கன்னிப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வாலிப பேய்.
வயசுப் பெண் என்றால் தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.திருத்தமாக உடை உடுத்தி,யாராவது பார்த்தால் மனைவியாகவோ,மருமகளாகவோ கொள்ள மனம் வரவேண்டும்.அந்த பெண் அப்படியில்லை.சமீப காலமாக சரியாக சாப்பிடுவதில்லை.தூங்குவதில்லை.எந்த வேலை சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை. அப் பெண்ணின் தாய்க்கு பாட்டி யோசனை கூறினாள். ’’ போய் அந்த சாமியிடம் குறி கேட்டுவிட்டு வா ”. அம்மா குறி கேட்டு விட்டு வந்து சொன்னது: ’’ அவளுக்கு பேய் பிடித்திருக்கிறதாம் ” இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தார்கள்.பேய் ஓட்டுபவனை அழைத்து வர வேண்டும்.அண்ணனுக்கு தெரியும். ...