர் வாழ்க்கை முறைக்கு தக்கவாறு அளவு நிர்ணயிக்கப்படவேண்டும்.வெயிலில் கடுமையாக உழைப்பவருக்கும்,குளிர் சாதன அறையில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரே அளவு பொருந்தாது.மாத்திரைகள் உட்கொண்ட நேரம் தவிர சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் நீர் குறைவாக குடித்திருக்கிறீர்கள் என்று பொருள்.          ...

காபி குடிப்பீங்களா?

Image
                                 கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அது.பேராசிரியர் ஒருவரது வீட்டில் கூடினார்கள்.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தார்கள்.தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.கிட்ட்த்தட்ட எல்லோரும் முணுமுணுத்தார்கள்.அவர்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்கள்.வாழ்க்கை எளிதாக இல்லை.                                   வேலை குடும்பம் என்று மனதில் ஏற்படும் இறுக்கத்தையும்,வலியையும் குறிப்பிட்டார்கள்.டென்ஷன்,டென்ஷன் என்று குரல் கொடுத்தார்கள்.கல்லூரி வாழ்க்கை போன்ற வசந்தகாலத்தை அனுபவிக்கவே முடியவில்லை.இன்றைய அவசர வாழ்வின் பரிமாணங்களை பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்த்து.பேராசிரியர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.   ...