Posts

Showing posts from November, 2010

நந்தலாலா -அலுப்பூட்டும் கவிதை

மிஷ்கின் பாத்திரத்தைப்போல நான் நேரில் பார்த்திருக்கிறேன்.சில நேரங்களில் தெளிவாக இருப்பதும் சில நேரங்களில் மூர்க்கமாக ,அமைதியாக,கோபமாக என்று விதம்விதமான மன நோயாளிகளின் குணங்கள்.யாரையாவது பார்த்தால் மிகவும் அடங்கி அன்பு பொங்க பார்க்கும் மனக்குறைபாடு உள்ளவர்களை நேரில் சந்தித்து வியப்பில் ஆழ்ந்ததுண்டு."அன்பு மட்டும் அனாதையாக இல்லை".அன்பு கொண்டவரை மன நலம் பாதித்தவர்கள் மட்டுமல்ல ,பிறந்த குழந்தைக்கும் அடையாளம் தெரியும்.யாரையாவது கூர்ந்து கவனியுங்கள் .புரியும்.படத்தில் காட்டப்படும் மன நல விடுதியைப்போலத்தான் இப்போது அத்தகைய விடுதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.அமைதியாக்கும் நல்ல மருந்துகள் இருக்கின்றன. பயணம் செய்யும் கதை என்றால் உலகத்தில் இருக்கும் எல்லா வண்டியையும் காட்டித்தான் ஆகவேண்டுமா?நடைபயணம்,சைக்கிள், டிராக்டர்,லாரி,கார்,பஸ்,டூ வீலர் என எல்லாவற்றிலும் பயணிக்க வேண்டுமா?ஒவ்வொரு வண்டியையும் காட்டுவதற்கும்,அதில் பயணம் செய்வதற்கும் யாரையாவது-அவர்கள் சாதாரண மனிதர்கள்-படைத்தது போல அமைந்து விட்டது.கார் பயணத்தில் தொல்லை தருபவர்கள்...

ஐயோ! செல்போன் கம்பெனிகள்!

பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவது தேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது. செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர் இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவே பணம் பிடித்துக்கொள்வார்கள். எனது நண்பன் ஒருவன் பிரபல பன்னாட்டு நிறுவனமொன்றின் இணைப்பை வாங்கினான்.பேசிய...

இனிய உறவுகளே வாழ்க்கையின் வெற்றி!

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இனிய,இதமான உறவுகளை அமைத்துக்கொண்டவர்களே! கணவன்,மனைவி,நண்பர்கள்,பணியாளர்கள்,அண்டைவீட்டார்,பெற்றோர்,உடன்பிறந்தவர்கள் என சிக்கலில்லாத உறவுகளை கைவரப்பெற்றவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று போற்றப்படும் நிலையை பெற்றவர்கள்.சாதனைகள்,தொழில் வெற்றி,புகழ் மாலை போன்றவற்றை உறவுகள்தான் தீர்மானித்திருக்கின்றன. வெற்றி பெற்ற தனிமனிதன் அவனது திறமைகளால் தானே உயர்ந்திருப்பான்?ஆம். அவனது திறமை நல்ல உறவுகளை உருவாக்கியதில் இருக்கிறது.உறவுகளை தனது வெற்றிக்கு ,சாதனைக்கு பயன்படுத்திக்கொண்டதில் இருக்கிறது.தூக்கிவிட ஆளில்லாமல் யாரும் மேலேபோக முடியாது.தாங்கிப்பிடிக்காமல்நிலைத்து நிற்கவும் முடியாது.பலர் பலத்தில்தான் ஒருவர் உயரே நிற்கமுடியும். நல்ல உறவுகளுக்கு ஒருவர் அதிக சுயநலம் உள்ளவராக இருக்ககூடாது.சுயநலம் இருப்பவன் தனியாகத்தான் இயங்கமுடியும்.உங்கள் உடனிருப்பவர்கள் சந்தோஷமாக இல்லாதபோது நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?அப்படி இருந்தால்,அது ஒரு மன நோய்.உணர்வுபூர்வமாக மற்றவர்...

கள்ளக்காதல் வெளியே வருவது எப்படி?

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள்.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.உறவுகளிலும்,குடும் பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில் லை? சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபி டித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகி ன்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை. கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமா னங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உத...

குழந்தையை பலி கேட்கும் சமூகம்

சேவை மனப்பான்மை மிக்க மாவட்ட ஆட்சியர் அவர்.பள்ளிக்கு செல்லும் வயதில் பணிக்கு சென்று கொண்டிருக்கும் குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையத்திற்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார்.குடியரசு தினம் என்று நினைவு.கிராம சபா கூட்டங்களின் முக்கிய நோக்கமாக பள்ளியில் இருந்து இடை நின்ற குழந்தைகள் பற்றியதாக இருந்தது.அந்த மாவட்டத்தில் அதிகம் படிப்பை விட்டுவிட்டு போன குழந்தைகள் உள்ள கிராமம் தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கூடியிருந்தார்கள்.அனைவரிடமும் பள்ளியிலிருந்து நின்றுபோன குழந்தைகளின் பட்டியல் இருந்தது.மக்களை திரட்டுவதில் துறைவாரியாக உழைத்தார்கள்.குழந்தைகளின் பெற்றோர்களை வீடுவீடாக சென்று அழைத்துக்கொண்டிருந்தார்கள்.பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது.முதல் ஏழு பேர் வரை ஒருவரும் வரவில்லை.அடுத்த பெயர் படிக்கப்பட்டவுடன் சுற்றியிருந்தவர்கள் கை காட்டினார்கள்.ஒரு பெண்,சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும்,ஆட்சியர் முன்னால் தரையில் அமர்ந்தார். அவரது குழந...

கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவனுடன் ஒரு சந்திப்பு

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறை...

குருப்பெயர்ச்சி முக்கியமானதா?

ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி வந்துகொண்டே இருக்கிறது.விதம்விதமாக பலன் சொல்லும் புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.இப்போதும் குரு பெயர்ச்சியாகிறார்.மீனத்திலிருந்து வக்ரகதியாக கும்பத்துக்கு வந்த குரு பகவான் மீண்டும் மீனத்திற்கு செல்கிறார்.அங்கே மே மாதம் முதல் வாரம் வரை இருப்பார்.கடந்த மே மாதத்திலிருந்தே மீனத்தில்தான் இருந்தார்.இப்போது மீண்டும் முந்தைய இடத்துக்கே செல்லும்போது பலன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மையா? சுபர்களில் வலிமையான குரு நவகிரகங்களில் வலிமையையும்,சுபபலன்களை தருவதில் பேராற்றலும் பெற்றவர் குரு.புகழுடன் பெருமைப்படத்தக்க வாழ்வு குருவின் பலமின்றி அமையாது.அவர் இருக்கும் ஸ்தானமும் பார்வைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.தனது சொந்த வீட்டில் இருக்கும்போது அவருக்கு வலிமை அதிகமாவதோடு பலன்களும் வலிமையாகவே இருக்கும்.ஆனால் குரு மட்டுமின்றி அனைத்து கிரகங்களும் தங்களது பணியை செய்துகொண்டுதான் இருக்கும்.செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் ஆகியோர் இருக்குமிடத்தின் பலன்களுக்கு ஏற்றவாறு சுபபலன்கள் கூடவோ கு...