Posts

Showing posts from October, 2010

தீபாவளிக்கு மது விற்பனை அதிகரிப்பது ஏன்?

தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்? பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது. நண்பேண்டா -சொல்ல ஆளில்லை! எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்ப...

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது எப்படி?

காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார். மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரை உற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம். உண்மையை உணர்த்தும் உடல்மொழி ! படிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லா...

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய எனது பதிவை படித்துவிட்டு ஒருவர் கேட்டார்.ஆண்களுக்கு இவையெல்லாம் ஏற்படாதா?.விதி விலக்குகள் விதிகள் ஆகுமா என்று தெரியவில்லை.சில ஆண்களுக்கு பெண்கள் மீது தீராத ஆத்திரம் உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.எங்கேயாவது ஆணுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்தால் அவன் பாவம்.அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த சந்தோஷமும் இல்லை.பெண்களைப்போல அவனால் வெளியே சொல்லவும் முடியாது.அடேயப்பா என்று மேலும் கீழும் பார்ப்பார்கள். ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுத...

உங்களை உலுக்கும் பிரச்சினைகள் குறித்து .......

வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன.நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?மர மர பு சார்ந்த வழிகளில் ................. நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை. கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம் மத குருமார்களை சந்திக்கிறோம் :நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம். ஜோதிடர்களை சந்திக்கிறோம் :எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை...

நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமம்

காமம் அடிப்படை உணர்வு.உயிர்களின் இனப்பெருக்கத்திற்காக இயற்கையால் வழங்கப்பட்ட காமம் மனிதனின் பரிணாமத்தால் திசை மாறிவிட்டது.நோக்கத்தை தாண்டி தலைமை இன்பமாக (பிளேட்டோ),அங்கீகாரத்தின் முதல்படியாக,உறவுகளை நிர்ணயிப்பதாக,எல்லாமுமாக மாறிப்போனது.உள்ளத்தின் உயிராக உள்ள காமம் இன்று பெருங்குழப்பத்தையும்,கொலைகளையு ம்,தற்கொலைகளையும்,இன்னபிற சிக்கல்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.கட் டுப்பாடுகள் ஏற்பட்டகாலம் குறித்து விவாதங்கள் இருக்கின்றன.இன்னமும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தில் காமத்தில் கட்டுப்பாடுகள் இல்லை.வெளியே செருப்பு இருந்தால் கணவன்கூட உள்ளே நுழையக்கூடாது.பாலுறவின் மீது கொண்ட அளவற்ற மரியாதையே காரணம்.இப்போது பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வின் காரணமாக எல்லாமும் மாறிவிட்டது.காமத்தால் கடவுள்கள் உள்பட விதிவிலக்கின்றி அனைவரும் பாதிக்கப்பட்டார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. ஒரு கிராமத்தில் தொடர்ந்து சுமார் ஒருமாத காலத்திற்குள்ளாக ஆறு மரணங்களுக்கு மேல் நிகழ்ந்துவிட்டது.தற்கொலைகளும் உண்டு.அதில் நான்கு பேர் இளம்வயதினர்.காதல்,க...

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் உடன் இருப்பவர்களால்,அலுவலர்களால் தரப்படும் பாலியல் தொல்லைகள் அமிலம் போல அவர்களது உள்ளத்தை சிதைக்கிறது.இரண்டு நிகழ்வுகளையும் அதன் எதிர்வினையையும் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி.அந்நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தான் .அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது முறையற்ற பாலியல் வேட்கையை வெளிப்படுத்தியவாறு இருந்தான்.அந்தப்பெண் திருமணமானவர்.முடியாமல் போகவேஅந்த பெண்ணைப்பற்றி தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான் ."ஒழுங்காக பணிபுரிவதில்லை.நேரத்துக்கு வேலையில்இருப்பதில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்." மத்திய அரசு திட்டமொன்றின் மேலாளராக சமூக சேவை வந்தவன் அவன்.திருமணமாகாத ஒரு பணியாளர் மீது வெறி கொண்டான்.அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவனிடம் பணிபுரியும் பணியாளன் ஒருவனும் சேர்ந்து அந்தப்பெண் உடன் பணிபுரியும் பணியாளருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்வதை செல்போன் கேமராவில் படம்பிடிக்ககளப்பணியாளர் ஒருவரை பணித்தார்கள...

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்

அக்டோபர்-15 கை கழுவும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது யாருக்கும் தெரியாதா என்ன? ஆம்.சோப்புடன் சரியாக கை கழுவப்பட்டால் 3.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது.இவ்வாறு உயிரிழக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை சுவாசம் தொடர்பான நோய்களாலும், வயிற்ருப்போக்காலும் பலியாகின்றன.குழந்தைகளை சுகாதாரமாக பாதுகாப்பது பெரும் சவாலாகவே இன்னமும் இருப்பது நம்மிடையே விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது.நுரையீரல்,குடல்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கள் முறையாக கை கழுவாததனால்உடலுக்குள் செல்கின்றன.குழந்தைகளிடையே நெருக்கத்தில் தொடர்ந்து மற்றவர்களிடம் பரவுகின்றன.ஆனால்,இது அவ்வளவு எளிதானதல்ல. பள்ளிகளில்,விளையாடுமிடங்களில்,பொது இடங்களில் கை கழுவுவதை கடைபிடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுமானால் -முயற்சி இருந்தால் முடியாதது என்ன இருக்கிறது.நம்முடைய மிகப்பெரிய பலவீனம் இது போன்ற நோக்கங்களுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளாதது.சிறு வயதில் திரும்பத்திரும்ப சிறுவர்களிடம் ஏற்படுத்தும் பழக்கம் நல்ல விளைவுகளை தரும் என்பது நமக்கு த...

பாகவதமும் பைபிளும்

ஸ்ரீமத் பாகவதத்தையும் பைபிளையும் சுமார் இரு வார காலத்திற்குள் படித்தேன்.ஒரு குழந்தையை போல பாகவதம் என் மனதை கவர்ந்தது.பைபிளின் மலைப்பிரசங்கம் திரும்ப திரும்ப என்னை படிக்கத்தூண்டியது.பின்னர் சத்திய சோதனை படிக்கநேரிட்டபோது மகாத்மாவுக்கும் மலைபிரசங்கம் ஈர்த்துவிட்டதை அறிந்து எனக்குள் உற்சாகம்.கிருஷ்ணனும்,இயேசுவும் ஒரு சூப்பர் பவராக அவர்களது இறுதிநிலை என்னை உருக்கியது.இயேசுவின் வியாகூலததுடனே என்ற இடத்தில் எனக்கு தொண்டையை அடைத்தது.கடைசியில் கடவுளுக்கும் ,தூதருக்கும் மரணம் விதிவிலக்கில்லை என்பது ஜீரணிக்க சிரமமாக இருந்தது.ஒரே மாதிரி மனநிலையில் சில நாட்கள் இருந்தேன். சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.இதிகாச...

நல்ல தூக்கம் இல்லையா?

இன்றுஅக்டோபர் 10 உலக மனநல நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.தூக்கமின்மை குறித்து ஒருவர் ஈமெயில் அனுப்பி கேட்டிருந்தார்.சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் போரிலோ,சதியாலோ தாக்கப்பட்டபின் மறைவிடத்தில் தாக்கப்பட்டவரை பார்க்கச்செல்வார்கள்.அவர் தூங்கிக்கொண்டிருப்பார்."நன்றாக தூங்குகிறார் அவருக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை".ஆம்.நல்ல தூக்கம் ஒருவருக்கு உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருப்பதை குறிக்கிறது.உடலும்,உள்ளமும் தன்னை புதுப்பித்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் அவசியம்.பொதுவாக எட்டு மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.தொடர்ந்து சிலநாட்கள் சரியாக (எட்டு மணி நேரம் )தூக்கம் இல்லைஎன்றால் எரிச்சல்,சிடுசிடுப்பு,கவனக்குறைவு போன்று ஏற்பட்டு அன்றாட வாழ்வில் உறவுகளிலும்,பணியிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை மன நோய்களின் முக்கிய அறிகுறியாககொள்ளலாம். தூக்கமின்மை ஏன்? அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்கள் கூட நல்ல உறக்கத்தை தடுக்கலாம்.புதியதொரு சூழ்நிலைக்கு தயாராகும்போது,உறவுகளில் ஏற்படும் தற்காலிக சிக்கல்கள் ,பயம்,கலக்கம்,கோபம் போன்ற எதிர் உணர்ச்சிகளுக்கு...

ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும்

சார்,"எனக்குஉடல் பலவீனமாக இருக்கிறது"-என்ன செய்யலாம்?என்று கேட்டான் அவன்.அவனுக்கு திருமணம் ஆகவில்லை.வயது இருபத்தேழு .ஐம்பது கிலோ மூட்டையை தூக்க சொன்னபோது சாதாரணமாக தூக்கிவிட்டான்! உண்மையில் அவனுடைய பிரச்சினை என்ன? பிறகு பேசப்பேச தெரிந்தது இதுதான் -ஆண்மைக்குறைவு,நரம்புத்தளர்ச்சி,உடல் பலஹினம்,விரைவில் விந்து வெளியேறுதல்,கரப்பழக்கம் என்ற விளம்பரம் அவனிடம் ஏற்படுத்திய தாக்கம் அது.பரம்பரை விடுதி வைத்தியர்களின் புகழ்பெற்ற விளம்பரம் அவை.இவ்விளம்பரங்களில் காணப்படும் அறிகுறிகள் மிக பொதுவானவை.பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் காணும் பழக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.இவற்றை பணமாக்குவதுதான் பரம்பரை வைத்தியர்களுக்கு எளிதாக இருக்கிறது. உண்மையில் ஆண்மைக்குறைவு என்பதுதான் என்ன? உடலுறவில் பிறப்புறுப்பு விரைப்புத்தன்மை இல்லாமல் போவதும்,விரைவில் விந்து வெளியாவதும்தான் பொதுவாக ஆண்மைக்குறைவு எனப்படுகிறது.இவற்றில் பெரும்பாலானவை மனம் தொடர்புடைய சிக்கல்கள்.தவறான விளம்பரங்கள் மேலும் சிக்கலாக்குகின்றன.நீரிழிவு,மது,அதிகமாக புகை பிடித்தல்,உட்சு...

அன்னையன்றி வேறு யார் ?

Image
மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும். அன்னையை போற்றுவோம் என்ற தலைப்பில் நான் சந்தித்த,பாதித்த பெண்களைப்பற்றிய குறிப்புகளை பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.அந்த பெண்கள் எளிமையான பெரும்பாலான பெண்களை பிரதிபலிக்கிறார்கள். நாம் சிந்திப்போம் தோழர்களே .... . சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ? அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறும...